Saturday, July 07, 2007

*மாயன்*, நாசர் இவர்களுடன் தெகா...!

மாயன்(வலைப்பதிவர் ) அவர்கள் "நாசர்" குறித்தும், மெதுவாக நகரும் படங்களை குறித்தும் தனது பார்வையை இந்தப் பதிவில் "நடிப்புக் கடவுளால் நாசமாகும் தமிழ்சினிமா -அவதாரம் எடுக்கிறார் நாசர்" பின்னூட்டங்களின் மூலமாக தனது எண்ணங்களை வெளிக்கொணர்ந்திருந்தார். அதற்கு நானும் இரண்டு பின்னூட்டங்களை இட்டு எனது எண்ணங்களை அதன் பொருட்டு பகிர்ந்துள்ளேன். அதற்கு ஒரு பின்னூட்டத்திற்கு இட்டது தனிப் பதிவிற்குறிய அந்தஸ்தை (என் பார்வையில் :-) பெற்றதால் தனியாக இங்கே.

இதுதான் மாயனின் பின்னூட்டம்:

மக்களை சினிமாவால் கரையேற்ற முடியும் என்று நம்பும் அப்பாவியாய் இருக்கிறீர்களே.. தெகா..

விவாதம் இரசிப்பு தன்மையைப் பற்றி.. வெளிநாட்டு ஆட்கள் இங்கே வந்து நமது கிராமத்து கலைகளையும், இந்திய தேசத்தில் விரவிக்கிடக்கும் கலைகளையும் கவர் பண்ணிட்டு இருக்கான்.. நாம மேற்கத்திய சினிமாவையும், இலக்கியத்தையும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம்...
//ச்சும்மா விசிலடிச்சான் குஞ்சுகளாகவே தேக்கமுற வைச்சிருப்போம், சரிதானே, மாயன். .\//
விசிலடிச்சான் குஞ்சாய் இல்லாமல் அமைதியாய் நாசரின் உலக படங்களை பார்க்கும் படி செய்து விட்டால் சினிமா சமூகத்தை காப்பாற்றுமா..? இன்னைக்கு ரஜினியும், விஜய்யும் கொண்டு போறதை நாளைக்கு நாசர் கொண்டு போவார்... அவ்வளவு தான்..

உலக சினிமாவின் ரசிப்பு தன்மை நம்மாட்களிடம் இருக்கா இல்லையானு விவாதம் வரும் போது அதை பத்தி மட்டும் தானே பேசனும்.. ஏன் தெகா சம்மந்தம் இல்லாம சமூக முன்னேற்றத்தையும் பத்தியும், கரையேத்தறதையும் பத்தி பேசறீங்க..

சனி, ஜூலை 07, 2007 4:01:00 PM

பின் வருவது இந்த அப்பாவி அதாவது சினிமா ஊடகத்தின் வாயிலாக சமுதாய பண்பாட்டு கலைகளை காக்க முடியுமென்று அனியாயமாக நம்பும் தெகாவின் பதில்...

மாயா,

அப்படி என்றால் ஏன் உலக பல்கலை கழகங்களும், பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களும் தென் மாநில நாட்டுப் புற கலைகளின் மீதோ அல்லது தொன்மை வாய்ந்த புராண கால நாடங்களின் மீதோ ஆராய்ச்சி செய்து பாதுகாக்க வேணுமென்ற சிரத்தை எடுத்துக் கொள்கிறது?

நமக்கு காலம் காலமாய் இந்த நாட்டுப்புற பாடல்களும், ஒப்பாரிப் பாடல்களும் அதன் மூலமாக சொல்லப்படும் விசயமும் ஒரு தலை முறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எப்படி கீழிறக்கம் செய்யப் பட்டு வருகிறது? கலப்பிடமேதுமன்றி. அதன் மூலம் ஒரு சமுதாயம் என்னாத்தை பெறுகிறது?

கால வெள்ளத்திலிருந்து அவைகளை பாதுகாத்து, வரும் சந்ததிகளுக்கு சிறிதேனும் விட்டுச் செல்வது ஒரு சமூக பொறுப்பல்லவா? அதெப்படி பொறுப்பற்ற தன்மையாகும். சினிமா என்ற ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்தது. மிகவும் பொருளாதாரத்தை மட்டுமே முன் நிறுத்தி நடத்தப்படும் ஒரு தொழில்தான், என்றாலும், ஒரு கலைவாணர் தன்னாலானதை அவ் ஊடகத்தின் ஊடாக கொடுத்து எதுவும் விட்டுச் செல்ல வில்லையா?

