Thursday, March 20, 2008

ப்ரகாஷ்ராஜ், வெள்ளித் திரை - செய்தியாளர்கள் சந்திப்பு!

நேற்று நான் ட்யூப்தமிழ்.காம் தளத்தில் ப்ரகாஷ்ராஜின் வெள்ளித் திரை படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பை ஒரு 30 நிமிடங்கள் ஓடக் கூடிய படக் காட்சியுடன் காண நேர்ந்தது.

ஏற்கெனவே, நான் ப்ரகாஷ்ராஜின் "சொல்லாததும் உண்மை" சமீபத்தில்தான் படித்ததிலிருந்து அவரைப் பற்றியான எனது பார்வையை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ள நிலையில் இந்த 30 நிமிட படக் காட்சி நிச்சயமாக அவரைப் பற்றி எழுதியே ஆக வேண்டுமென்ற ஒரு நிலையில் என்னை கட்டிப் போட்டு விட்டது. இருந்தாலும், அவரின் "சொல்லாததும் உண்மை"யைப் பற்றி பிரிதொரு சமயத்தில் விளக்கமாக எழுதலாமென்று இருக்கிறேன்.

இப்பொழுது இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் ப்ரகாஷ்ராஜ் எதனை நிறுவ முயல்கிறார் என்பதனைப் பார்ப்போமா. ப்ரகாஷின் தைரியம் நிச்சயமாக பாரட்டப்பட வேண்டிய ஒன்று. அவரின் தைரியத்திற்கு அவர் வைத்திருக்கும் மாற்றுப் பெயர் - நம்பிக்கை.

இன்றைய காலக் கட்டத்தில் தமிழக சினுமா வெறும் போட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்ற உத்தியில் இயங்கும் ஒரு சிறு ஃபார்மிலாவைக் கொண்டே இயங்குமொரு பணச் சந்தை. மீறிக் கேட்டால் மக்களின் ரசனை அப்படி இருக்கும் பட்சத்தில் என்ன டிமாண்ட் இருக்கிறதோ அதனைத் தான் எங்களால் கொடுக்க முடியுமென்ற பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு கிடையே இது போன்ற மனிதர்களும் அங்கே இருந்து எதிர் நீச்சல் போட தயாராகி வருவது ஒரு ஆரோக்கியமான சூழல் திரண்டு வருவதை காட்டுகிறது.

நீங்கள் அனைவரும் இந்த விடியோ லிங்கை க்ளிக்கித்துப் பாருங்கள், அந்த சுட்டி வேலை பார்க்கலைன்னா கோலிவுட்டுடெ.காம் போங்க, உங்களின் நிமிடங்கள் ஒரு நல்ல சிந்தனையாளனுடன் உரையாடிவிட்டு வந்த திருப்தியில் அமையும். அவ்வளவு ஆழமான பேச்சு இது வரைக்கும் இந்த டின்சல் உலகில் இப்படி தீர்க்கமாக தன் சார்ந்து இருக்கும் துறையையே கேள்விக்கு உள்ளாக்கி அதன் மூலம் தன்னுடைய தொழில் தர்மம் காத்து, நல்ல விசயங்களை வெளிக் கொணர வேண்டுமென்று ஒரு சாதாரண பார்வையாளன் நிலையிலிருந்து பேசிய கலைஞனை நானறியேன்.

இன்றையச் சூழலில் நடிக, நடிகை என்றாலே கோழிமுட்டை போன்ற பரட்டை தலைக் கேசத்துடனும், அதீத மேற்கத்திய உடையலங்காரத்துடனும், இன்னொரு கிரகத்திலிருந்து இறங்கிய வேகத்தில் திக்தித், திணறி பேசும் மொழி, காலியான மொட்டை மாடியுடனும் இருக்கும் பல கலைஞர்களுக்கிடையில் இது போன்று அலட்டலே இல்லாத புத்திசாலிகளைப் பார்க்கும் பொழுது, நம் தமிழ் சினுமா உலகத்தில் அதனுள் வாழும் பல அரைகுறைகளையும் சிந்திக்க வைக்கும் சூழலை நோக்கி நகர வைக்கச் செய்கிறதோ என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

எல்லாம் சரி, நான் இன்னமும் இந்த வெள்ளித் திரை படம் பார்க்கவில்லை, இந்த செய்தியாளர்கள் எதற்காக இப்படி வியர்வை சிந்த நோண்டி, நொங்கெடுத்து ப்ரகாஷ்ராஜிடம் சண்டை பிடிக்கிறார்கள் என்று யாருக்காவது விளங்கினால் எனக்கு அந்த விடியோவை பார்த்துவிட்டு பின்னூட்டங்களில் சொல்லி விட்டு போங்கள்.

வேறு எந்த படத்திற்காவது யாரவது இது போன்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி இந்தப் படத்தின் மூலமாக நீங்கள் சொல்ல வந்த கருத்து என்ன இந்த சமூகத்திற்குன்னு கேள்வி கேப்பாங்களா? இல்லை அது போன்று நடத்தத்தான் தைரியமிருக்கா? ஏதோ, இதன் மூலம் முன்னோடியாக ஒரு நல்ல செயலை ப்ரகாஷ்ராஜ் அறிமுகப் படுத்தி வைச்ச மாதிரி இருக்கு.

