Thursday, November 09, 2006

மருத்துவரே வேண்டாம் - *யோகா* செய்யுங்கள்

நமக்கு இந்தியாவிலிருந்து கிடைத்த பல பொக்கிஷங்களில் இந்த ஹத்த யோகா மிக முக்கியமானது. அறிவியல் பூர்வமாக நிருப்பிக்கப் பட்ட ஒரு சிறந்த மன மற்றும் உடல் நலம் பேணலில் முக்கிய பங்காற்றுகிறது இந்த ஹத்த யோகா.

இயற்கையாகவே வெளியிலிந்து ஒன்றும் உடம்பினுள் செலுத்தாமல் நம்மால் நமக்கு என்ன செய்து கொள்ள முடியும் என்றால், நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற இந்த ஹத்த யோகத்தின் மூலமாக அடையும் நன்மைதான்.

நான் வால்பாறையில் களப்பணி ஆற்றிக் கொண்டு இருக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஆழியார் அணைக்கு பக்கத்தில் பேருந்துகள் தேநீர் இடைவெளிக்காக நிறுத்துவார்கள். அப்பொழுது அங்கு ஒரு குண்டலினி சார்ந்த ஆஸ்ரம் இருப்பதை பார்பதுண்டு (மகரிஷி என்று நினைக்கிறேன்). அதனை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு, நமக்கும் அதுக்கும் வெகுதொலைவு என்று நினைத்துக் கொண்டிருந்தேன், பயத்துடன்.

அப்பொழுது ஒரு நண்பி ஒருவரால் எனக்கு யோகா சொல்லிக் கொடுக்கும் (வெள்ளைக் கார)மாஸ்டர் ஒருவரை அறிமுகப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. கோவையில் உள்ள சுவாமி சச்சிதானந்தா யோகா நிறுவனத்தில்.

இருப்பினும் எனக்கு கொஞ்சம் அச்சமிருந்தது, அதனைப் பற்றி அரசல் புரசலான கட்டுக் கதைகளை மட்டுமே கேட்டு வளர்ந்திருந்ததால் என்று நினனக்கிறேன். அதாவது, யோகாவெல்லாம் வாழ்வில் சாமியாராக போக எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான், அப்படி எண்ணமில்லாமல் சேர்ந்து செய்தாலும் நீயும் அப்படியாக ஆகிவிடுவாய் என்று. அது போன்ற பயமே அந்த காலக் கட்டத்தில் என்னை விலகியே இருக்க வைத்தது.

ஆனால், இங்கு நண்பர்களின் துணை கொண்டு இறங்குவதால், என்னதான் ஆகும் செய்து பார்த்து விடுவோமே என்று, காலை 5.30 லிருந்து 7 மணி வகுப்பில் சேர்ந்தேன். ஒரு இரண்டு மாதங்கள் ஹத்த யோகம் பயின்றேன். அதுதான் நான் வாழ்வில் செய்த ஒரே உருப்படியான காரியம் என்று தினமும் நினைத்து இன்று பெரிமிதம் கொள்கிறேன்.

அந்த நாட்களில் எனக்கு கிடைத்த அனுபவமும், யோகப் பயிற்சியும் பின்னாலில் கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு கிடைத்த ஒரு மரக் கட்டை துண்டு போல என்னை இந்த வாழ்வெனும் சமுத்திரத்தில் சிக்கி மூழ்கி போவதிலிருந்து காத்து வருகிறது என்றால் அது மிகையாகது. எந்தந்த வகையில் என்று சொல்கிறேன். வாருங்கள்.

ஆனால் ஒரு டிஸ்கி, நான் இங்கு பகிர்ந்து கொள்ளும் ஆசனங்களின் படமும் அதனை செய்வதால் உடலுக்கும் மனத்திற்கும் கிடைக்கும் பலன்களும் என்ன என்பதனைப் பற்றியதுதான். உங்களுக்கு இது பற்றிய ஒரு ப்ரக்ஞை கொடுப்பதற்கெனவே. எப்படி செய்வது என்பதனை முறைப்படி ஆசிரியர் கொண்டு கற்பது மிகவும் அவசியம். கற்றால், என்றென்றும் உடல் நலம் சீராக உங்கள் கையில்.

யோகா செய்து வருவதால் எதிலும் ஒரு நிதானம் வருகிறது. ஏனெனில் யோகா உடலிற்கும் மனத்திற்கும் தொம்புட்டி எதிலும் எப்பொழுதும் அளவோடு (Moderation) ஈடுபடும் படி நம்மை அறியாமலேயே மனத்திற்கு ஒரு ஸ்திர தன்மையினை வழங்கிவிடுகிறது அதன் பக்க விளைவாக. ஏன் உடலுக்கும் தான் (சாப்பிடுவதில் கூட).

இந்த ஜிம், விளையாட்டு மைதான உடற் பயிற்சிக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதனை கண்டறிய பலனை அனுபவித்துப் பார்த்தால்தான் விளங்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஆசனமும் நம் உடலினுள் உள்ள உள் உறுப்புகளின் வேலைகளை சரிவரச் செய்ய உதவி புரிகின்றன.

இந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரே இடத்தில் அமர்ந்து மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து ஒரு பத்திற்கும் மேற்பட்ட மணி நேரங்கள் வேலை செய்யும் படியான சூழ்நிலை. ஆதனால் இன்று போல் என்றும் இந்த யோகாவிற்கு தேவை வரலாற்றில் இருந்திருக்க முடியாது.

முதுகு தண்டுவடத்திற்கும் (Spinal Chord) யோகாவிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. தண்டுவடத்தின் மூலமாகவே எல்லா நரம்புகளும் பிண்ணப்பட்டுள்ளன, செய்திகளை உடலின் ஏனைய பாகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் இயங்குவதற்கும் இத் தண்டுவடம் உதவுகிறது.

இச் சூழ்நிலையில் தண்டுவட பகுதியை தினமும் முறுக்கி, அப்பகுதியிலும் மற்ற பகுதியிலும் இரத்த ஓட்டத்தையும், ஆக்ஸிஜனேற்றமும் செய்யும் பொழுது உடலும், மனமும் புத்துணர்வு பெற்று வார்த்தைகளில் அடங்கா பேரின்பத்தை உணர வழிவகை செய்கிறது.

எப்பொழுது ஒருவருக்கு வியாதி வருகிறது என்றால் ஒரு உடலுறுப்பில் உள்ள பகுதிகளில் போதுமான அளவிற்கு இரத்த ஓட்டமும், ஆக்ஸிஜனேற்றமும் தடையிறும் பொழுதுதான். அதனை இந்த யோக ஆசனங்களை கொண்டு, உள் உறுப்புகளை மசாஜ் செய்வது போல இழுத்தும், சுருக்கியும், அழுத்தியும் ஏன் அந்த உறுப்புகளின் மீது நமது எண்ணத்தை குவிப்பதின் மூலமாகவும் அதன் செயல்பாடுகளை துரிதப் படுத்துகிறொம். வியாதியும் பக்கத்தில் வராமல் இருக்கிறது.