எப்படி அகழ்வாரய்ச்சி செய்து பலங் கால கட்டிடங்களையும், விலங்குகளையும் கண்டுடெடுத்து அவைகளின் மூலமாக நாம் நம்முடைய வரலாற்று இருப்பை தெரிந்து கொள்கிறோமோ அது போலவே இது போன்ற டப்பாங்குத்து படங்களையும் தாண்டி அமைதியாக அமர்ந்து சிறிது சமூக கண்ணோட்டத்துடன் ஆராய்ச்சி செய்து எடுக்கபடும் படங்களையும் பார்த்து ப்ரக்ஞையுருவதும், அதன் பொருட்டு சிறிது அக்கரை காட்டுவதும் இளைஞர்களாகிய நமது கடமைதானே?

என்னுடைய பார்வையில் இது போன்ற எதார்த்த வாழ்வை பற்றி (Satyajit ray, Thakazhi Sivasankara Pillai, Adoor Gopalakrishnan போன்றவர்களும், தமிழகத்தில் இருந்தவர்களும்... இன்று தலையெடுக்க எத்தனிக்கும் சேரன்களையும், பச்சான்களையும், பாலாக்களையும் இந்த காட்டாற்று வெள்ளத்தில் போக விட்டுவிடாமல் சிறிது நம்பிக்கை அளிப்பதும் நமது கடமையே..) சித்தரிக்கும் படங்களும் பெருமளவில் ஊக்குவிக்கப்படுவதின் ஊடாக ஒரு சமூகத்தின் கிடைக்கற்கரிய விசயங்கள் போற்றி பாதுகாக்கப் படுகிறது என்பேன்.

கீழே Satyajit Ray பற்றி மற்ற ஒருவரும், அவரும் கூறுவது இது போன்ற மெதுவாக நகரும் படங்களைப் பற்றி...

... Like Renoir and DeSica, Ray sees that life itself is good no matter how bad it is. It is difficult to discuss art which is an affirmation of life, without fear of becoming maudlin. But is there any other kind of art, on screen or elsewhere? "In cinema," Ray says, "we must select everything for the camera according to the richness of its power to reveal...

Pauline Kael, Film Critic.


படித்தவர்களே நாம் இப்படி சிந்திக்கும் பொழுது, பிறகு எப்படி அந்த ப்ரக்ஞைகளிலிருந்து அப்பாற்பட்டு நிற்கும் ஒரு சாதாரண குடிமகனுக்கு விழிப்புணர்வேற்ற முடியும்? இந்த டின்சல் சினிமா உலகினை ஒரு பணம் பண்ணும் தொழிற்சாலையாக மட்டும் எண்ணாமல் அவ்வப்பொழுது சமூக நோக்கோடு குறைந்தப்பட்சம் போசவோ, அல்லது சிறிது செயலிலும் காட்ட எத்தனிக்கும் பொழுது, ஆஹா! எது போன்ற விமர்சனங்களையெல்லாம் சமாளித்து மேலே எழும்ப வேண்டியிருக்கிறது... இதுவும் இதில் தான் அடங்குமோ...



P.S: இது தொடர்பான தருமியின் சுட்டியில் பயணித்து கண்டிப்பாக அவரது பதிவையும் படித்து விடுங்கள்.

ரொம்ப பிரயோசனமான பதிவு... "8 M.G.R.>ரஜினி>விஜய்..??? "

11 comments:

மாயன் said...

Maayan:

உலக சினிமா, உலக இலக்கியம், கடின உழைப்பு எதுவா வேணா இருக்கட்டுங்க...

நான் அதை குறை சொல்லலை.. மக்களை சேராத சென்றடைய முடியாத எந்த ஊடகமும் விஷயமும் வெற்றி பெற முடியாதுங்க.. ஏன் எவ்வளவோ நல்ல படங்கள் வெற்றி அடைஞ்சுட்டு தாங்க இருக்கு.. மக்களுக்கு புரியாத மாதிரி படம் எடுத்துட்டு நான் பெரிய கலைஞன்னு காலரை தூக்கி விட்டுக்கறதால யாருக்கு என்ன பிரயோசனம்?