ஆனா, அந்த கூட்டத்திற்கு வந்து ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்ட செய்தியாளர்களை பார்த்தால் யாரோ "என்வலாப்" (பண முடிப்பு - ப்ரகாஷ்ராஜே கொடுத்திருக்க மறுத்திருக்கும் பட்சத்தில்) கொடுத்து அனுப்பி பொறுப்பாக பார்த்துக்கச் சொன்ன மாதிரி எனக்குத் தோணச் செய்தது ;)). அந்த யாரோக்கள் எல்லாம் ப்ரகாஷ்ராஜ் இப்படி நமது முகத்திரையை அகற்றிக் காமிக்க எத்தனிக்கிறானே என்றும் செய்யக் கூடுமோ...

34 comments:

Thekkikattan|தெகா said...

அந்த விடியோ லிங்க் வேலை பார்க்குதா இல்லையா?

TBCD said...

வேலை செய்யவில்லை..

உரலைப் போட்டு விடுங்கோ...

வடுவூர் குமார் said...

லின்க் வேலை செய்யவில்லை.

Anonymous said...

விகடனில் வந்த 'சொல்லாததும் உண்மை' உண்மையிலேயெ நான் அறிந்திராத ஒரு பிரகாஷ்ராஜைக் காட்டியது. அதைப் பற்றியும் நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்

வீடியோ இணைப்பு வேலை செய்யலை :(

நாடோடி இலக்கியன் said...

"சொல்லாததும் உண்மை"தொடரில் எல்லோருக்குள்ளும் இருக்கும் வெளியில் சொல்ல தயங்குற இரட்டை வாழ்க்கையை,உலககறிந்த நமக்கும்,நாமறிந்த நமக்கும் உள்ள முரண்பாடுகளை தைரியமாக சொல்ல துணிந்திருப்பார்.சொல்லாததும் உண்மை பற்றிய உங்களது பார்வையை விரைவில் பதிவாக எதிர்பார்க்கிறேன்.

//அந்த விடியோ லிங்க் வேலை பார்க்குதா இல்லையா?//
நானும் அதையேதாங்க கேட்கிறேன்.
:)

கொண்டோடி said...

இணைப்பு வேலை செய்கிறது.

Thekkikattan|தெகா said...

நண்பர்களே!

சாரி, சாரி இதோ அந்த லிங்க் Prakashraj Press Meeting

எனது பதிவிலேயே தடித்த பச்சை நிற அடிக்கோடிட்ட எழுத்துக்களிலும் எலியை வைத்து அழுத்தினால் எடுத்துச் சென்றிக்கணுமோ... இப்ப ட்ரைப் பண்ணிப் பாருங்க... :-).

நாமக்கல் சிபி said...

பிரகாஷ்ராஜ் எப்பவுமே
சராசரி நடிகனையும் தாண்டி சமூக சிந்தனையுள்ள ஒரு படைப்பாளி என்பது மறுக்க முடியாத உண்மை!

நீங்க என்ன சொல்றீங்க தெக்ஸ்?

Thekkikattan|தெகா said...

//பிரகாஷ்ராஜ் எப்பவுமே
சராசரி நடிகனையும் தாண்டி சமூக சிந்தனையுள்ள ஒரு படைப்பாளி என்பது மறுக்க முடியாத உண்மை!

நீங்க என்ன சொல்றீங்க தெக்ஸ்?//

ரொம்ப உண்மை சிபி!

அதாவது அங்கே உட்கார்ந்துக்கிட்டு அந்த சினிமாக்காரன் இமேஷ்ல இருந்து பேசாம
ஒரு சாதராண ஆள் மாதிரி
இருக்கணுமின்னு தோன்றதே ஒரு பெரிய விசயம்.

உண்மையை உண்மையா
நினைச்சிக்கிட்டு, சொல்லிக்கிட்டு, அதனையே செயலிலும் காட்டக் கூடிய இடத்தில் இருந்துட்டு செஞ்சிக்காமிக்கிறதுதான் அவர்கிட்ட இருக்கிற மிகப் பெரிய ப்ளஸ்.

இது போன்ற படித்த, மனதுள்ள ஆட்கள் அங்கே வேண்டும்
அப்பத்தான் மற்ற இளம்தாரி புள்ளைகள் கோடிக்கணக்கிலே வாங்கிட்டு ஒரு எழவும் தெரியாம சும்மா மேடைகளில் பவ்யமாக கைகளை கட்டிக் கொண்டு நின்றாலே எல்லாமே தெரிஞ்சிக்கிட்டு எவ்வளவு அடக்கமான புள்ளகளா இருக்கு அப்படின்னு வெளிப் படுத்துற ச்சீப் ஸ்டண்ட்களுக்கிடையே வெளுக்க வைக்கிற இந்த "தைரியமும், நோர்மையும்" வேண்டும்.

இது போன்ற ஆட்கள் அது போன்ற நிஜ வாழ்க்கையிலும் ஆக்ட்வுடும் ஆட்களுக்கு பயம் பிடிக்க வைத்து முகமூடியை அகற்ற தலைப்படும் ஒரூ சிறந்த ஆண்டிடோட். :-).

