Monday, November 26, 2007

இவர்களும் நம் மக்கள்தான்...

நான் புதிதாக அமெரிக்கா வந்திருந்த பொழுது இந்தியா என்று ஏந்தவொரு இடத்தில் எழுதி இருந்தாலும் அதற்கு ஒரு மாஜிக் ஈர்ப்பு இருந்ததுண்டு. இன்னமும்தான். சில சமயங்களில் நான் மான்ஹட்டனில் நேரத்தை செலவு செய்யும் பொருட்டு கால்நடையாக நடந்து திரிவதுண்டு. அப்பொழுது நான் சதாரணமாக காணும் ஒரு விசயம் வழிதோரும் ஆங்காங்கே பாதாள சாக்கடையின் வெளி முகப்பை மூடி வைத்திருக்கும் கணமான மூடி (Manholes). அதன் மீது அடித்திருக்கும் ஒரு வரி "Made in India" என்றதைப் பார்த்தவுடன் கொஞ்சம் பெருமையுடன் அப்படியே பார்த்து நின்று விடுவது.


அப்படி இருக்கும் பட்சத்தில் நேற்று இது தொடர்பாக ஒரு செய்தி படிக்கக் கிடைத்தது "தி நூயொர்க் டைம்ஸ்"ல். என்ன சொல்லியிருக்காங்கன்னா, இந்த சாக்கடை மூடிகள் மேற்கு வங்கத்தில் உள்ள சக்தி இண்டஸ்டிரி என்ற நிறுவனத்தால் முழுக்க முழுக்க செங்கல் சூலையில் செங்கற்கள் தயாரிப்பது போலவே, கைப் பக்குவமாக 1400 செண்டிகிரோடு வெப்பத்தில் நின்று, எந்தவொரு தற்காப்பு கவசங்களுமின்றி வெற்றுடம்புடனும், காலணியற்ற கால்களுடனும் கொட்டும் வியர்வை மழையில் நீந்தி நின்று அதனை செய்து நூயொர்க் நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார்களாம்.


அந்த செய்தியை கொடுப்பதற்காக இந்தப் பத்திரிக்கை நிருபர் ஒருவர் புகைப்படம் எடுக்கச் சென்ற பொழுது மிகவும் பெருமையாக சுத்திக் காமித்தார்களாம். பாதுகாப்பு சார்ந்த கேள்விகளை மட்டும் கேக்கும் பொழுது இது வரையிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று கூறி புலகாங்கிதம் அடைந்து கொண்டார்களாம், அதன் நிறுவனத்தார்.


அவர்களின் தினக் கூலி கூட ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவுதானாம். ஆனால், அதே தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்கருக்கு ஒரு மணி நேரத்திற்கு 25 டாலர்களாம். கேக்கும் பொழுது என்ன தோன்றுகிறது உங்களுக்கு?


இது போலவே முன்பொருமுறை நம்மூர் கணேஷ் பீடிகள் சக்கை போடு போட ஆரம்பித்த நேரம் இங்கு, உலக மனித உரிமை கழகம் எப்படி அந்த பீடிகள் உருட்டப் பெற்று சந்தைக்கு வந்தடைகிறது என்பதனை நேரடியாகவே குழந்தைகள் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதை காமித்து அதனை இங்கு விற்பதற்கு தடை வாங்கித் தந்தார்களாம்.


இப்பொழுது, இந்த சக்தி இண்டஸ்ட்ரி அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது. அதற்காக இதற்கு முன்பு இந்த மூடிகளை பல வருடங்களாக அடி மாட்டு விலைக்கு வாங்கி வந்த இந்த New York City’s Department of Environmental Protection ஏஜென்சிக்கு இது தெரியாத என்றால் - அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி என்று கூறலாம்.