இப்பொழுது விசயத்திற்குள் செல்வோம் வாருங்கள் நண்ப/நண்பிகளே.

I) Surya - Namaskar (Sun Salutation) - சூரியனுக்கு வணக்கம்

இந்த படத்தை நன்கு கவனித்து பார்த்தீர்களேயானால், உங்களுக்குத் தெரியும் உடலின் இலகுத் தன்மைக்கென நீட்டி, மடக்கி விளையாட்டு மைதானத்தில் செய்யப்படும் ஒரு warm up உடற்பயிற்சி போலவே தென்படும். அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதனைத் தாண்டியும் மிக்க பலனளிப்பது.

இருந்தாலும் நான் கற்றுக் கொள்ளும் பொழுது ஆசிரியர் கூறினார், இந்த நாளை எப்படி தொடங்க வேண்டும் என்பதனை இதனை செய்யும் வேகத்தைக் கொண்டு அறிதியிட்டுக் கொள்ளலாமென. உடல் சார்ந்த வேலை இன்று உண்டா - சற்று வேகமாக ஒவ்வொரு நிலையையும் மாற்றிச் செய்யுங்கள். அமைதியான மனத்தை ஈடுபடுத்தி சாந்தமாக இருக்க - மெதுவாக ரிதமிக்காக செய்யுங்கள்.

ஆனால், மற்ற ஆசனங்கள் செய்வதற்கு முன்பு, இதனைச் கண்டிப்பாக செய்தால் சேம்பேறித்தனம் நம்மை விட்டு விலகிவிடும். மற்ற ஆசனங்கள் செய்வதும் எளிது. சில நேரங்களில் நிறைய நேரம் இல்லை என்றால் ஒரு மூன்றிலிந்து ஐந்து முறை "சூரிய நமஸ்காரம்" செய்து விட்டு அன்றைய தினத்தை ஓட்டிவிட இது உதவும்.

II) Naga Asana - The Cobra Pose

இந்த படத்தில் காட்டியது போல, இந்த ஆசனம் செய்யப்படும் பொழுது முதுகொலும்பு முறுக்கப்படுகிறது, மணிக்கட்டுக்கு ஸ்திரத்தன்மையும், மார்பு தசைகளும் பயனடைந்து, புத்துணர்வு பெறுகிறது.

முறையாக செய்வதின் பொருட்டு இடம் விலகிப் போன "தண்டுவடத் தட்டு (displaced spinal disc)" திரும்பவும் இருந்த இடத்தில் கொண்டுவரும் சிகிச்சையில் பயனுட்டுவதாக தெரிகிறது.

இது போன்று தண்டுவடத்தை முன்னிறுத்தி செய்யப்படும் ஆசனங்கள் தட்டுக்களுக்கிடையே உள்ள ஸ்பாஞ்சிகளில் ஆயில் அடிப்பது போல அடித்து இலகுத்தன்மையை மெருகூட்டி கொள்ளலாம் [Flexibility enhancement].

III) Shalabha Asana - The Locust Pose

இந்த ஆசனத்தின் மூலமாக மேல், கீழ் இடுப்புத் தசைகளின் ஸ்திரத்தன்மையும், இலகுத் தன்மையும் ஈட்டப் படுகிறது.


அது மட்டுமன்றி பெறுகுடல், சிறுகுடல், வாயு பிரட்சினை, சிறு நீரக நீர்ப்பை (bladder) போன்றவைகளில் உள்ள பிரட்சினைகளை அண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறது. தண்டுவடமும் பயனடைகிறது என்பதனை சொல்லவும் வேண்டுமோ.

கால்கள் விரைத்து நீட்டப் பெறுவதால் அதுவும் ஸ்திரத் தன்மையடைகிறது.

IV) Dhanura Asana - The Bow Pose

மீண்டும் முதுகொலும்பிற்கு வலிமையையும், புத்துணர்வையும் ஊட்டும் ஒரு ஆசனம். இது இடுப்பு, கழுத்து வலி போன்றவைகள் வராமல் தடுக்க சிறந்த காப்பீடு.

வயிற்றுப் பகுதி நன்றாக இழுத்து விடப்படுவதால் அஜீரணக் கோளாரு நன்கு கவனித்துக் கொள்ளப்படுகிறது.

அந்த படத்தில் இருப்பதைப் போன்று கால்களை கையால் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஊஞ்சலைப் போன்று முன்னும் பின்னும் சென்று வந்தால், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள அனைத்து உள் உறுப்புகளும் மசாஜ் அடையப் பெறுவதால், மண்ணை திண்ணாலும் செரிச்சுப் போகுது எனக்கு.

பல காலங்கள் செய்து வந்தால் உடம்பின் மேல் பாதி நல்ல ஸ்திரத் தன்மை அடையப் பெறலாமாம்.

V) Sarvanga Asana - The Shoulder Stand

இதன் முக்கியப் பயன் கழுத்து (அங்கேதானே இருக்கு தைராய்டு, பாரா தைராய்டு), முதுகுத்தண்டு, மார்பு இவைகளுக்கு இலகுத்தன்மையினை வழங்குவதோடு, பின்னால் கூறப் போகும் சக்ரா மற்றும் தலை கீழாக நிற்கும் ஒரு ஆசனத்திற்கு கிடைக்கும் அத்துனை பயன்களும் இதற்குமுண்டு.


VI) Hala Asana - The Plow Pose

மேலே பேசப்பட்ட ஆசனம் செய்யும் பொழுதுதே இதனையும் செய்ய முடியும், என்ன கால்களை தலைக்கு நேராக கொண்டுவருவதற்கு முன்பாக பின்னால் கொண்டு சென்று தரையை படத்தில் உள்ளவாறு தொட்டு நிறுத்தி வைத்துவிட்டால் அவ்வளவுதான் இந்த ஏர் ஆசனம்.

இது கால்களுக்கு இலகுத் தன்மையை வழங்குகிறது. மூட்டுவலி, தைராய்டு, மார்பகப் பகுதி நன்கு அழுத்திவிடப்படுவதால் நுரையீரல், மற்றும் வயிறு, இடுப்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து நல்ல ஆக்ஸிஜனேற்றமும் அப்பகுதிகளில் நடை பெறுகிறது.

VII) Ugra Asana - The Noble Pose

இந்த வகை ஆசனத்தில் படத்தை கவனித்தால் தெரியும் உடம்பின் முன் பாதியை தாழ்த்தி கைகளை கொண்டு கால்களை தொட்டு ரிலாக்ஸ் செய்யும் பொழுது, முதுகொலும்பு மற்றும் பின் தசைகள் வளைக்கப் பட்டும், நீட்டப் பட்டும் இருப்பது.

அது மட்டுமல்லாமல் வயிறுப் பகுதி இறுக்கப்பட்டும், சுருக்கப்பட்டும் மீண்டும் பழைய நிலைக்கே திருப்பப்படுகிறது. அதனால் அப்பகுதிகளில் இரத்த ஓட்டம் அதீதப் படுத்தப்படுகிறது. இதுவே அப்பகுதிகளில் உள்ள தசைகளுக்கு ஒரு பொலிவை கொடுக்கிறது.