முகம் படம் நாசர் இயக்கின படம் இல்லைங்க..

நாசர் எடுத்த அவதாரம், தேவதை, பாப்கார்ன் இந்த மாதிரி படங்களை வெச்சு நாசரை சப்போர்ட் பண்ணாதீங்க..

அவதாரம் கலை படம் இல்லை.. கமர்ஷியல் படம் தான்னு படம் வெளிவரதுக்கு முன்னாடி அவரே பல முறை பேட்டி கொடுத்துள்ளார்..

தேவதை.. "Divine Lovers"-னு வேற சில மேட்டர்களுக்காக ஃபேமஸான ஒரு படத்தோட மட்டமான உந்துதல்..

பாப்கார்ன்.. நான் எதுவும் சொல்லலைங்க..

நாசர் நல்ல திறமையான நடிகர்.. உலக சினிமாக்கள் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவை எடுத்துட்டு போறதுக்கு முயற்சி பண்றாரா இல்லையாங்கிறது தான் கேள்வி...



//எப்படி உங்களால் இப்படி பொருப்பற்ற முறையில் மனிதர்களின் கடின உழைப்பை தூக்கியெறிந்து பேச முடிகிறது.//

ரஜினி என்ற மனிதரும், ஷங்கர் என்ற மனிதரும் அதே கடின உழைப்பை தான் செய்தார்கள்.. விழலுக்கு இறைத்த நீர் என்று பதிவுலகமே அலற வில்லையா? நாசர் மட்டும் நல்ல சினிமா எடுத்து பொது சேவையா செய்ய போகிறார்.. என்னோட கருத்தை நல்லா பாருங்க.. நல்ல விஷயங்களை மக்களுக்கு புரியற மாதிரி எடுத்துட்டு போய் சேருங்க.. அவ்வளவு தான்.. கலைஞரும், எம்.ஜி.ஆரும் தங்கள் கொள்கை பிரச்சாரங்களை சினிமா என்னும் ஊடகம் வழியாக எப்படி நிலைநிறுத்தினார்கள்? மக்களுக்கு புரியனும் அவ்வளவு தான்..

என் கிராமத்து சுப்பனுக்கும் குப்பனுக்கும் புரியாத உலக சினிமாவை எடுத்துட்டு அதை அவன் ஏன்யா பார்கணும்னு நினைக்கறீங்க..

என்னோட கருத்து மக்களை சென்றடையாத நல்ல படங்களா? எடுக்காதீங்க... மீறி சினிமா மேல உள்ள பற்றால எடுக்கறீங்களா கூட்டம் வரலைன்னு மக்களையும் பிற கலைஞர்களையும் குறை சொல்லாதீங்க..

அம்புட்டு தாங்க..




தெகா:

என் கிராமத்து சுப்பனுக்கும் குப்பனுக்கும் புரியாத உலக சினிமாவை எடுத்துட்டு அதை அவன் ஏன்யா பார்கணும்னு நினைக்கறீங்க...//

அவன ஏண்டா அந்த அளவிற்கு கொண்டு வாறீங்கன்னு கேக்குறீங்க, அதானே. ச்சும்மா விசிலடிச்சான் குஞ்சுகளாகவே தேக்கமுற வைச்சிருப்போம், சரிதானே, மாயன். என்ன ஒரு பொறுப்பான சமூக கடமை.

என்னோட கருத்து மக்களை சென்றடையாத நல்ல படங்களா? எடுக்காதீங்க... மீறி சினிமா மேல உள்ள பற்றால எடுக்கறீங்களா கூட்டம் வரலைன்னு மக்களையும் பிற கலைஞர்களையும் குறை சொல்லாதீங்க..

அம்புட்டு தாங்க.. //

கொஞ்சம் கஷ்டமான வேலைதான் உங்களையெல்லாம் கரையேற்றுவது என்பது. போக வேண்டிய தொலைவு வெகுதூராமென்பது மட்டும் புரிகிறது.