கோவி.கண்ணன் said...

தெகா,

நல்ல தொகுப்பு, தொடராக எழுதுங்கள்,

இங்கே சினிமா கலைஞர்கள், பேரும் புகழும், பணமும் அடையவேண்டும் என்று நினைத்து, அதற்காக காய் நகர்த்தி ரசிகர் கூட்டம் பெயரில் இளைஞர்களை திசைத்திருப்பியதைத் தவிர்த்து உச்சநடிகர்கள் தமிழ்சினிமாவுக்கு எதுவும் செய்ததில்லை.

பிராகாஷ் ராஜ் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த மிக நல்ல மனிதர் மற்றும் தரமான நடிகர்.

நான் எனது 'யாரெல்லாம் தமிழர்கள் ?' என்ற இடுகையில், பிரகாஷ்ராஜ் பற்றி எழுதி இருக்கிறேன்.

நேரம் இருந்தால் படித்துப்பாருங்கள்.

http://govikannan.blogspot.com/2008/02/blog-post_19.html

சுரேகா.. said...

நல்ல பதிவுங்கண்ணா..

வெள்ளித்திரை படத்துல ஒரு டயலாக் வரும்.

ஜனங்க சிரிக்கணும்னு நெனச்சு நாம சீன் வக்கிற எடத்துல அவுங்க சிரிக்கிறாங்க..!

ஜனங்க அழணும்னு நெனச்சு சீன் வக்கிற எடத்துல
அவுங்க அழறாங்க!

அவுங்க என்ன ஆகணும்னு நாம ஆபாசமா சீன் வக்கிறோம்? னு

அதுதான் நிஜம்...

அந்த வகையில் மக்கள் ரசனையை குறைச்சு மதிப்பிடாத பிரகாஷ் சார் மாதிரி கலைஞர்களின் காலம் ஆரம்பமாகும் காலம் இது!

Thekkikattan|தெகா said...

tbcd, வடுவூர் குமார் திரும்ப வந்து லிங்கை க்ளிக்கி விடியோ பார்த்தீங்களா... பார்த்திட்டு சொல்லுங்கானும் எப்படி நம் "கைகட்டு நடிப்பு உலகத்திற்கிடையே" ப்ரகாஷ்ராஜின் கான்ஃப்ரன்சின் போனீச்சின்னு :).

Thekkikattan|தெகா said...

Anonymous said...

விகடனில் வந்த 'சொல்லாததும் உண்மை' உண்மையிலேயெ நான் அறிந்திராத ஒரு பிரகாஷ்ராஜைக் காட்டியது. அதைப் பற்றியும் நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்

வீடியோ இணைப்பு வேலை செய்யலை :(//

அநானி, நீங்க அறிந்திராத ப்ரகாஷ்ராஜா... எப்படியாக பார்த்தீர்கள் :). சொல்லுங்க அறிந்து கொள்வோம்... எனக்கு யப்பாடா இப்படி ஒரு மனுசனோட சமகாலத்தில் வாழப் போறோமேன்னு பெருமையா இருந்துச்சு... நிஜம் சுடுங்க - அதனை ப்ரகாஷ்ராஜ் கையில எடுத்துட்டார், பேசுவோம் அதனை அசுவாசமாக பின்னாடி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விமர்சனம் அப்படிங்கறது எப்பவுமே யாராலும் தாங்கிக்கமுடியாத ஒன்னு.. படத்தை விமர்சனம் செய்தாங்க.. விஜியால தாங்கமுடியல..(ந்ல்லா இருக்குன்னு சொன்னதும் அபிப்பராயம் தான்னு அவரே சொல்றார்) நல்லப்படத்தை ஏன் விமர்சனம் செய்யறீங்கன்னு கேக்கறார்..

படத்துல அதே தான அவரும் செய்திருக்காரு .. சினிமாக்காரங்களை..அதை அவரு பதிவு செய்தேங்கறார்..

பேட்டியில் ப்ரகாஷ்ராஜும் அதே தான் செய்யறார்.. நேத்துவந்தவன் புயலுன்னு பேரெடுக்கறான்னு சொன்னா.. அப்படி யார சொல்றாருன்னு தான் நினைப்பு போகும்..
கிண்டலடிக்கல செல்லம் நகைச்சுவையா தானேங்கறார்..
கேள்வி ஏன் கேக்கறாங்கன்னா கேக்கறதுக்காகத்தான் ப்ரஸ் மீட் .. கேட்டாத்தான் பதில் கிடைக்கும்..
அவங்க வியூல சரியாப்படறது கேக்கறவ்ங்க வியூல தப்பாப்படலாம்..

நேர்மையான மனுசன்..
ஆனா நல்லது சொல்லும்போது அடுத்தவனுக்கு வலிக்காம சொல்றது கஷ்டம் தானே..

Radha Sriram said...

நல்லாத்தான் இருக்கு ப்ரெஸ் மீட்..என்ன இந்த "செல்லம் செல்லம்னு" சினிமா வசனத்த சொல்லாம இருந்திருக்கலாம்..:):)

Anonymous said...

பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளின் தரம், அவர்கள் செல்ல வேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

Thekkikattan|தெகா said...

