Monday, August 24, 2009

பொதுப்புத்தி





சமூக நிர்பந்தங்களை

கட்டறுத்துப் போட்ட

எனக்கு

நண்பர்களுக்காய்

தோலை

பச்சை குத்தும் பொதுச்சுவராக

அனுமதித்த பொழுதினில்

ஏனோ தொலைந்துபோயின

நாளைய லேசர் பேனாக்கள்!

16 comments:

Thekkikattan|தெகா said...

அட நாயகி,

:)))

Kaattaaru said...

ஏன் இப்படி என்ற தலைப்பை கேள்வியா கேட்க வச்சிட்டீங்க. எல்லாருக்கும் கவி மோகம் வந்தது போலும்.

இதோ உங்களுக்கு பதிலாக என்னுடைய எதிர்கவிதை.

பிணவாடை அடிக்கும் கட்டுடைப்புகள்
==================================
உடலெங்கும் பச்சை குத்தி
தலை மயிர் வர்ணம் பூசி
நாபியில் தோடு போட்டு
அறுத்தெடுத்த
கட்டுக் கோப்பு

தன் குடும்பம்
தன் பிள்ளை
தன் மக்கள்
எனும் போது
கருகிப் போனது
பிண வாடையாகி!

சென்ஷி said...

உங்க கவிதையை கஷ்டப்பட்டு யார்கிட்டயாவது அர்த்தம் கேட்டு புரிஞ்சுக்குவேன்.

ஆனா காட்டாறு அக்காவும் இப்படி பழிவாங்குவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை..

//பச்சை குத்தும் பொதுச்சுவராக
அனுமதித்த பொழுதினில்
ஏனோ தொலைந்துபோயின
நாளைய லேசர் பேனாக்கள்!//

இதுக்குத்தான் நாங்க உடம்புல பச்சை குத்திக்கறதில்லை. பேனா காணாமப்போயிடும்ன்னு சொல்லி போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிட்டு அலையறோம். :)))

பொதுபுத்தி சமூகத்துல இதெல்லாம் சகஜமப்பா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏன் இப்படி தெகா ..? :)
ஏன் திட்டறீங்க.. அவங்க பாட்டுக்கு சந்தோசமா இருக்கட்டுமே..

அய்யோ காட்டாறு நீங்க இன்னும் மிரட்டுறீங்களே...

காட்டாறு said...

எனக்கொரு சின்ன சந்தேகம். லேபில் கவிஜான்னு இருக்குதே... அவங்க யாரு? உங்க புனை பெயரா?

Thekkikattan|தெகா said...

//எல்லாருக்கும் கவி மோகம் வந்தது போலும்.//

ஏன் கவி'ன்னு சொல்லிட்டு மனசில பட்டதை இறக்கி வைக்க ஏங்காவது சிறப்பு பயிற்சி எடுக்கணுமா என்ன?

பாருங்க உங்களுக்கு கூட கவிஜா வருது... நான் சொல்ல வந்ததை முழுமை படுத்திட்டீங்க :))

Thekkikattan|தெகா said...

நாகேஷ்,

//உங்க கவிதையை கஷ்டப்பட்டு யார்கிட்டயாவது அர்த்தம் கேட்டு புரிஞ்சுக்குவேன்...//

கஷ்டப்பட்டாவதுங்கிற "ஸ்பிரிட்" என்னய மென்மேலும் ஊக்கப்படுத்துது :))

உங்க காட்டாறுக்கா எப்படியோ என்னய காப்பாத்தினாங்கன்னு எனக்கு சந்தோஷம், அவங்களும் எதிர்கவிஜா போட்டு ...

நாமல்லாம் எங்கே பச்சை குத்துறது எல்லாம் "மருதாணிக் கேசுங்க" ;-)

Thekkikattan|தெகா said...