எல்லாவற்றுகும் மேலாக சீரணக் கோளாறு, மலச்சிக்கல் இந்த ஆசனம் செய்யும் பொருட்டு தவிர்க்கப் படுகிறது. கால்களுக்கு அசதியிலிருந்து ஒர் ஓய்வும் உண்டு.

VIII) Matsya Asana - The Fish Pose

இது மேலே பார்க்கப்பட்ட ஆசனத்தை தொடர்ந்து செய்வது நலம். மார்ப்புப் பகுதியை முன் தள்ளி விரியவைப்பதால், அதிகப்படியான ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. சுவாசப் பகுதியில் உள்ள கற்றடைப்பும், இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜனேற்றமும் நடைபெறுகிறது.

படத்தைப் பார்த்தால் தெரியும், தலை தலைகீழாக வைக்கப்பட்டிருப்பதை. அப்படி வைத்துப் பிடிக்கும் பட்சத்தில் சைனஸ் பகுதி விரிவடைந்து அது சம்பந்தப்பட்ட அடைப்பு மட்டும் ஏனைய பிரட்சினைகளிலிருந்து படிப்படியாக நிவாரணம்.

IX) Sirsha Asana - The Headstand

Image Hosted by ImageShack.us
நாள் முழுவதும் நாம எல்லோரும் உட்கார்ந்துகிட்டோ அல்லது நடந்தோ செல்லும் பொழுது, அன்னிச்சையாக நமது இதயம் தான் பாட்டுக்கு மல்லுக் கட்டி இரத்தத்தை முடிந்தளவிற்கு தலைப்பகுதிக்கு உந்தித் தள்ளிக் கொண்டு இருக்கிறது, இல்லையா.

அது அப்படியாக இருக்கையில் இயற்கைக்கு மாறாக நாமாக வழிய சென்று, அந்த தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதீதப் படுத்தி புத்துணர்வு ஊட்டத்தான் இந்த தலைகீழாக நிற்கும் ஆசனம்.

இதன் மூலமாக உடம்பின் எல்லா பகுதிகளுமே பயனடைகிறது என்றால் அது மிகையே கிடையாதுங்க. கால் மேலேலேலே இருப்பதால் இப்ப, சாதராணமாக நடைபெறும் இரத்த ஓட்டம் சற்று நம் முயற்சியால் தலைகீழாக நடக்கிறது. அதன் பலனும் சொல்லிளடங்கா.

இந்த ஆசனம் முறைப்படி செய்யக் கற்று கொண்டால் concentration சக்தி கூடி, மெது மெதுவாக தியானத்தில் உட்புக உதவும்.

X) Chakra Asana - The Wheel Pose

இது கொஞ்சம் கஷ்டமான ஆசனம்தான். இருந்தாலும், சிறந்த வழியில் பயனுள்ளதாக அமைகிறது.

இது முழு உடம்புக்குமே வலிமையை கொடுக்கக் கூடியது. அதிலும் சிறப்பாக கார்டியோ வஸ்குலார் சம்பந்தபட்ட வகையில் (இதயம்) மிக்க பலனுடையது. மேலும், கைகால்கள், தோள்பட்டை, முதுகொலும்பு எல்லாவற்றுகும் வலிமை சேர்க்க உதவுகிறது.

இதில் முழுமை அடையா விட்டாலும், கொஞ்சம் வந்தால் கூட பலன் என்னவோ உறுதி.

XI Ardha Matsyendra Asana - The Half Spine Twist Pose

இந்த ஆசனம்தான் முதுகுத் தண்டுவடத்தை முறுக்குவதிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது.

கம்பியூட்டர், மற்றும் ட்டி.வியின் முன்னால் அதிக நேரம் அமர்ந்து இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் மிக்க உதவலாம். ஒரே நேரத்தில் எல்லா உடம்புப் பகுதிகளுமே இறுக்கப்பட்டு தளர்த்தப் படுவதால் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் துரிதப் படுத்தப் பட்டு பயன் அடைகிறோம்.

வயிற்றுப் பகுதி நன்கு அமுக்கப் படுவதால், அப்பகுதியின் தசைகள் நன்கு பொலிவடைகிறது.

XII) Sava Asana - The Corpse Pose

இது நம்ம எல்லோருக்கும் பிடிச்ச ஆசனம் ;-) பண்ண ஆரம்பிச்சாலே சும்மா தூக்கம் சொக்க ஆரம்பிச்சுடும். நான் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு ஆசனம் செய்து முடித்தவுடன், ரிலாக்ஸ் ஆவதற்கும் மனதை அடுத்த ஆசனம் செய்வதற்கு தயார் செய்வதற்கும் இந்த ஆசனத்தை தவறாமல் செய்வேன்.

இரவில் தூக்கம் வரதாவர்கள் இந்த ஆசனத்தின் படி மனத்தையும், உடம்பையும் எப்படி ரிலாக்ஸ் செய்வது முறைப்படி என்று தெரிந்து கொண்டால் ஈசியாக தன்னை தூங்கப் போட்டுக் கொள்ளலாம்.

இந்த எளிய ஆசனத்தின் மூலமாக இரத்தக் கொதிப்பைக் கூட கட்டுப் படுத்த முடியும். ஏனெனில் இந்த ஆசனத்தில் மனதற்ற நிலையில் இருக்க முயற்சி எடுப்பதால், மிகவும் அமைதியான சூழல் நமக்கு எட்டுகிறது.

Naadi Suthi and Pranayama

கபால சுத்தி பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு (சப்பனம் போட்டு), அடி வயிற்றிலிருந்து காற்றை உந்தி தள்ளுவது வேகமாக. அப்படி பல முறை செய்து, சுவாச பகுதியை சுத்தம் செய்து விட்டால், பிறகு நாடி சுத்திதான்.

நம் உடம்பில் மூன்று முக்கிய நாடிகள் உள்ளனவாம். அவைகள் முறையே இடா (Ida), பிங்கல(Pingala) மற்றும் சுஸ்ம்ன (Sushmna).

இதில் மூச்சுக் காற்றை இடது மூக்குத் துவாரத்தின் வழியே இழுக்கும் பொழுது (வலதை மூடிக்கொண்டு) - உடம்பு குளிர்ச்சியடைகிறதாம் (இட நாடி). பிறகு அந்த அசுத்தக் காற்றை வலது மூக்குத் துவாரத்தின் வழியே வெளிச் செலுத்தி (இடதை மூடிக்கொண்டு), பிறகு சுத்தக் காற்றை அதே துவாரத்தின் வழியே உள் வாங்குவது (பிங்கல நாடி) - உடம்பு உஷ்ணமேற்றப் படுகிறதாம். இது இரண்டும் சம நிலையில் இருப்பது அவசியம் தானே.

சுஸ்ம்ன, தியானத்தின் போது இரு நாடிகளைக் கொண்டும் சீராண முறையில் சுவாசிக்கும் முறை.