என்னமோ இது போன்று வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எல்லாம் இப்பொழுது அடித்துக் கொண்டிருக்கும் அதிர்ஷ்ட காற்றில் சுத்தமாக மறந்து போனவர்கள் என்பது மட்டும் உண்மை. ஆனால், இவர்களுக்கு மட்டும் இன்னமும் ஒரு நாளைக்கு 60 ரூபாய்க்கும் குறைவாக ஊதியத்தை வழங்கி விட்டு மற்றவர்கள் வங்கியிலிருந்து ஒரு நாளைக்கு 25 ஆயிரம் மட்டும்தான் எடுக்க முடியுமென்ற பெரிய கிணற்று வித்தியாசத்தை உருவாக்கி அதன் பொருட்டு மக்களையும் ரொம்ப நாளைக்கு பிரித்தாள முடியாது. அதன் எல்லை எங்கே நம்மை இட்டுச் செல்லும் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே.







நன்றி: தி நூயொர்க் டைம்ஸ். இந்த செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கிப் பாருங்க...

27 comments:

Agathiyan John Benedict said...

ஒரு நல்ல தகவலுக்கு நன்றி. அதுக்கு மேலே என்னத்தச் சொல்லுறதுன்னு தெரியல போங்க...

மாசிலா said...

என்னங்க நீங்க வேற!

இப்படி கடின உழைப்பு செய்யறவங்க எல்லொரும் போன ஜென்மத்தில ஏதாவது பாவம் செய்ஞ்சிருப்பாங்க. அதை நவர்த்தி செய்யத்தான் இப்படி கஷ்டப்படறாங்க. பாவக்கடன் பாக்கி இருக்குது இல்லையோ?

நீங்கதான் இப்படி வருத்தப்படறீங்க. கஷ்டப்படறவங்களே கூட இப்படி எதுவும் நினைக்க மாட்டாங்க. ஏன்னா, அவங்களுக்கு ஹிந்து மத பாவ மன்னிப்பு பாடம் சின்ன வயசிலேயே சொல்லி கொடுத்தாச்சு.

அடுத்த ஜென்மத்திலையாவது ஒரு மவராசனா, ஐ.டி படிப்பாலனா, அரசியல் வியாதியா இல்லைன்னா கொறைஞ்ச பட்சம் ஒரு நடிகனாவாவது பொறக்கிறாங்களா என நம்புவோம்!!!

:-(

நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தெகா.
;-D

சுரேகா.. said...

இந்தியத் தொழிலாளிகள்
வெப்பம் தாங்கி
நியூயார்க்கின் நாற்றம்
போக்குகிறார்கள்.

பல கசட்டு வாசல்களை
அடைப்பதல்தானோ
என்னவோ
அவர்கள் வாசலும்
மூடியே இருக்கு...!


நல்லா சொல்லியிருக்கீங்க தெகா..

நீங்களும் Made in INDIA ங்கிறதில்
பெருமைப்படுறேன்...

Thekkikattan|தெகா said...

Anony,

Your feedback has not been published since it has some personal distasted attack towards a fellow blogger. Rather you can express it in a more focussed way, so that, surely we can educate one another... thanks for coming anyway...

TheKa...

Anonymous said...

Oh God, let some software engineers read this blog who fight in blogs that there work is the most stressed one in the world.

Anonymous said...

தெக்கி,

அந்த தொழிலாளர்களுக்கு செய்யப்படும் அநியாயம் இந்திய அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலியிலேயே அவர்கள் தன்னுடைய குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியும். ஆனால் நியூயார்க்கில் வாங்கும் 25$ ஐ வைத்துக்கொன்டு தனியான ஒரு வீடு எடுத்துக்கூட தங்க முடியாது. எல்லாமே ரிலேடிவ்தான். இந்தியா இதை தயாரிக்கவில்லையென்றால் வேறு ஒரு நாடு இதைவிட குறைந்த விலையில் தயாரித்துத்தரும். மேலும் இதுவரை ஒரு விபத்து கூட நடந்ததில்லை என்பதையும் கணக்கில் எடுங்கள். வேண்டுமானால் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு செய்யப்படும் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.

Anonymous said...

I didnot amazed or surprised these.