//"சொல்லாததும் உண்மை"தொடரில் எல்லோருக்குள்ளும் இருக்கும் வெளியில் சொல்ல தயங்குற இரட்டை வாழ்க்கையை,உலககறிந்த நமக்கும்,நாமறிந்த நமக்கும் உள்ள முரண்பாடுகளை தைரியமாக சொல்ல துணிந்திருப்பார்.//

வாங்க நாடோடி இலக்கியன்,

அப்படி சொல்லத் துணிந்ததால் தானோ என்னவோ இது போன்ற நிஜத்தை தொட்டுப் பார்க்க விரும்பும் மனிதர்களின் சொந்த வாழ்க்கை கொஞ்சமே ஆட்டம் கண்டு விடுகிறது. அப்படி ஆட்டம் காணமல் இருக்க வேண்டுமெனில் தேவை எல்லோருக்கும் "முகமூடி" அதனைத்தான் அணியச் சொல்லி படுத்துகிறார்கள்...

//சொல்லாததும் உண்மை பற்றிய உங்களது பார்வையை விரைவில் பதிவாக எதிர்பார்க்கிறேன்.//

கண்டிப்பாக ஒரு இரண்டு, மூன்று பதிவுகளாக போட்டுத் தள்ளிவிடுவோம் வந்து போங்க, எப்பவாவதுதான் உங்களை எல்லாம் பார்க்க முடியுது இங்கன... எங்கே போயிட்டீங்க :).

Unknown said...

சூப்பர்களுக்கும், தலைகளுக்கும், புரட்சிகளுக்கும் நடுவில், பிரகாஷ்ராஜ் வித்தியாசமான நடிகன் தான். 'சொல்லாததும் உண்மை' பத்திரிகையில் வந்த போது கொஞ்சம் படித்திருக்கிறேன். இந்த மாதிரி தைரியத்துடன் வேறு யார் இருக்கிறார்கள் என்பதை யோசித்தால், யாருமில்லை!

குடும்பத்துடன் அமர்ந்து நெளியாமல், ரிமோட்டில் கை வைக்காமல் படம் பார்க்கச் செய்யும் இவரின் வித்தியாசமான படங்கள் அதிகமாக வெளிவரவேண்டும்.

அப்புறம் தெக்ஸ், சுட்டி வேலை செய்யவில்லை. அதனால், பத்திரிக்கை மூளைகள் என்ன கேட்டன என்பதைப் பார்க்க முடியவில்லை!

Thekkikattan|தெகா said...

நன்றி கொண்டோடி...!

வாங்க கோவி,

//இங்கே சினிமா கலைஞர்கள், பேரும் புகழும், பணமும் அடையவேண்டும் என்று நினைத்து, அதற்காக காய் நகர்த்தி ரசிகர் கூட்டம் பெயரில் இளைஞர்களை திசைத்திருப்பியதைத் தவிர்த்து உச்சநடிகர்கள் தமிழ்சினிமாவுக்கு எதுவும் செய்ததில்லை.//

நீங்க சொன்ன கால கட்டத்தில்தான் நாம இப்படி ஒரு ஆள காண நேர்ந்திருக்கு, அதனை அடிக்கோடிட்டு காமிக்கவே இந்தப் பதிவு. நாம பேச நினைப்பதை, ப்ரகாஷ்ராஜ் அப்படியே பேசுவதும் அதனை செயலாக்கவும் முயற்சிப்பதே நிச்சயமாக ஊக்குவிக்கபட வேண்டிய விசயம்.

கண்டிப்பாக அவர் எழுதிய புத்தகத்தில் ""மொழி"" பற்றியான அவரது புரிந்துணர்வுகள் தனியாகவே டிஸ்கஸ் பண்ணப் பட வேண்டிய மற்றொரு விசயமும் கூட... உங்க பதிவு பக்கம் போயிட்டே இருக்கேன்.

Thekkikattan|தெகா said...

சுரேகா!

ஜனங்க சிரிக்கணும்னு நெனச்சு நாம சீன் வக்கிற எடத்துல அவுங்க சிரிக்கிறாங்க..!

ஜனங்க அழணும்னு நெனச்சு சீன் வக்கிற எடத்துல
அவுங்க அழறாங்க!

அவுங்க என்ன ஆகணும்னு நாம ஆபாசமா சீன் வக்கிறோம்? னு//

இது, இது வசனம்? இன்னமு வெள்ளித் திரை படம் பார்க்க வாய்ப்பு கிட்டவில்லை.

இங்கு அந்த வரிகளை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்!

//அந்த வகையில் மக்கள் ரசனையை குறைச்சு மதிப்பிடாத பிரகாஷ் சார் மாதிரி கலைஞர்களின் காலம் ஆரம்பமாகும் காலம் இது!//

மிகச் சரி. சீக்கிரமாக நீயும் அதனில் ஐக்கியமாகி ரசனையின் தரத்தை உயர்த்த வாழ்த்துக்கள்.

Thekkikattan|தெகா said...