எனக்கு இயல்பாக ஆஸ்மா போன்ற மூச்சிரைப்பு வருவதுண்டு, எப்பொழுதாவது தூசி அலர்ஜியின் பொருட்டு. ஆனால் இந்த மூச்சுப் பயிற்சி கிட்டதட்ட அதனை ஒழித்து கட்டிவிட்டதெனவே நினைக்கிறேன்.

மீண்டும் சொல்லிவிடுகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் ஆசனங்கள் எனக்கு பிடித்தவைகளிலிந்து சில அதுவும் அதனுடைய பயன் பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் மட்டுமே.

இதில் எப்படி அந்த ஆசனத்தை செய்வது என்ற செய்முறை வழங்கப்படாததற்குக் காரணம், யாரும் முறையான ஆசிரியர் இல்லாமல் முயற்சி செய்யக் கூடாது என்பதற்காகத்தான். இருந்தாலும், இது சம்பந்தமான ஒரு எளிய PDF Format புத்தகம் ஒன்று உள்ளது வேண்டியவர்கள் எனக்கு மயில் இந்த முகவரியில் அனுப்பவும். karthikprab@gmail.com



பி.கு: எனது இரண்டாவது பதிவு கீழே வந்த பின்னூட்டங்களில் ஒன்றிற்கு பதிலுரைக்கும் வண்ணம் தடகள உடற்பயிற்சிக்கும் யோகாவிற்கும் உள்ள சில அடிப்படை வித்தியாசங்களுடன்... பதிவு இங்கே ==> யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

44 comments:

துளசி கோபால் said...

present போட்டுக்குங்க.
சவாஸனம் மட்டுமே செய்ய் முடியும்(-:

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

போட்டாச்சு. சவாஸனம் பண்ணுவீங்கன்னு தெரியும். இதனை எழுதும் பொழுது நிஜமாவே உங்களைப் பற்றிய நினைவு வந்தது. தவிர்க்க முடியவில்லை :-).

இரண்டாவது, இதனை போடுவதற்கு முன்னமே நினைத்தேன். அவ்வளவு தூரம் இது போகாது என்று.

சரி இருக்கட்டும் என்றுதான் போட்டு வைத்துள்ளேன்.

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. இது கற்றுக் கொள்ள வேண்டுமென நெடுநாள் திட்டம். தள்ளிக் கொண்டே போகிறது. எப்பொழுது என் சோம்பல் நீங்கி வகுப்பிற்கு செல்கிறேனோ. பார்க்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. இது கற்றுக் கொள்ள வேண்டுமென நெடுநாள் திட்டம். தள்ளிக் கொண்டே போகிறது. எப்பொழுது என் சோம்பல் நீங்கி வகுப்பிற்கு செல்கிறேனோ. பார்க்கலாம்.

வசந்த் said...

தெகா அவர்களே,

நானும் சிறு வயதில் இந்த ஆசனங்கள் எல்லாம் செய்து வந்தேன். உண்மையாகவே மனதும் உடலும் வலிமையாக இருந்தன. இப்போது விட்டு விட்டேன். மீண்டும் தூண்டுதல் கொடுத்தமைக்கு நன்றி.

காலையில் சீக்கிரம் எழுவதற்கும் எதாவது வழி சொல்லுங்களளேன் :-)

வசந்த்

தருமி said...

கொஞ்ச நாள் செய்து வந்தேன். பின், இதயப் பிரச்சனை அது இதுன்னு ஆன பின் விட்டு விட்டேன். இப்போதும் ஆசை என்னவோ உண்டு.

இளங்கோ-டிசே said...

நல்லதொரு பதிவு தெக்கிக்காட்டான்.
....
Sava Asanaவைத் தவிர மிச்சம் ஒரளவு பரீட்சயமானவை. மத்தியா ஆசனத்தில், படத்தில் நெஞ்சுக்குமேலே கைகளைக் கூப்பி வைத்திருக்கின்றார்கள். நாங்கள் செய்வது, பத்மாசனம் போட்டுக்கொண்டு பெருவிரலைக் கைவிரல்களால் பிடிப்பது...சிலவேளைகளில் இதற்கு அடுத்த நிலையாக படத்தில் காட்டியது இருக்கக் கூடும்.

மங்கை said...

1-11 வரைக்கும் பன்னலேன்னா கூட பரவயில்லை, 12 ஆவது பன்னுங்கன்னு சொல்றீங்க... அது correctt ஆ செய்துறுவோம்..Promise..

ஆனா serious ஆ ஒன்னு, நம்பனும், எனக்கும் ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறதுனால மூச்சு பயிற்சி மட்டும் செய்வேன்.. அதுவும் இங்க வந்த அப்புறம், செய்தா தான் நல்லா இருக்கு இல்லைனா மாசத்துக்கு ஒரு inhaler வேனும்..

ஆர்வம் வர்ர மாதிரி சொல்லி இருக்கீங்க

கால்கரி சிவா said...

நினைத்தேன் உங்களிடமிருந்து இந்த மாதிரி பதிவு ஒன்று வருமென்று.

நன்று

நன்மனம் said...

நல்ல பகிர்வு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்று தான் பின்னூட்டுவதால், முதலில், "வாழ்த்துக்கள் நட்சத்திரமே"!

ரொம்ப அழகா, விலா வரியாச் சொல்லி இருக்கீங்க!
ஆசனம் மட்டும் இல்லாது சுவாசனம் - Naadi Suthi and Pranayama - ஸோ-ஹம் முறைகள் - குழந்தை மற்றும் வயதானவர்களுக்கு எளிய ஆசனங்கள் பற்றியும் குட்டி குட்டிப் பதிவுகள் போடுங்களேன்!

நான் பார்த்தவரை குழந்தையிலேயே இந்தப் பழக்கம் ஒட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுதும் நல்ல தெளிவு!

//அதாவது, யோகாவெல்லாம் வாழ்வில் சாமியாராக போக எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான், அப்படி எண்ணமில்லாமல் சேர்ந்து செய்தாலும் நீயும் அப்படியாக ஆகிவிடுவாய் என்று//

பலரும் இந்தக் காரணத்தால் தான் இதை மிஸ் செய்து விடுகிறார்கள்! இப்போது ஊடகங்களால் கொஞ்சம் பரவாயில்லை!

மலைநாடான் said...

தெக்கி!

மிக அருமையான பதிவு. யோகப் பயிற்சியில் ஆழ்ந்துவிட்டால் அதன் அனுபவ சுகமே தனிதான்

பதிவுக்கு நன்றி!

Sivabalan said...

தெகா

சூப்பர் பதிவு..

நடசத்திர வார பதிவுகள் எல்லாம் கலக்கல்

இமெயில் புத்தகம் அனுப்புவீங்களா!! ஆகா நல்லது நல்லது!!

பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நிறையக் கேள்விப்பட்டுள்ளேன்; தவறவிட்ட நல்ல விடயமொன்று!!அழகாக விபரித்துள்ளீர்கள்!
யோகன் பாரிஸ்

வடுவூர் குமார் said...