Maayan:
மக்களை சினிமாவால் கரையேற்ற முடியும் என்று நம்பும் அப்பாவியாய் இருக்கிறீர்களே.. தெகா..

விவாதம் இரசிப்பு தன்மையைப் பற்றி.. வெளிநாட்டு ஆட்கள் இங்கே வந்து நமது கிராமத்து கலைகளையும், இந்திய தேசத்தில் விரவிக்கிடக்கும் கலைகளையும் கவர் பண்ணிட்டு இருக்கான்.. நாம மேற்கத்திய சினிமாவையும், இலக்கியத்தையும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம்...
//ச்சும்மா விசிலடிச்சான் குஞ்சுகளாகவே தேக்கமுற வைச்சிருப்போம், சரிதானே, மாயன். .\//
விசிலடிச்சான் குஞ்சாய் இல்லாமல் அமைதியாய் நாசரின் உலக படங்களை பார்க்கும் படி செய்து விட்டால் சினிமா சமூகத்தை காப்பாற்றுமா..? இன்னைக்கு ரஜினியும், விஜய்யும் கொண்டு போறதை நாளைக்கு நாசர் கொண்டு போவார்... அவ்வளவு தான்..

உலக சினிமாவின் ரசிப்பு தன்மை நம்மாட்களிடம் இருக்கா இல்லையானு விவாதம் வரும் போது அதை பத்தி மட்டும் தானே பேசனும்.. ஏன் தெகா சம்மந்தம் இல்லாம சமூக முன்னேற்றத்தையும் பத்தியும், கரையேத்தறதையும் பத்தி பேசறீங்க..
//

//

தெகா

தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களே.. நான் நமது நாட்டுப்புற கலைகளை ஆதரித்து அல்லவா பேசியிருக்கிறேன்.. மேனாட்டு சமூகத்தை பிரதிபலிக்கும் மேனாட்டு சினிமா பார்வையை அப்படியே தமிழில் அடாப்ட்(ADOPT) செய்வது தவறு.. மக்களுக்கு புரியாது என்றல்லவா போட்டிருக்கிறேன்..

அய்யா நீங்கள் நல்ல சினிமாக்களை எடுங்கள்... மக்களுக்கு புரியும்படி எடுங்கள்.. மக்களுக்கு புரியாதபடி எடுக்கப்படங்கள் மக்களால் பார்க்கப்படாமல் ஒதுக்கப்படுவதோடு மட்டுமன்றி.. அது மாதிரி எடுக்கபடும் மற்ற படங்களும் புரியாத மதிரி தான் இருக்கும் என்று ஒதுக்கி தள்ளி விட வழி கோலும் அல்லவா?

அவார்ட் பிலிம்கள் என்று மக்களால் கூறப்படும் இந்த படங்கள் மேனாட்டு சினிமா நுட்பங்களை அப்படியே காப்பி அடிப்பதால்(டெக்னிக்கல், திரைக்கதை, காட்சியமைப்பு)
பெரும்பாலும் படிக்காத நம் நாட்டு மக்களுக்கு அது போய் சேருவதே இல்லை.. ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமென்றால் மக்கள் தங்களை அதனோடு ரிலேட் செய்து கொள்ள முடிய வேண்டும்...

நீங்கள் குறிப்பிடும் சேரன் கூட ஆட்டோகிராப் படத்தை ஜனரஞ்சகமாக எடுத்ததால் தான் மக்களை சென்றடைந்தது.. சினிமா என்பது நம் ஊரை பொருத்தவரை இன்னும் Entertainment என்ற அளவிலேயே தான் உள்ளது.. நான் இங்கே Exceptions பற்றி பேச வில்லை.. பெரும்பான்மை மக்களை தான் சொல்கிறேன்.. அவர்களை அடுத்த கட்டதுக்கு அழைத்து செல்ல நமது சமூகத்தை நமது கணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் நமக்கு வரவேண்டும்.. மேனாட்டானின் பார்வை தான் சிறந்த்து.. அதுபடி தான் படம் எடுப்போம் என்றால்.. எப்படியோ போங்கள்..

குட்டிபிசாசு said...