வாங்க கயல்,

//விமர்சனம் அப்படிங்கறது எப்பவுமே யாராலும் தாங்கிக்கமுடியாத ஒன்னு.. படத்தை விமர்சனம் செய்தாங்க.. விஜியால தாங்கமுடியல..(//

இது போன்று ஊடாடினாத்தானே விசயங்களை நாம பேசிக்க முடியும் :). உங்களுக்கு ரொம்ப விளக்கமா பதில் சொல்லப் போறேன்.

அப்படி விமர்சனங்களை ஏத்துக்கிற பக்குவமும், முன் பழக்கமும் இல்லைன்னா இவ்வளவு தைரியமா இந்தக் கூட்டத்தை இப்படி ஒரு சிக்கலான விசயத்திற்கு கூட்டிருப்பாங்களா? இது போன்ற சந்திப்புகள் இயக்குனர் விஜிக்கு வேண்டுமானல் புதிதாக இருக்கலாம். ஏதாவது உணர்ச்சிப் பூர்வமாக கொட்டியிருப்பார்.

ஆனால், ப்ரகாஷ்ராஜும் - ப்ரித்தியும் நன்றாகவே நம்மூர் செய்தியாளர்களின் சப்பை கேள்விகளுக்கு அட க்ரோ-அவுட் ஆஃப் திஸ் நான்சென்ஸ் என்ற பாணியில் மிக்க பொறுமையாகவே பதிலுரைத்த மாதிரிதான் இருந்தது.

நமக்காக, சொல்லப் போனால் இந்த செய்தியாளர்கள்தான் நாம கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு நமக்கு பதில் வாங்கித் தரும் நிலை போய் இன்று பணத்தைப் போட்டு படமெடுத்தவனே, நல்ல கேள்வியா கேளுங்கப்பான்னு சொல்ல வேண்டி வந்திருக்கு :).

நீங்க "பருத்திவீரன்" படம் பார்த்தீங்களா? அதில ஒரு ரேப் சீன் வரும், அதனைப் பற்றி எந்த வார, தின பத்திரிக்கைகளிலாவது ஒரு சிறு குறிப்பு எழுதப் பட்டிருந்ததா? அதாவது, குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படமென்றாலும், இது போல ஒரு சீன் கொஞ்சம் நெளிய வைக்கலாம், எனவே மக்களே முடிவு பண்ணிக்கங்கன்னு சொல்ற மாதிரி... யாராவது சொல்லியிருந்தார்களா?

அந்தப் படத்தை நான் என் குடும்ப சகிதமாக ஒரு பத்து பேர் சென்று பார்த்துவிட்டு அதில் ஒரு நான்கு பேர் அப்படியே "லாக் அவுட்"ஆகி இரண்டு மூன்று நாட்களுக்கு சாப்பிடக் கூட பிடிக்காமல் திக் பிரமை பிடித்துருந்த நிலையில் என்னய யோசிக்க வைத்தது, இது... ஏன் இதனைப் பற்றிய குறிப்பு எங்குமே எழுதப் பட வில்லைன்னு... அப்ப என்ன நடந்துருக்கு?

//பேட்டியில் ப்ரகாஷ்ராஜும் அதே தான் செய்யறார்.. நேத்துவந்தவன் புயலுன்னு பேரெடுக்கறான்னு சொன்னா.. அப்படி யார சொல்றாருன்னு தான் நினைப்பு போகும்..
கிண்டலடிக்கல செல்லம் நகைச்சுவையா தானேங்கறார்..
கேள்வி ஏன் கேக்கறாங்கன்னா கேக்கறதுக்காகத்தான் ப்ரஸ் மீட் .. கேட்டாத்தான் பதில் கிடைக்கும்..
அவங்க வியூல சரியாப்படறது கேக்கறவ்ங்க வியூல தப்பாப்படலாம்..//

அப்படி சுட்டிக்காட்டினது ஒரு ஆரோக்கியமான கிண்டல்தானே. ச்சும்மா, சும்மா கையைக் கட்டிக்கிட்டு நான் அதிகமா பேச மாட்டேன், ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்கிற போர்வையில சும்மா மார்க்கெட்டிங் ஸ்டண்ட் மட்டும் அடிச்சிட்டு பேக்க்ரவுண்டில் இது போன்ற புரட்சிப் பேர்களை அவர்களே சென்று சூட்டிக் கொள்வதனை ஒரு சக கலைஞனாக கலாய்த்தது நல்ல ஆரோக்கியமான சிந்தனையை வளரா நிலையிலிருக்கும் சிறுவர்களுக்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளட்டுமே... அட மனசில இருக்கிறதை பேசட்டுங்க, அதன் மூலம் நல்லது கெட்டதை தெரிஞ்சிக்கலாமே அட்லீஸ்ட் rather than just be dumb asses... all the time :)).

//நேர்மையான மனுசன்..
ஆனா நல்லது சொல்லும்போது அடுத்தவனுக்கு வலிக்காம சொல்றது கஷ்டம் தானே..//

முழிச்சிக்கிட்டே தூங்குறது மாதிரி நடிக்கறவங்களுக்கிடையே இது போன்ற தார்வூசிகள் தேவைப்படுது, சுறுக்கின்னு குத்தி எழுப்ப... எத்தனை காலம் தான் பொறுமையும், சினிமத்தனமான நடிப்பு தினசரி வாழ்க்கையிலும் எடுபடும்... விடுங்க, let him bring out those rats out of the burrows in his own way, since he is in that field he should know what is he doing...