Most of the computer prof or people who are working outside the country(using webblogs) were studied and didnot see those kind of work.

I did same in Coimbatore Molding shop. Worked from 9 std. All annual or any holiday I was on our molding shop.

I used make fun of my parents since I worked and growup in molding shop my color changed to black. This is just a fun. Still we have foundary but we donot have molding b'cos myself and my brother are in different businesses. My father still runs the foundary.

People who work hard with inteleigence succedeed but just a hard work wont do anything....

Why I am saying is my parents never went to school. Myself studied in gvt school tamil medium.

Thekkikattan|தெகா said...

வணக்கம் ஜான்! இது போன்ற செய்திகளை படிக்கும் பொழுது ஒண்ணும் சொல்ல முடியாமல் திக்கித்துப் நின்று போவது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

Thekkikattan|தெகா said...

பார்ப்போம் மாசிலா, வல்லரசாக மாறத் துடிக்கும் இந்தியா, இன்னும் எந்தந்த துறையில் எது போன்ற மாற்றங்களை எல்லாம் நிகழ்த்தி தன் மக்கள் எல்லோரையும் சுபிட்சமடைய வைக்க இருக்கிறது என்பதனை...

வருகைக்கு நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குறைந்தது பாதுகாப்பைக் கூட மதிக்கிறார்களில்லையே!
படிக்க வேதனையாக உள்ளது.
இதுக்கெல்லாம் மாற்றம் வராதா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மறந்துவிட்டேன்.
படத்தில் நடிக்கும் மிருகம், தெரு நாய்க் கெல்லாம் இருக்கும் புழு குறோஸ் போல இவர்களுக்கு ஒரு குரோசும் இல்லையா??

Anonymous said...

let's stop the production at Shakti Manufacturers..and send those employees home so they can live happily and healthily...money will pour from Room by the magic...
did anyone think if they even don't have this job..for how much they will be employed????

நானானி said...

இதே made in india வோடு இரும்பு கவசத்தை சன்னிவேலில் பார்த்துவிட்டு
ஆஹா..என்று பெருமையோடு நகர்ந்து விட்டேன்.இவ்ளோ சமாசாரம் உள்ளே இருப்பது படித்ததும் புரிந்தது.இவர்களுக்கு எந்த க்ராஸும் கிடையாது.இவர்கள் யாரையும் க்ராஸ் பண்ணாதவரை.
மனதைப்பிசையும் பதிவு..

Thekkikattan|தெகா said...

Anonymous said...
let's stop the production at Shakti Manufacturers..and send those employees home so they can live happily and healthily...money will pour from Room by the magic...
did anyone think if they even don't have this job..for how much they will be employed????
//

மேலே உள்ள அனானிதான் கிட்டத்தட்ட இரண்டு மூன்று பின்னூட்டங்கள் விட்டுச் சென்றுள்ளார் என்று நினைக்கிறேன். எவ்வளவு பொறுப்பாக இது போன்ற manpower exploitationக்கு தீர்வு கொடுக்கிறார் என்பதனை கவனிக்கவும்.

அவர் கூறுகிறார், "அந்த அறுபது ரூபாயும் அவர்களுக்கு கிடைக்காது இந்த வேளையும் போய் விட்டால் என்று..." அங்கு வந்து வேலை செய்யும் மக்கள் என்ன ஹாபிக்காகவா வந்து வேலை செய்கிறார்கள், நேரத்தை செலவு செய்து விட்டு நாங்களும் வேலை பார்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு திரிவதற்கு...

சற்றே மனசாட்சியுடன் நடந்து கொண்டால் நிர்வாகம் கிடைக்கும் வருமானத்தில் அவர்களையும், இவர்களைப் போன்று அனுசரித்து எடுத்துச் செல்ல முடியுமல்லவா...???

Thekkikattan|தெகா said...

மைக்ரோ மாஜிசியா,

சொல்ல வந்ததை நறுக்கென்று சின்ன வரிகளில் சொல்லி விட்டீர்கள்...