இது பதிவு.

பத்மா அர்விந்த் said...

நிறைய அமெரிக்க பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் இப்போது யோகாசனம் சொல்லி தருகிறார்கள். என் மகனின் உடற்பயிற்சி வகுப்பில் சன்சல்யூட் செய்யாமல் வேறு எதுவும் செய்வதில்லை. அவனிடம் இருந்து நான் கற்று கொண்டேன்.

Thekkikattan|தெகா said...

தருமி,

//கொஞ்ச நாள் செய்து வந்தேன். பின், இதயப் பிரச்சனை அது இதுன்னு ஆன பின் விட்டு விட்டேன். இப்போதும் ஆசை என்னவோ உண்டு.//

புரிந்து கொண்டேன். இந்த சூழ்நிலையில், நீங்கள் கூறியபடி நிறுத்தியது தான் நல்லதென நினைக்கிறேன். இருந்தாலும், இதில் நிபுணர்கள் இருந்தால் உங்கள் இன்றைய உடல் நலத்திற்கு தகுந்தமாதிரியான, ஆசனங்கள் இருந்தால் recommend செய்வார்கள். கொஞ்சம் இரத்த அழுத்தம், மற்ற விசயங்கள் கட்டுக்குள் இருக்குபடி அவ் ஆசனங்கள் உதவும் மாதிரியாக.

ஆனால், என்னிடம் அவ்வளவு அது சார்ந்து அறிவு கிடையாது :-)

Thekkikattan|தெகா said...

வசந்த்,

//உண்மையாகவே மனதும் உடலும் வலிமையாக இருந்தன..//

வித்தியாசம் தெரிஞ்சுச்சுதானே வசந்த். அதுதான், இந்த யோகாசனங்களின் பலன், மைமேல் பலன்னு சொல்லுவாங்களே அதனை இதில் பார்க்கலாம். யோகா செஞ்சு முடிச்சுட்டு எழுந்தவுடனேயே, உடம்பும் மனமும் ஒர் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர முடியும்.

//காலையில் சீக்கிரம் எழுவதற்கும் எதாவது வழி சொல்லுங்களளேன் :-) //

யாரு நானா :-)) ?? நானே, சாயந்திரா கோஷ்டிங்க. காலையில் எழுந்து செய்யணுமின்னு ஆசைதான். இந்த தமிழ்மண bug என்னை கடிச்சி வைச்சு, தாமதமாக படுக்கைக்கு போய், காலை ஏழு மணி வரைக்கும் தூங்கிற கோஷ்டி, கொஞ்ச நாட்களா.

அதுக்கு முன்னாடி எழுந்திரிக்கிற மாதிரி கத்துகிட்ட உங்களுக்கு SMS பண்றேன் :-)))

Thekkikattan|தெகா said...

டிசே தமிழன்,

//Sava Asanaவைத் தவிர மிச்சம் ஒரளவு பரீட்சயமானவை. //

புரிகிறது என்ன சொல்ல வாரீங்கன்னு :-)

//மத்தியா ஆசனத்தில், படத்தில் நெஞ்சுக்குமேலே கைகளைக் கூப்பி வைத்திருக்கின்றார்கள். நாங்கள் செய்வது, பத்மாசனம் போட்டுக்கொண்டு பெருவிரலைக் கைவிரல்களால் பிடிப்பது...சிலவேளைகளில் இதற்கு அடுத்த நிலையாக படத்தில் காட்டியது இருக்கக் கூடும்.//

ஆமாம் டிசே, கொஞ்சம் கொஞ்சம் variation இருக்கத்தான் செய்கிறது. இந்த படங்கள் அந்த PDF புத்தகத்திலிருந்து சுட்டவைதான். இருப்பினும் நீங்கள் கூறியபடி, நான் கற்றுக் கொண்ட இடத்திலும் பத்மாசனத்தில் கால் கட்டவிரலை, கைவிரல்களால் பிடித்துக் கொள்வது மாதிரியேத்தான் சொல்லிக் கொடுத்தார்கள்.

இந்த பதிவில் முடிந்த அளவிற்கு வரிசைக்கிரமத்தில் தான் பட்டியலிட்டுள்ளேன். ஏனெனில், ஒவ்வொரு ஆசானத்திற்கு reverse ஆசானம் போல ஒன்று அமைவது அவசியமென்பாதால்.

நன்றி டிசே! ஆமாம், உங்களுக்கு அந்த ஈ-புத்தகம் கிடைத்ததா??

சின்னக்குட்டி said...

உந்த ஹட யோகா.. தாயகத்திலிருக்கும் போது செய்திருக்கிறேன்... அற்புதமான ஆனந்தமான உணர்வை தரும்...வெளிநாட்டுக்கு வந்த பின் செய்யவில்லை ...மகரிசி அய்யரின் ஆழ்நிலை(basic) தியானம் (TM)பல காலமாக செய்து வருகிறேன்...கட யோகாவை திரும்பவும் செய்ய ஆசை.. இரண்டை கலக்க கூடாது என்று சொன்னார்கள் விட்டுட்டேன்.

நல்ல ஒரு பதிவு மிக்க நன்றிகள்..

Thekkikattan|தெகா said...

இ.கொ,

//ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. இது கற்றுக் கொள்ள வேண்டுமென நெடுநாள் திட்டம். தள்ளிக் கொண்டே போகிறது. எப்பொழுது என் சோம்பல் நீங்கி வகுப்பிற்கு செல்கிறேனோ. பார்க்கலாம்.//

நன்றிகள் தங்களின் பாராட்டுக்கு. தள்ளியே போடாதீங்க, நல்லா விசயத்தை தோணின உடனேயே டக்குன்னு செஞ்சிடணும். இங்க என்னோட ஒரு நண்பரும் நானும் ஒரு நாள் ஓர் கடைக்கு போனோம். அங்க இரத்த அழுத்தம் பார்க்கிற மிசின் சும்மா ஞே..என்று உட்கார்ந்திருந்ததை கவனித்தவுடன், வாங்க ரீடீங் பண்ணிப் பார்க்கலாமென்று அழைத்தேன்.

கொஞ்சம் பயந்தார். எடுத்தோம் எனக்கும் அவருக்கும் 15 பாயின்ட்ஸ் வித்தியாசமிருந்தது... பிறகு அதனைப்பற்றி கவலையுற்றாவராக ஒரு 1 மணி நேரம் பினாத்தி எடுத்து விட்டதை பார்த்து சகியாமல். ஏனுங்க, கோவில்ல சும்மா இலவசமா யோகா சொல்லி கொடுங்கிறாங்களே முயற்சித்துப் பாருங்கன்னு பேசிகிட்டோம். இப்ப அவரு இரண்டாவது வாரம பிரதி சனிக்கிழமை தோறும் செல்கிறார் :-)

அது போல, பாருங்க சுத்தி முத்தி கிடைக்கும்... லாப் டாப்டை கொஞ்சம் அந்தப் பக்கமா வைச்சுட்டு :-))

Thekkikattan|தெகா said...