Thekkikattan|தெகா said...

Radha Sriram said...

நல்லாத்தான் இருக்கு ப்ரெஸ் மீட்..என்ன இந்த "செல்லம் செல்லம்னு" சினிமா வசனத்த சொல்லாம இருந்திருக்கலாம்..:):)//

எனக்கும் கூட ஏன் இப்படி இவரு இது போல என்னங்கண்ணா, செல்லம்-செல்லமின்னு விளிக்கிறாருன்னு தோணிச்சி...

ஆனா, ஒரு நடிகர்னா வாய ஜிப் போட்டு மூடி வைச்சிக்கிட்டு இருக்கணுமின்னு இருக்கிற இமெஜ்யை உடைச்சி வெளிய நிக்கிறதின் ஒரு அடையாளமா இந்த gestures எல்லாம் எடுத்துக்குவோம்... :) இருந்தாலும் அதில ஒரு உள்குத்து இருந்திருக்குமோ... அண்ணான்னு விளிச்சவர் கடா மீசையும், பெரிய தொப்பையுமாவும்... செல்லமின்னு விளிச்சவர் ஒரு விசிலடிச்சான் குஞ்சாக அவரது அறிவார்ந்த கேள்விகளை வைப்பதனைக் கொண்டு அப்படி கூப்பிட்டிருக்கக் கூடுமோ :)) (என் அனுமானங்கள்)...

Thekkikattan|தெகா said...

Anonymous said...

பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளின் தரம், அவர்கள் செல்ல வேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.//

அநானி,

கேள்விகள் கேக்கிற திறமையோடத்தான் வேலையில சேர்ந்த்திருப்பாங்க... இப்படி என்வலாப் வாங்கி, வாங்கி செய்ற தொழிலே மறந்து போயிருக்கும் இப்ப :).

Anonymous said...

நடிகர் சங்கம் உங்க பதிவு மேலேயும் ஒரு கண்ணு வைச்சிருக்காங்களாம். போலீசுக்கிட்ட சொல்லி சென்சார் பண்ண வைக்கப் போறாங்களாம் ;-)

கப்பி | Kappi said...

தெகா

இப்பத்தான் படத்தைப் பார்த்துட்டு அப்படியே பத்திரிகையாளர் சந்திப்பையும் பார்த்துட்டு வரேன்..

எடுத்துக்கொண்ட களத்திற்காகவும் துணிவிற்காகவும் பாராட்ட வேண்டிய திரைப்படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் படத்தில் காட்சிகளில் ஒரு தொடர்ச்சி இல்லாத உணர்வு..எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் உண்டான ஏமாற்றமாகவும் இருக்கலாம்.

பேட்டிக்கு வருவோம்..நல்ல படம் எடுத்திருக்காங்க..அதற்காக பாராட்டுதலையும் அங்கீகரித்தலையும் எதிர்பார்ப்பது இயற்கையே..அதற்காக விஜி 'நல்ல படத்தை குத்தம் சொல்லாதீங்கபா'ன்னு சொல்றது ரொம்ப ஓவரு :))..படத்திலுள்ள குறைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருக்கவேண்டும்..ஆபாசம் இல்லாமல் படம் எடுத்திருக்கேன்னு திரும்ப திரும்ப சொன்னா அப்ப ஆபாசம் இல்லாம என்ன எடுத்தாலும் நல்ல படம் ஆயிருமா? (ofcourse இது நல்ல படம் தான்) படத்தோட ப்ளஸ் பாயிண்ட்களை சொல்லி அங்கிருந்து பேட்டியைக் கொண்டு சென்றிருக்க வேண்டும்..அதுல கொஞ்சம் சொதப்பிட்டார்.


அதே நேரத்துல பத்திரிகையாளர்கள் கேள்விகள் செம மொக்கை...

1. ஏன் இந்த படத்தை எடுத்தீங்க?
2. மக்களுக்கு புரியுமா?
3. உங்க ஆளுங்களையே கிண்டல் பண்றீங்களே?
4. விஜி எப்படி எங்க விமர்சனத்தை ஒத்துக்காம போகலாம்

அரை மணி நேர பேட்டியில் இந்த நான்கு கேள்விகள் மட்டுமே வெவ்வேறு விதமாகக் கேட்கப்பட்டன..கண்டிப்பா சினிமா நிருபர்கள், படம் பார்த்துட்டு தான் வந்திருப்பாங்க..இன்னும் விரிவாக கேள்விகள் கேட்டிருக்கலாம்.


பிரகாஷ்ராஜ் பல சந்தர்ப்பங்களில் அவரையும் அவருடைய நோக்கங்களையும் தெளிவாகவே வெளிக்காட்டிவந்திருக்கார்..இந்த பேட்டியிலும். பிரகாஷ்ராஜ் பாராட்டப்படவேண்டிய கலைஞன்!! சினிமா நடிகர்களை/கலைஞர்களை கேள்விகளுக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்படுத்தி வைத்திருக்கும் நிலையை நேர்மையாக எதிர்ப்பது பாராட்டுதலுக்குரியது. நடிகன் ஒன்னும் ஆகாயத்துல இருந்து குதிச்சிடலைன்னு இவரை மாதிரி நாலு பேரு இறங்கிவந்தா நிலைமை கொஞ்சம் சரியாயிரும்!