இதனையே கவுஜா பாணியில் சொல்லுவோமா :-))

இந்தியத் தொழிலாளிகள்
உலகத்தின் வெப்பம் தாங்கிகள்
நியூயார்க்கின் நாற்றம்
போக்கும் கிருமி நாசினிகள்!

பல கசட்டு வாசல்களை
அடைப்பதல்தானோ
என்னவோ
அவர்கள் வாசலும்
மூடியே இருக்கிறதோ என்னவோ...!


இதுக்கு பேருதான் கவுஜா, சுந்தர் :D

Thekkikattan|தெகா said...

//அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலியிலேயே அவர்கள் தன்னுடைய குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியும். ஆனால் நியூயார்க்கில் வாங்கும் 25$ ஐ வைத்துக்கொன்டு தனியான ஒரு வீடு எடுத்துக்கூட தங்க முடியாது. எல்லாமே ரிலேடிவ்தான். //

அனானி #2,

கொடுக்கப்படும் ரூபாய் அறுபதில் அவர்களால் நன்றாக குடும்பத்துடன் வாழ்க்கை நடத்த முடியுமென்று கூறுகிறீர்கள், அப்படித்தானே...

சரி, இந்த நூயொர்க்கில் பெறும் வெறும் 25$களை வைத்து ஒரு ஸ்டூடியோ கூட பிடிக்க முடியாது என்கிறீகள்... ஆனால் அவர்கள் வாரத்திற்கு முழு நேர வேலையாக 40 மணி நேரம் உழைத்தால் கூட வாரத்திற்கு சாதரணமாக 1000$ சம்பாதித்து விடுவார்கள்... இது அல்லாமல் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஓய்வுதீயம், சமூக நல காப்பீடு இத்தியாதிகள் கிடைக்கும் பிற்காலத்தில்... பார்க்கும் ஊழியர் நிறந்தரமாக அங்கு பணி புரியும் பொருட்டு... ஆனால், நம்மூரில் என்னா கிடைக்கும்...?

ப்ளஸ், வீடு, என்.ஒய்யில் மாதத்திற்கு நிறந்தரமாக வேலையிலிருந்து, சம்பளமாக 4000$ காமித்தால் மோர்ட்கேஜ் கிடைத்துவிடும்... அவர் ஒரு ஊதாரியாக இல்லாத பட்சத்தில் இல்லையா, அனானி... அப்பன்னா நீங்க எந்த 25$ வாங்கிறது பத்தாதுன்னு சொல்லுங்க...

Thekkikattan|தெகா said...

அனானி #3,

People who work hard with inteleigence succedeed but just a hard work wont do anything....

Why I am saying is my parents never went to school. Myself studied in gvt school tamil medium.//

தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

எவ்வளவு கடினமானதொரு வேலை என்பது உங்களின் அனுபவம் கொணர்ந்திருக்கும்... இருந்தாலும், அப்படி படிக்காதவர்களும் இந்த பொருளதார சூறாவலி விலை ஏற்றத்துடன் நம்முடன் தானே வாழ வேண்டி வருகிறது, அவர்களையும் கண் கொண்டு பார்த்து அழைத்துச் செல்வது நலம் பயக்கும்தானே in the long run?

Anonymous said...

I am the one who talked about whaqt would happen even if they don't have this job.
My point was (or what I want to say) it is not they are just being expolited by New York Development or Shakthi Manufacturers..
we have to look following issues-
1) for how much profit Shakthi manufacturers making per manhole?
2) whose fault it is for that working condition(or salary)?
3) what is the condition of workers in similar trades through out india?
4) and why they are still doing this? are those people bonded slaves of Shakthi manufacturers? what is keeping them there?

your article didn't explore anything..you are just slinging mud everywhere....
Those who work hard and industrious are moving ahead..
but i agree in onething..that humanity is dying in india...

Sarvam Dollars Mayam...

Thekkikattan|தெகா said...

Anony,

I have a simple answer to all of your four questions - the answer is தனி மனித சுயநலம், சுரண்டல் in all level of ruling hiarchies, (from politician to industry running elites...) that is all.