நல்ல'மனம்,

கண்டிப்பாக உங்களுக்கு இது தொடர்பாக இன்னும் நிறைய தெரிஞ்ச மாதிரி ஏதோ எனக்குச் சொல்லுதே :-))

ஏங்க, இவ்வளவு தூரம் வந்துட்டு எங்க கிட்ட அந்த ரகசியத்தை சொல்லாமல் போனீங்க ;-)

Machi said...

நல்ல பதிவு தெக்கிட்டான். ஆசனம் செய்ய வேண்டும் என்று ஆசை உண்டு, இனி செய்து பார்த்து விட வேண்டியது தான். தொப்பைக்கு ஏதாவது தனி ஆசனம் உண்டா? :-)

Thekkikattan|தெகா said...

ரவி சங்கர்,

//ரொம்ப அழகா, விலா வரியாச் சொல்லி இருக்கீங்க!
ஆசனம் மட்டும் இல்லாது சுவாசனம் - Naadi Suthi and Pranayama - ஸோ-ஹம் முறைகள் - குழந்தை மற்றும் வயதானவர்களுக்கு எளிய ஆசனங்கள் பற்றியும் குட்டி குட்டிப் பதிவுகள் போடுங்களேன்!//

ரொம்ப நன்றி ரவி சங்கர். அவ்வளவு ஆழமாக எழுத முடியுமான்னு தெரியலை. ஏன்னா, அந்த அளவிற்கு இதில் ஆராய்ச்சி இன்னும் நான் நடத்த வில்லை. முயன்றால் முடியும்தான். தங்களின் வேண்டுகோலுக்கும் ஒரு நன்றி :-)

//நான் பார்த்தவரை குழந்தையிலேயே இந்தப் பழக்கம் ஒட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுதும் நல்ல தெளிவு!//

ரொம்ப உண்மைங்க. எதுவுமே அப்படித்தானே, முதலில் சிறிய பழக்கமாக ஆரம்பித்தது, பிறகு அதனையே தொடர்ந்து செயல்படுத்தப் போனால் பின்னால் அதுவே குணாதிசயமாக போகிவிடுகிறது.

இது போன்ற ஆரோக்கியம் சார்ந்த விசயங்களை குழந்தைகளுக்கு இளமையிலேயே சொல்லிக் கொடுப்பது, நன்று. பிற்காலத்தில், அது மிகவும் உதவும்.

//பலரும் இந்தக் காரணத்தால் தான் இதை மிஸ் செய்து விடுகிறார்கள்! இப்போது ஊடகங்களால் கொஞ்சம் பரவாயில்லை!//

அது மட்டுமல்லாமல், இப்பொழுது இது மேற்கத்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், இன்னும் வேகமாக யோகாவின் பயன்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு சமயத்தில் சுவாமி சச்சிதானாந்தா கூறினார், நமது கலை மேல் நாட்டவரால் கண்டறியப்பட்டு, அவர்கள் இது செய்தால் நன்மை கிட்டுகிறது என்று சிபாரிசு செய்ததின் பொருட்டு, இன்றைய காலக் கட்டத்தில் நாம் ஏத்துக் கொள்ளும் மனோ பக்குவத்தில் இருக்கிறோமென்று, ஒரு வருத்தம் தொனித்த குரலில். அது எவ்வளவு உண்மை!!

- உடுக்கை முனியாண்டி said...

தெகா:

மறுபடியும் யோகா செய்றதைப் பத்தி யோசிக்க வைச்சிட்டீங்க. பதிவுக்கு நன்றி

தருமி:

வேதாத்திரி மகரிஷியின் எளிமைப் படுத்தப்பட்ட யோகாசனங்களை (மூச்சுப் பயிற்சி தவிர்த்து)எல்லாருமே செய்யலாம்னு நினைக்கிறேன். அங்க கேட்டுப் பாருங்க.

Thekkikattan|தெகா said...

கால்கரி சிவா,

//நினைத்தேன் உங்களிடமிருந்து இந்த மாதிரி பதிவு ஒன்று வருமென்று.//

:-) எப்படித் தெரியும் இது போன்று நான் போடுவோன் என்று? இருந்தாலும் பிரயோசனமாக இருந்தால் சரி. இந்த பதிவின் நோக்கம் முடிந்தது.

உங்க குண்டலினி பதிவும் நான் விரும்பியவைகளில் ஒன்று.

Thekkikattan|தெகா said...

மங்கை,

//1-11 வரைக்கும் பன்னலேன்னா கூட பரவயில்லை, 12 ஆவது பன்னுங்கன்னு சொல்றீங்க... அது correctt ஆ செய்துறுவோம்..Promise..//

அதனையும் சரியாச் செஞ்சீட்டீங்கன்னா உண்மையிலேயே சூப்பர்ப்ங்க (நல்லா சத்தமா தினமும் தூங்கிறதத்தான் சொன்னேன் - குறட்டையை அல்ல :)...

//நம்பனும், எனக்கும் ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறதுனால மூச்சு பயிற்சி மட்டும் செய்வேன்.. அதுவும் இங்க வந்த அப்புறம், செய்தா தான் நல்லா இருக்கு இல்லைனா மாசத்துக்கு ஒரு inhaler வேனும்..//

பார்த்தீங்களா, நம்பாம எங்கே போகப் போறேன். இவ்வளவு பெரிய விசயத்தை எங்ககிட்ட சொன்னீங்களே. அது எவ்வளவு பேருக்கு ஒரு உந்துதலா இருக்கும்... எனக்கும் அதே நிலைமைதான், ஆனா கடையில இருக்கிற inhaler எல்லாத்தையும் குத்தகைக்கு எடுக்கிற அளவிற்கு இல்லைப்பா... :-))

மங்மை, இன்னொரு விசயம். சில எளிமையான ஆசனங்கள் இருக்கிறது இந்த ஆஸ்துமா பிரட்சினைக்கின்னே... உடம்ப ரொம்பவெல்லாம் twist பண்ண வேண்டியதில்லை.
நல்லாதொரு யோகா பயிற்சி நிலையமா
பாருங்க ஒரு இரண்டு வாரம், பயிற்சி செய்ங்க உங்க பிரட்சினையை சொல்லி, பிறகு inhaler எண்ணிக்கை குறைஞ்சுடும்... that simple ;-)

Thekkikattan|தெகா said...

மலைநாடான்,

இந்தப் பதிவு நிறைய புதிய மக்களை என் வீடு மிதிக்க வைத்திருக்கிறது. சந்தோஷம்.

//மிக அருமையான பதிவு. யோகப் பயிற்சியில் ஆழ்ந்துவிட்டால் அதன் அனுபவ சுகமே தனிதான்//

அந்த அனுபவ சுகத்தை எங்களோட பகிர்ந்து கொண்டிருக்கலாமே... இன்னும் கொஞ்சம் மக்களுக்கு உதவியிருக்குமில்லையா :-)

நன்றி மலைநாடான்!!

Thekkikattan|தெகா said...