//ஏன் இப்படி தெகா ..? :)
ஏன் திட்டறீங்க.. அவங்க பாட்டுக்கு சந்தோசமா இருக்கட்டுமே..//

அதெப்படி எல்லாரும் என் கேள்வியையே கேட்டு வைக்கிறீங்க... இது திட்டு இல்ல ஞாபத்திற்காக குறிச்சு வைச்சிக்கிட்ட ஒரு சிறு குறிப்பு :)

//அய்யோ காட்டாறு நீங்க இன்னும் மிரட்டுறீங்களே...//

நல்ல வேளை இன்னொரு ஆள் நமக்கு கம்பெனிக்கு கிடைச்சுச்சு, அய்யய்யோன்னு சொல்லி கத்தும் பொழுது நீங்களுமான்னு சொல்ல...

Radhakrishnan said...

மிகவும் நன்றாக வளமையாக இருக்கிறது தெகா அவர்களே.

ஒரு விசயத்தை பிரபலம் அடையச் செய்வது பொதுச் சிந்தனை தானே, போதாத சிந்தனையாக இருந்தாலும் கூட. மிக்க நன்றி.

நாடோடி இலக்கியன் said...

ஆஹா நம்ம ஊர் காரர் எதோ எழுதியிருக்கிறாரேன்னு வந்தேன்.

சரி வரட்டா.

Thekkikattan|தெகா said...

//எனக்கொரு சின்ன சந்தேகம். லேபில் கவிஜான்னு இருக்குதே... அவங்க யாரு? உங்க புனை பெயரா?//

:)) அது சரி, ஏன் இருக்கிற பூனை பெயர்கள் பத்தாதா??

Thekkikattan|தெகா said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் நன்றாக வளமையாக இருக்கிறது தெகா அவர்களே//

மிக்க நன்றி, வெ. இராதாகிருஷ்ணன் அவர்களே.

அடிக்கடி வந்து போங்க. :-)

//நாடோடி இலக்கியன் said...

ஆஹா நம்ம ஊர் காரர் எதோ எழுதியிருக்கிறாரேன்னு வந்தேன்.//

வாங்க தஞ்சை, நல்லா இருக்கீகளா? வந்தீங்க சரி ஆனா ஒண்ணும் சொல்லவே இல்லையே :))

நாடோடி இலக்கியன் said...

//சமூக நிர்பந்தங்களை
கட்டறுத்துப் போட்ட
எனக்கு
நண்பர்களுக்காய்
தோலை
பச்சை குத்தும் பொதுச்சுவராக
அனுமதித்த பொழுதினில்//

இதுவரைக்கும் ஓகே.

கடைசி ரெண்டு வரிகளில் தான் வெயிட்டா ஏதோ சொல்லியிருக்கீங்கன்னு தெரியுது ஆனா புரியலியே நண்பரா. :(

அதான் ஒன்னும் சொல்லாம போயிட்டேன்.

நீங்க கறம்பக்குடி பக்கம் தானே ,நானும் அதே ஒன்றியத்தைச் சேர்ந்தவன் தாங்க.இப்போ திருவோணமா மாறிடுச்சு.

Thekkikattan|தெகா said...

கடைசி ரெண்டு வரிகளில் தான் வெயிட்டா ஏதோ சொல்லியிருக்கீங்கன்னு தெரியுது ஆனா புரியலியே நண்பரா. :( //

அப்படியா இலக்கியன் :) ? அந்தக் கடைசி இரண்டு வரிகள் வந்து லேசர் சிகிச்சை முறையில் அது போன்ற பச்சைகளை அகற்ற பயன்படுத்துற சுட்டியிருந்தேன் ...

நீங்க கறம்பக்குடி பக்கம் தானே ,நானும் அதே ஒன்றியத்தைச் சேர்ந்தவன் தாங்க.இப்போ திருவோணமா மாறிடுச்சு...//

ஓ! அப்படியா எனகுத் தெரியாதே... ஆமா இப்போ நீங்க எங்க இருக்கீங்க இப்போ ... முடிஞ்சா ஈமெயில் பண்ணுங்க

குட்டிப்பையா|Kutipaiya said...

:) :) :)
u know what this smiley represents ;)

ஜோதிஜி said...

இன்று பிரயாசைப்பட்டு உள்ளே வந்தால் (ஆகஸ்ட் மாதம் நான் வலையுலகில் வந்து எழுதத் தொடங்கிய நேரம்) கவி மூலம் பழிவாங்குதல் முறையா?

Related Posts with Thumbnails