//மக்களை சினிமாவால் கரையேற்ற முடியும் என்று நம்பும் அப்பாவியாய் இருக்கிறீர்களே.. தெகா..//

சினிமா என்பது மாயன் நினைக்கிறது போல சாதாரண பொருள் அல்ல! வெறும் புராணங்களை படமாக்கிட்டு இருந்த காலத்தில் பராசக்தி செய்த புரட்சி ஒன்றே இதற்கு எடுத்துக்காட்டு. அந்த பராசக்தி படம் பார்த்தவஅண்ணா ்அண்ணா சொன்ன ஒரு வாக்கியம்"தணிக்கை செய்யாமல் ஒருவேளை திரைபடத்தை்படத்தை வெளியிட்டால் தனித்தமிழ்நாட்டை கண்டிப்பாக பெற்றுவிடுவோம்".

தெகா அவர்கள் சொன்னது போல நம் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கருவி.

//விசிலடிச்சான் குஞ்சாய் இல்லாமல் அமைதியாய் நாசரின் உலக படங்களை பார்க்கும் படி செய்து விட்டால் சினிமா சமூகத்தை காப்பாற்றுமா..?//

இங்கே நாசர் என்ற தனிமனிதனை விட உலகத்தரம் என்ற பொருளில் விவாதம் சென்றுவிட்டதால், முதலில் மக்கள் ரசனையை மாற்றவேண்டும். மக்கள் தான் ரசிக்கிறார்கள் என்று குறை சொல்லுவதை முதலில் நிறுத்துவேண்டும்.

//இன்னைக்கு ரஜினியும், விஜய்யும் கொண்டு போறதை நாளைக்கு நாசர் கொண்டு போவார்... அவ்வளவு தான்..//

ரஜினியும், விஜயும் கெடுக்கிற அளவுக்கு இதுவரை யாரும் தமிழ் சினிமாவை கெடுத்ததில்லை.

தருமி said...

//மக்களை சேராத சென்றடைய முடியாத எந்த ஊடகமும் விஷயமும் வெற்றி பெற முடியாதுங்க.. //

"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை;
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி பெற்றவரில்லை" அப்டின்னு ஒரு பாட்டு இருக்கு. சரியாத்தான் அதில விஷயத்தை சொல்லியிருக்கு.
-----------------
//ரஜினி என்ற மனிதரும், ஷங்கர் என்ற மனிதரும் அதே கடின உழைப்பை தான் செய்தார்கள்.//

இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. மாயனின் கணிப்பு இது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். idiotically sincere என்று ஒன்று சொல்வார்கள். எனக்கு இந்த உழைப்பு அப்படித்தான் தெரிகிறது.
---------------------
//சினிமா என்பது நம் ஊரை பொருத்தவரை இன்னும் Entertainment என்ற அளவிலேயே தான் உள்ளது.//

ஊர் இருக்கட்டும்; மாயன் என்ன சொல்கிறார். எதற்கு பாவம் ஊரையே இழுக்க வேண்டும்?
--------------------
இந்த கருத்தைப் பற்றி நான் முன்பு எழுதியது இங்கே.

மாயன் said...

விவாதம் வேறு திசையை நோக்கி நகர்த்த பட்டு விட்டது... சினிமா சக்தி வாய்ந்த மீடியாவா இல்லையா என்பதல்ல விவாதம்.. உலக சினிமா பாணியில் அமைந்த நாசர் சொல்லும் கலைப்படங்கள் மக்களை சென்றடைகிறதா இல்லையா என்பது தான் விவாதம்...

//தெகா அவர்கள் சொன்னது போல நம் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கருவி.//

மறுக்கிறேன்.. கடந்தக்கால, நிகழ்க்கால படங்கள் எல்லாம் மிகைப்படுத்த பட்டவை... அவை நமது கலாசாரத்தின் உண்மையான பிரதிபலிப்பான்கள் அல்ல...

//இங்கே நாசர் என்ற தனிமனிதனை விட உலகத்தரம் என்ற பொருளில் விவாதம் சென்றுவிட்டதால்,//

அது தான் விவாதம்..

//ரஜினி என்ற மனிதரும், ஷங்கர் என்ற மனிதரும் அதே கடின உழைப்பை தான் செய்தார்கள்.//


அதை விழலுக்கு இறைத்த நீர் என்று தான் சொல்லியிருக்கிறேன்...