சிவா,

//இமெயில் புத்தகம் அனுப்புவீங்களா!! ஆகா நல்லது நல்லது!!//

உங்களுக்கு அனுப்பினேனே கிடைச்சுதா? ஒண்ணுமே சொல்லவில்லையே அதனைப் பற்றி.

வாழ்த்துக்களுக்கு நன்றி சிவா. எல்லாம் உங்களின் ஊக்கத்தினாலும் தான்.

Thekkikattan|தெகா said...

யோகன்,

//தவறவிட்ட நல்ல விடயமொன்று!!//

இப்ப ஒண்ணும் கெட்டு போகவில்லையே. நீங்கள் இன்னும் தவறவிடவில்லை. இன்றே கூட, ஆரம்பிக்கலாம், ஆரம்பித்து அந்த பனிப்பாறையின் நுனியை தொட்டுப் பார்த்து அனுபவித்து செல்லலாமே. It is not too late, yet :-) தப்பிக்க விட்டு விடுவோமா ;-)

தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி, யோகன்.

Thekkikattan|தெகா said...

வடுவூரரே,

//இது பதிவு.//

ஹா...ஹா...ஹா....அப்ப இதுவரைக்கும் போட்டதெல்லாம் :-)))))))

Thekkikattan|தெகா said...

பத்மா அர்விந்த்,

//நிறைய அமெரிக்க பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் இப்போது யோகாசனம் சொல்லி தருகிறார்கள். என் மகனின் உடற்பயிற்சி வகுப்பில் சன்சல்யூட் செய்யாமல் வேறு எதுவும் செய்வதில்லை. அவனிடம் இருந்து நான் கற்று கொண்டேன்.//

ஓ! அப்பிடீங்களா, இதே மாதிரி அமெரிக்காவின் எல்லா பள்ளிகளிலும் இதனை கட்டாயமாக்கினால், எதிர்காலம் எப்படி இருக்கும். நினைத்துப் பார்க்கவே, ரொம்ப இதமாக இருக்கிறது.

எப்படியோ, தங்களின் மகனின் மூலமாக உங்களுக்கு சூர்ய நமஸ்கார் கிடைத்ததா :-) சந்தோஷம்.

பெத்தராயுடு said...

இன்னுமொரு அசத்தலான பதிவு.
பெங்களூரில் வேலை செய்தபோது சுவாமி சுகபோதானந்தாவின் ஆசிரமத்தில் நடைபெறும் யோகா வகுப்புகளுக்கு சென்று வருவேன். அங்கு சில எளிமையான ஆசனங்களும், தியானமும் கற்றுத் தந்தார்கள். ஒரு மூன்று மாதம் சென்றேன். அந்த குறுகிய காலத்திலேயே யோகாவின் பலனை உணர முடிந்தது.

அமெரிக்காவில் யோகக்கலை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது jymகளிலும் யோகா கற்றுத்தருகிறார்கள்.

Thekkikattan|தெகா said...

பெத்த ராயுடு,

//ஒரு மூன்று மாதம் சென்றேன். அந்த குறுகிய காலத்திலேயே யோகாவின் பலனை உணர முடிந்தது.//

பலன் தெரிநதது தானே. இன்னும் விடாமல் செய்து வாருங்கள்.

ஓ! இங்கு ஜிம்களில் செய்யும் யோகாசனங்கள் ஒரு உடற் பயிற்சி என்ற கோணத்தில் தான் அணுகப் படுகிறது. நம் உலகத்தில், உடல் ஆரோக்கியம் ஒரு பகுதி, அதனை விட ஒரு படி மேலே சென்று நமது இருத்தலியம் பற்றி ஆராய என்பது, இல்லையா.

நன்றி, பெத்த ராயுடு!

காட்டாறு said...

அழகா எளிமையா எழுதுறீங்க. காட்டானாட்டம் எழுதாம (இது தேவையா இப்போ? ;-)).

சுவாமி சச்சிதானாந்தா சொல்லியது எத்துணை உண்மை! இன்னும் நாம மாறல.

சுயதம்பட்டம் அடிச்சிக்கலாமா? நான் Sarvanga Asana, Chakra Asana, and Hala Asana இது மூனும் செய்றதில்ல. மத்ததெல்லாம் செய்வோமாக்கும். இதன் அருமையை உணர்ந்தவங்களுக்கு செய்யாமல் இருக்க முடியாது. அடிக்ஷன் மாதிரின்னு வச்சுக்கோங்களேன். ;-)

Unknown said...

Ramdev’s Medicines Questioned By Indian Medical Association

http://www.medindia.net/news/view_news_main.asp?x=9519

தவறான தகவல்களுக்காக சிறை செல்ல வாய்ப்பு உண்டு :-))

யோகாவினால் சில வியாதிகளைக் குணப்படுத்தலாம் என்று பழனி -காளிமுத்து வைத்தியர் ரேஞ்சில் சொல்லிவிட்டு Indian Medical Association இடம் இந்த ஆள் (Ramdev - யோகா குரு)இப்போது படாதபாடு பட்டுக் கொண்டு உள்ளார்.

யோகாவில் எது குணமாகும் என்று நிரூபித்து உங்களின் குருவை நோபல் பரிசு வாங்கச் சொல்லுங்கள். :-))

**
தூங்குவதே எல்லா தியானக் கலைகளிலும் தலை சிறந்தது. :-))

Thekkikattan|தெகா said...

பலூன் மாமா,

//தவறான தகவல்களுக்காக சிறை செல்ல வாய்ப்பு உண்டு :-))//

நல்ல வேளை நீங்க இப்பத்ததான் இந்தப் பதிவ பார்த்திருக்கீங்க... அப்ப ஒரு வருஷம் வெளியதான் திரிஞ்சிருக்கேனா மாட்டீக்காம :-)).

ச்சே முன்னமே வந்து உள்ளே போயிருந்தா நல்ல சாப்பாடு, மருத்துவ நலன் எல்லாம் எனக்கு கிடைச்சிருக்குமே, இப்படி மிஸ் பண்ணிட்டேனே :-P.

என்னங்க பலூன் இப்படிச் சொல்லிட்டீங்க... அதான் கைமேல் பலன்னு சொல்லியிருக்கேனே, என்னோட தனிப்பட்ட உடல் ஆரோக்கியத்தைக் கொண்டு...

எல்லா எலும்பு இணைப்புகளுக்கும் புத்துயீர் ஊட்டப் படுவதென்றே நாம் தினசரி வாழ்க்கையில் திடுக், திடுக்கென்று பயப்படாமல் குமிந்து, நிமிந்து நம் வேலைகளை நாமே செய்து கொள்ள அனுமதித்தாலே போதாதா, நாம் ஆரோக்கியத்துடன் வாழ்கிறோம் என்பதனை உறுதி செய்து கொள்ள.

என்று நாம் வயதானவர்களாக நம்மை நாமே கருதிக் கொள்கிறோமென்றால், கீழே தவறி போட்டு விட்ட ஒரு பொருளை குமிந்து எடுக்கும் பொழுது அய்யோடா முதுகை பிடிச்சிக்குமே என்ற பயம் என்று எட்டிப் பார்க்கிறதோ அன்றிலிருந்துதான் :-). உண்மையான வயோதிகம் நம்மை உரசி விட்டுப் போனதாக பொருள்.