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூராரே,

//சூப்பர்களுக்கும், தலைகளுக்கும், புரட்சிகளுக்கும் நடுவில், பிரகாஷ்ராஜ் வித்தியாசமான நடிகன் தான். 'சொல்லாததும் உண்மை' பத்திரிகையில் வந்த போது கொஞ்சம் படித்திருக்கிறேன். இந்த மாதிரி தைரியத்துடன் வேறு யார் இருக்கிறார்கள் என்பதை யோசித்தால், யாருமில்லை!//

என்ன தலைகளுக்கா பஞ்சம், தடுக்கி விழுந்தா ஒரு தலைமேலதான் விழுவோம்... அந்தளவிற்கு "வெறும்" தலைகள்தான் இருக்கு :). அந்த தைரியம்தான் இங்கே நம்மை இன்னொரு சக பயணியான அவரைப் பற்றி பேச வைச்சிருக்கு, இல்லையா?

//குடும்பத்துடன் அமர்ந்து நெளியாமல், ரிமோட்டில் கை வைக்காமல் படம் பார்க்கச் செய்யும் இவரின் வித்தியாசமான படங்கள் அதிகமாக வெளிவரவேண்டும்.//

அதுக்கே எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கு பாருங்க இந்தக் காலத்தில...

சரி, அந்த விடியோவை பார்க்க முடிஞ்சதா இல்லையா?

Thekkikattan|தெகா said...

நடிகர் சங்கம் உங்க பதிவு மேலேயும் ஒரு கண்ணு வைச்சிருக்காங்களாம். போலீசுக்கிட்ட சொல்லி சென்சார் பண்ண வைக்கப் போறாங்களாம் ;-)//

அநானி2,

இங்க பாருங்கய்யா, அது வேறய்ய்யா...... அவ்வ்வ்வ்வ்வ்வ் :))

Santhosh said...

theka,
romba nalla padam, kandipa parunga.. nalla eduthu irukanga.

Press meet konjam pathen, namma reports ellam "long way" to go nu prove pannuranga. as usual nenga yarayo love panringa vengayam mathiriyana questions.. cover vangi vangi eppadi aitinga pola.

avaroda interview onnu FM la keten.. athula kuda chellam chellam nu pesitu iruntharu.. kekurathuku konjam over ah than irunthathu..

Thekkikattan|தெகா said...

//எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் உண்டான ஏமாற்றமாகவும் இருக்கலாம்.//

ஆமா கப்பி, கொடுக்கிற இடத்திலதானே கேக்க முடியும். அப்ப நீங்க ஒரு தனிப் பதிவாப் போட்டு உங்க பார்வையை வைச்சிர வேண்டியதுதானே. அட கற்பனை வளம் வத்திப் போன நம்மூர் சினிமா செய்தியாளர்கள் இங்கிருந்து சூட்டிங் போட்டாவது அடுத்த முறை இண்டலிஜெண்ட்டா கேள்வி கேக்க கத்துகிடுவாங்கள்லே :).

//ஆபாசம் இல்லாமல் படம் எடுத்திருக்கேன்னு திரும்ப திரும்ப சொன்னா அப்ப ஆபாசம் இல்லாம என்ன எடுத்தாலும் நல்ல படம் ஆயிருமா? (ofcourse இது நல்ல படம் தான்) படத்தோட ப்ளஸ் பாயிண்ட்களை சொல்லி அங்கிருந்து பேட்டியைக் கொண்டு சென்றிருக்க வேண்டும்..அதுல கொஞ்சம் சொதப்பிட்டார்.//

இதுவும் நல்ல கேள்விதானே, ஏன் கேக்கத் தோணலை. இதுக்குத்தான் உங்களை ஸ்பெஷலா வந்து எழுதச் சொன்னது :).

மற்றபடி ப்ரகாஷ்ராஜுன் பூனைக்கு மணிக்கட்டும் முயற்சி பாரட்டப் பட வேண்டியதொரு விசயமின்னு நீங்களும் சொல்லி... ஆகாயக்தில இருந்து ஒண்ணும் குதிச்சிடலைன்னு சொன்ன விசயமும் சூப்பர்ப்.

Thekkikattan|தெகா said...

தெக்ஸ் ..
அவர எனக்கும் ரொம்ப பிடிக்கும். நல்ல மனிதர்தான்.. செல்லம் செல்லம் னு கலாட்டா பண்ணுவதே ஒரு அழகுதான்.. எழுதுங்க அவரை பற்றி.//

அட வாங்க டாக்டர்,

மீண்டு வந்திட்டீங்களா... உங்களுக்கும் உண்மை பேசுறது பிடிக்குமா :).

சீக்கிரமாகவே எழுதிடுவோம்.

துளசி கோபால் said...

தெ.கா,

முதல் சுட்டி வேலை செய்யலை. கோலிவுட் டுடே வேலை செஞ்சது.

எதுக்கு இப்படி ப்ரெஸ் எடுத்துக்கட்டி முணங்குறாங்க? இவுங்க பேசறதைக் கேட்டால் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது ஞாபகம் வருது.