You yourself put it in a nutshell that ... but i agree in onething..that humanity is dying in india.... Therefore, what is left there still that I have to say to continue this conversation, huh?

மங்கை said...

theka thoongap pogumbothu ithu padichaa...hmmm...

enna solla.... manasa pisaiyuthu....

kanla kanneera thadukka mudiyalai...

Thekkikattan|தெகா said...

குறைந்தது பாதுகாப்பைக் கூட மதிக்கிறார்களில்லையே!
படிக்க வேதனையாக உள்ளது.
இதுக்கெல்லாம் மாற்றம் வராதா?//

வாங்க யோகன் - பாரீஸ் அய்யா, நீங்கள் எல்லாம் இங்கு வந்து போவது ஆறுதலாக உள்ளது...

அந்த பாதுகாப்புக் கூட இப்படி அலட்சியம் செய்யப் படுகிறதே என்று நினைத்துத்தான் இந்தப் பதிவே இங்கு...

Thekkikattan|தெகா said...

வாங்க நானானி,

இதே made in india வோடு இரும்பு கவசத்தை சன்னிவேலில் பார்த்துவிட்டு
ஆஹா..என்று பெருமையோடு நகர்ந்து விட்டேன்.//

அப்ப நீங்களும் நம்ம கேசுதான்னு சொல்லுங்க...

//இவர்களுக்கு எந்த க்ராஸும் கிடையாது.//

என்ன இப்படி சொல்லிட்டீங்க, இவர்களுக்கு ஏசு சுமந்த அந்த க்ராஸ் கண்டிப்பாக கிடைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும்...

Thekkikattan|தெகா said...

Mangai,

Dont feel so bad, at least you are feeling sorry for them... that shows in case, if you happened to own a foundary like that one you might be more humane to your employees... :-)

Unknown said...

நல்ல தகவல் தெக்ஸ். நானும், எங்கே மேட் இன் இண்டியா பாத்தாலும் கொஞ்சம் கர்வத்தோட நடப்பேன்.

1 டாலர் வாங்குற அந்தத் தொழிலாளிக்கு வாய்க்கும் நிம்மதியான இரவுத்தூக்கம், 25 டாலர் வாங்கும் நியூயார்க் காரனுக்கு இருக்குமாங்கிறது சந்தேகம்தான்.

காட்டாறு said...

படித்ததும் மனசு அந்த தொழிலாளர்களிடம் சென்றது என்னவோ உண்மை.

உங்க மறுமொழில ஒன்னு மனசை இழுத்து நிறுத்தியது.
//
இது அல்லாமல் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஓய்வுதீயம், சமூக நல காப்பீடு இத்தியாதிகள் கிடைக்கும் பிற்காலத்தில்... பார்க்கும் ஊழியர் நிறந்தரமாக அங்கு பணி புரியும் பொருட்டு... ஆனால், நம்மூரில் என்னா கிடைக்கும்...?
//
நாம் (இந்தியர்) இவ்வேலையை செய்யலைன்னா... வேறு கீழ்நாடுகள் செய்ய ரெடியா இருக்காங்க. இந்த உண்மையை மறுக்க முடியாது, இல்லையா? அதனால நாம் இப்படிசெய்ய சட்டம் கொண்டு வந்தா? எந்த வேலையையும் திறம்பட செய்து கொடுக்க இருக்கும் நம்ம தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் செய்து கொடுப்பது போல் மெடிகல், தொழிலாளர் நல காப்பீடு, மற்றும் கட்டாய பாதுகாப்பு சூழ்நிலை ஏற்படுத்தி கொடுக்கலாம். சரி தானே?

Thekkikattan|தெகா said...

Indeed, Doctor... very touchy one too!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வேலைகளை வெறும் பத்தும் இருபதுக்கும் செய்கிற தொழிலாளர்களை பார்க்கிறோம்..படித்து மனம் கலங்கிபோனது உண்மை..

Related Posts with Thumbnails