சரி, சரி சும்மா வழவழ, கொழ, கொழன்னு பேசினா நேரம் விரயம்... பகுதி இரண்டில கொஞ்சம் எங்காவது திருடி இங்ஙன கொண்டு வந்து ஒட்டி விடுகிறேன், அதனையும் பாருங்க... ;))

Thekkikattan|தெகா said...

பலூன் மாமாவுக்கு... பகுதி 2:

* More importantly, yoga is extremely effective in: Increasing Flexibility – yoga has positions that act upon the various joints of the body including those joints that are never really on the ‘radar screen’ let alone exercised.

* Increasing lubrication of the joints, ligaments and tendons – likewise, the well-researched yoga positions exercise the different tendons and ligaments of the body.

Surprisingly it has been found that the body which may have been quite rigid starts experiencing a remarkable flexibility in even those parts which have not been consciously work upon. Why? It is here that the remarkable research behind yoga positions proves its mettle. Seemingly unrelated “non strenuous” yoga positions act upon certain parts of the body in an interrelated manner. When done together, they work in harmony to create a situation where flexibility is attained relatively easily.

* Massaging of ALL Organs of the Body – Yoga is perhaps the only form of activity which massages all the internal glands and organs of the body in a thorough manner, including those – such as the prostate - that hardly get externally stimulated during our entire lifetime. Yoga acts in a wholesome manner on the various body parts. This stimulation and massage of the organs in turn benefits us by keeping away disease and providing a forewarning at the first possible instance of a likely onset of disease or disorder.

((One of the far-reaching benefits of yoga is the uncanny sense of awareness that it develops in the practitioner of an impending health disorder or infection. This in turn enables the person to take pre-emptive corrective action )).

* Complete Detoxification – By gently stretching muscles and joints as well as massaging the various organs, yoga ensures the optimum blood supply to various parts of the body. This helps in the flushing out of toxins from every nook and cranny as well as providing nourishment up to the last point. This leads to benefits such as delayed ageing, energy and a remarkable zest for life.

* Excellent toning of the muscles –Muscles that have become flaccid, weak or slothy are stimulated repeatedly to shed excess flab and flaccidity.

பிறகு நேரம் கிடைச்சா இங்கயும்...

http://www.healthandyoga.com/html/yoga/yogaplan.html#cures

இங்கயும் போயி பாருங்க... அனுபவிங்க பின்னாலே பேசுவோம் :)

http://www.yoga-age.com/

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

ஒரு அற்புதமான பதிவுக்கு வாழ்த்துக்கள் தெகா!

நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக யோகா செய்து வருபவன் என்கிற முறையில்...

யோகா ஒரு உடற்பயிற்சி முறை அது இந்திய சூழலில் உருவானது என்பதை தவிர வேறுவிதமான கற்பனை வாதங்கள் தேவையற்றது.

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான உடலுக்கு தேவை, அதை தவிர யோகா செய்வதால் எல்லாவிதமான நோயும் குணமடையும் என்பதெல்லாம் பொய் என்பதோட மட்டுமல்லாமல்...


ஒழுங்கற்ற உடல் இயங்கியல்(disorder) எனப்படும் மருத்துவ சவால்களை யோகா வால் எதுவும் செய்ய இயலாது.

புறப்பொருட்களால் ஏற்படும் (diseases) யோகா செய்வதால் காப்பாற்ற இயலாது.

இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

ஆரோக்கியமான உடல் தேவையென்றால் உடற்பயிற்சி அவசியம் அதை வலியுறுத்துங்கள்.
யோகா - இந்திய சூழல் என்றால்
நீச்சல் - ஐரோப்பிய நாடுகளில் அற்புதமான உடற்பயிற்சியாக இருக்கிறது குறிப்பாக ரஷ்யர்கள்.

மரபு சண்டை பயிற்சி கிழக்காசிய நாடுகளில் முக்கிய மன, உடல் பயிற்சியாக இருக்கிறது (சீனா,கொரியா,ஜப்பான்)

யோகா வால் சக்தி கிடைக்கும் (ஒரு புண்ணாக்கும் கிடைக்காது) என்பதெல்லாம் வெறும் கற்பனை!

Thekkikattan|தெகா said...

பலூன் நீங்க கொடுத்த தொடுப்பில் சென்று படித்தேன்... ராம்தேவ் மற்றொரு பழனி காளிமுத்தா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் நான் அவரை இதற்கு முன் கேள்விப் பட்டது கூட இல்லை.

சில நேரங்களில் என்ன செய்வது மக்கள் கொஞ்சம் அதீதப் படியாக சென்று சில வியாபார தந்திரங்களை பயன் படுத்துகிறார்கள். என்ன செய்வது எல்லாம் வயித்துப் பொழப்புக்குத்தான் போல :).

கீழே உள்ளது அங்கிருந்து எடுத்து வந்ததுதான்... ராம் எங்கோயோ போயிட்டார்...

Ramdev's claim of treating serious disease like cancer through yoga is wrong because it is not scientifically proven yet,' he said in a statement.

He however agreed upon the benefits of yoga for health. <==== இது, இதுதான் நான் சொல்ல வந்தது.

எனவே நான் அவரில்லைப்பா... :))

Thekkikattan|தெகா said...

பாரி உங்களோட கேள்விகளுக்கு என்னோட பதில் தனிப்பதிவா இங்கே இருக்குங்க, வந்து பாருங்க...

http://thekkikattan.blogspot.com/2008/01/blog-post.html

ராஜ நடராஜன் said...

வகுப்புக்கு இரண்டு வருடம் தாமதமாக வருகிறேன்.பாஸ் பண்ண மாதிரிதான்!

ராஜ நடராஜன் said...

யோகா பற்றி யார் என்ன சொல்றாங்கன்னு மறு தேடலில் கூகிளண்ண மீண்டும் இங்க கூட்டிட்டு வந்து விட்டார்.

Thekkikattan|தெகா said...

வகுப்புக்கு இரண்டு வருடம் தாமதமாக வருகிறேன்.பாஸ் பண்ண மாதிரிதான்!

Monday, April 06, 2009 //

ராஜ நட, நானும் இன்னும் மூணு மாசம் காத்திருந்து உங்களுக்கு பதில் சொல்லியிருந்தால், என்கிட்ட நீங்க தாமதமாகன்னு சொல்ல வேண்டியிருந்திருக்காது, ஏன்னா, நானும் ஹிஹிஹி... ;-)
////யோகா பற்றி யார் என்ன சொல்றாங்கன்னு மறு தேடலில் கூகிளண்ண மீண்டும் இங்க கூட்டிட்டு வந்து விட்டார்//// ஓ, கூகிள் இங்கயே கையை காட்டிவிடுமா, நல்ல வேளை மொக்கை இல்லாம போச்சு , நன்று நன்று.

Related Posts with Thumbnails