//ஊர் இருக்கட்டும்; மாயன் என்ன சொல்கிறார். எதற்கு பாவம் ஊரையே இழுக்க வேண்டும்?//

மக்களுக்கு புரியுற மாதிரி படம் எடுங்க... உங்க லட்சியத்துகாக புரியாத மாதிரி படம் எடுத்துட்டா பார்க்க வரலைன்னு மக்களை குறை சொல்லாதீங்க...

வவ்வால் said...

தெ.கா,

என்னவென்று சொல்வது , இப்படி இருக்கிங்களே , இதற்கு எல்லாம் பின்னூட்டம் போடுவது எனக்கு கட்டுப்படி ஆகும் என்று தோன்றவில்லை.

நல்ல படம் எடுப்பது தவறா என்று கேளுங்கள் ஆனால் நாசர் எடுப்பது நல்ல படம் தானே என்று எல்லாம் பேசிக்கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்!

நாமக்கல் சிபி said...

//மக்களுக்கு புரியுற மாதிரி படம் எடுங்க... உங்க லட்சியத்துகாக புரியாத மாதிரி படம் எடுத்துட்டா பார்க்க வரலைன்னு மக்களை குறை சொல்லாதீங்க...
//

Repeatu!

Unknown said...

//Repeatu!// என்னத்த ரிபீட்டு ஏன்யா ஒருத்தன் உசுறக்குடுத்து எழுதுனா அதுக்கு அடுத்தவன் சொன்ன பின்னூட்டத்த ஓசி வாங்கி ஒத்த வாத்தையில ரிப்பீட்டுன்னா என்ன அர்த்தம் ம்? இல்ல என்ன அர்த்தம்னு கேக்குறேன்? நயந்தாரா கூட ஒனக்கு சண்டைன்னா தெக்கா என்ன பன்னுவாரு

நாமக்கல் சிபி said...

அதாவது தெகா அவர்களே!

அடுத்தவர்கல் எடுக்கும் படங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு தங்கள் எப்படி விரும்புகிறோமோ அத்தகைய தரமான திரைப்படங்களை வருடத்திற்கு இரண்டு என்று எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கலாம் அல்லவா!

அடுத்தவர் படங்களை ஆராய்ந்து விமர்சிக்கும் நேரத்தில் அடுத்த படத்திற்கான கதை, கதைக் களம் போன்றவற்றை தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தலாம்!

அதுக்கும் மேல, தான் எடுக்கும் திரைப் படங்கள் எந்த அளவிற்கு மக்களைப் போய்ச் சென்றடைகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொன்று தரமான படம் எடுக்கிறோம் என்ற கட்ஸ் இருப்பவர்கள் எத்தனை பேர் பார்க்க வருகிறார்கள் என்பதைப் பற்றியும் கவலைப் படக் கூடாது.

தன்னோட நோக்கம் நிறைவேறியதா, ஒரு 4 பேரு தன் படத்தைப் பார்த்து மாறினானா என்பதில் மகிழ்ச்சி பெற வேண்டும்!

மங்கை said...

மகி பதிவுல போட்ட அதே பின்னூட்டம்...

பிறரின் துன்பங்களையும், உணர்வுகளையும், வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை எழுப்பி விடும் சிந்தனயை தூண்டும் ஊடகமாக இருப்பது நாடகமும் சினிமாவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..இதை ஆணித்தரமாக நம்புவர் நாசர்..அது மட்டும் அல்லாமல் இந்த ஊடகங்கள் மூலம் முடிந்தவரை நல்ல சிந்தனைகளை ஆரோக்கியமாக சொல்வபர்..

//மக்களை சினிமாவால் கரையேற்ற முடியும் என்று நம்பும் அப்பாவியாய் இருக்கிறீர்களே.. தெகா..///

கரையேற்ற முடியாது தான்... ஆனா ஒரு தூண்டுகோளா இருக்கும்..

மாயன் said...

யோவ் மகி

சும்மா இருந்த என்னையும் தெகாவையும் சொறிஞ்சி விட்டுட்டு தத்துவமா பேசறீங்க?.. நல்லாயிருங்கய்யா.. நல்லயிருங்க...

Arjun said...

முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்

Related Posts with Thumbnails