இந்தப் படம் 'உதயனாணு தாரம்' நான் 2005 லே விமரிசனம் எழுதுனேன்.

அது இங்கெ இருக்கு பாருங்க




கேரளாவில் இது ரிலீஸ் ஆனப்ப அங்கே ப்ரெஸ் இதை உண்மையான படவுலகத்தின் விஷயமாத்தான் எடுத்துக்கிட்டாங்க



இன்னும் வெள்ளித்திரை பார்க்கலை. கொஞ்சம் மெதுவாத்தான் படம் வருது நமக்கு.

பிரகாஷ்ராஜைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் 'டாண் டாண்'ன்னு பதில் சொன்னார். ரொம்பப் பிடிச்சிருந்தது.

ஹிந்தியில் 'பாலிவுட் காலிங்'னு ஒரு படம் வந்தது. அது வெளிநாட்டுக்காரர்களுக்கு எடுத்த இந்தியப்படம். டயலாக் எல்லாம் ஆங்கிலம்தான். கொஞ்சூண்டு ஹிந்தி வசனம் வரும்.

ஓம்புரி, நவீன் நிச்சல் சூப்பராப் பண்ணி இருப்பாங்க.

இங்கே தமிழ்நாட்டுலேதான் ஒண்ணுக்கும் உதவாத படத்தையெல்லாம் ஓஹோன்னு தலையில் தூக்கிவச்சு 45, 48 மார்க் போடறது நடக்குது.
இதனால்தான் நான் படம் பார்க்குமுன்னே எந்தவொரு விமரிசனமும் படிக்கிறதில்லை.

முன்முடிவு இல்லாமப் படம் பார்க்கணும்.

Thekkikattan|தெகா said...

//as usual nenga yarayo love panringa vengayam mathiriyana questions.. cover vangi vangi eppadi aitinga pola.//

சந்தோஷ், படம் பார்த்தாச்சா? நல்லது. பார்திடுவோம்.

அதேதான், வெங்காயக் கேள்விகள் :). எல்லாம் கவர் பண்ணிய மூளைச் சலவை...

//avaroda interview onnu FM la keten.. athula kuda chellam chellam nu pesitu iruntharu.. kekurathuku konjam over ah than irunthathu...//

கடிதானோ... :)).

Thekkikattan|தெகா said...

அப்பாடா வாங்க துள்சிங்க, கடைசி கடைசின்னு வந்தாலும் நிறைய விமர்சனங்களோடதான் வந்திருக்கீங்க.

ஆமா, இந்த மாதிரி அறிவுத் திருட்டு எந்த ஃபீல்ட்ல தான் நடக்கலே சொல்லுங்க. ஆனா, இங்க கொஞ்சம் ஜாஸ்தியாவே நடக்க வாய்ப்புண்டு, இல்லையா? நிஜத்தை சொன்னா பல பேருக்கு வலிக்குமுள்ள அதான் போல இது.

//இங்கே தமிழ்நாட்டுலேதான் ஒண்ணுக்கும் உதவாத படத்தையெல்லாம் ஓஹோன்னு தலையில் தூக்கிவச்சு 45, 48 மார்க் போடறது நடக்குது.
இதனால்தான் நான் படம் பார்க்குமுன்னே எந்தவொரு விமரிசனமும் படிக்கிறதில்லை.

முன்முடிவு இல்லாமப் படம் பார்க்கணும்.//

:) இந்த 45, 48 மார்க் போடுறதெல்லாம் பல ஃபாக்டர்ஸ் நிர்ணயம் பண்ணும் போலவே... இன்னும் கேக்கிற ஆட்கள்கிட்ட டிமாண்ட் பண்ற பழக்கமே இல்லையே நம்மாட்கள்கிட்ட.

எல்லா இடத்திலும் திருட்டு வேலை, கள்ளப் பணத்தைப் பத்தி படமெடுத்துப்புட்டு கப்பல் கப்பலா அந்தப் பணமாவே வீட்டுக்கு எடுத்திட்டு போற விழிப்புணர்வேற்று மக்கள் வசிக்கிற ஊரல்லவா நம்மூர் :D.

தென்றல் said...

சுட்டிக்கு நன்றி, தெகா!
(இனிமே தான் பார்க்கணும்... ;) )

"சொல்லாததும் உண்மை" - நானும் விரும்பி படித்த தொடர்களில் ஒன்று.
ஆனால் தொடரை முடித்த விதத்தில்தான் (எனக்கு) சிறிது நெருடல்.......?!!

அவர்களின் பிரிவு, வீட்டிற்குள்ளே நண்பர்களாக வாழ்வது ..... அவர்களுடைய தனிப்பட்ட முடிவு.

ஆனால் அதை வாசகனிடம் சொல்வது....
'நான் எவ்வளவு நல்லவன்... பார்' என்பதற்காகவா...

இல்லையெனில்..... பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டபொழுது 'இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை. மற்றவர்களுக்கு தேவையில்லாத ஒன்று... ' என்ற பாணியில் பதில் சொன்னது...?

தஞ்சாவூர்கார்ரே.... "சொல்லாததும் உண்மை" eBook வேணுமா...?

Related Posts with Thumbnails