Monday, March 01, 2010

மலம்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

ஓர் அருமையான நவம்பரில் மேகங்கள் மலைகளின் மீது புரண்டு அவைகளின் அழகை போர்த்தி மறைத்துக் கொண்டிருந்த நாளில், எங்களின் கார் விரைந்து கொண்டிருந்தது சிறிதே அந்த அழகை பருகிவிட வேண்டுமென்ற கொலை வெறியுடன்.

சூரியனார் கடையை இழுத்து மூடும் பரபரப்பான இயற்கைச் சூழலில் கடைசியே கடைசியென வரைந்து காட்டிவிட்டு ஒளிந்து கொள்ளும் இடைவேளைக்கிடையில் நான் உள்ளே புகுந்து கேமராவிற்குள் சுருட்டிக் கொண்டதை இந்த வையகமும் கண்டு களிக்கட்டுமென்ற ...

சுமாருக்கு ஒரு 75 படிக்கட்டுகளை முட்டி கெஞ்ச கெஞ்ச ஏறியதிற்குப் பிறகு இப்படியாக இருந்துச்சு பூமி கீழே...




மலம்புழா நீர்த் தேக்கத்தின் ஒரு பகுதி மலை முகடுகளை உள்ளடக்கியவாறே...




எங்களுக்காகவே கடைசி சவாரியென்று காத்து நிற்கும் சேட்டன்கள்...




இங்கிருந்து ஆரம்பிக்கிறது சூரியன் தன் கலையுணர்வை ஓளிக் கற்றைகளைக் கொண்டு, நிறங்கள் அப்பிக்காமிப்பது - மேகத்தின் கு்த்தாட்டத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்...




சைனீஸ் ட்ராகன் ஒன்று எதனையோ தாவிப் பிடிக்கும் நோக்கோடு ...




படம் வரைய வானப்பலகை தயாராகி விட்ட நிலையில்...




இன்னும் வண்ணங்களை அடர்வாகக் கலந்து...




அப்படியாக கண்டு மிதந்து கொண்டே வரும் பொழுது கொஞ்சம் வெளி வானத்திற்கு (outer space) கேமராவுடன் சென்று கீழே பூமியைப் பார்க்கும் பொழுது ;-) ...



மீண்டும் திருப்பி படகுக்கே பிடித்து இழுத்துக் கொண்டு வந்திட்டாய்ங்க, இந்தப் படத்தை எடுக்க...




அப்படியே பார்த்திட்டே வரும் போது திடுமென்று இன்னொரு பத்து நிமிடத்திற்குள்ள இப்படியும்...



கூட வந்த நண்பர்களுக்கு அந்த ஒளி வெள்ளம் அவர்களின் இதயத்தை துளை போட்டு எதையோ திருடிக் கொண்டது போல, அவர்களின் நிறமும் கண்களில் இருக்கும் கிறக்கத்தையும் பாருங்க - பார்ததாவே தெரியும் இயற்கைக்கும் நமது மன நிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இல்லையா?






பி.கு: தெரியாதவர்களுக்கு - இந்த மலம்புழா அணைக்கட்டு (Malampuzha Dam) பாலக்காட்டிலிருந்து (கேரளா)ஒரு பத்து கிலோமீட்டர்கள் தொலைவிலையே அமைந்திருக்கிறது. வெறும் 40 ரூபாய்க்கு 45 நிமிடத்திற்கும் மேலாக நீரில் நம்மை மிதக்க வைக்கிறார்கள். திட்டமிடாமல் அரக்க பறக்க இருட்டு தட்டிய நேரத்தில் எங்களுக்கு அந்தப் பயணம் கிடைத்தது அதுவே இந்த ஒளியின் விளையாட்டை வாரி எங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பை கொடுத்தது...

23 comments:

cheena (சீனா) said...

அன்பின் பிரபா

படங்கள் அருமை அருமை - இடுகையும் அருமை
கண்ணில் கண்டவை எல்லாவற்றையும் பகிர வேண்டும் என்ற எண்ணம் நன்று - அழகான இயற்கைச் சூழலில் கையில் புகைப்படக் கருவியுடன் நேரம் செலவிட்டது நன்று பிரபா

நல்வாழ்த்துகள் பிரபா



எழுதியவுடன் ஒரு முறை படித்துப் பார்த்து பிறகு இடுகையாக இடவேண்டும்

நல்வாழ்த்துகள் பிரபா

Jerry Eshananda said...

கலக்கல் கலர்புல்.

மரா said...

A visual tour we had with you...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ட்ராகன் நல்ல கற்பனை..

படங்கள் எல்லாம் அழகா இருக்கு ...

Asokaa Photo said...

BEST PHOTOGRAPHY

க ரா said...

ரொம்ப அருமையான புகைப்படங்கள். ஒவ்வொன்றும் ஒரு கவிதை அது.

பதி said...

படங்கள் அருமை !!!

கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் இங்கு சென்ற பொழுதுகளை நினைவூட்டியது !!!!

:-)

முகுந்த்; Amma said...

புகைப்படங்களும் சரி, தங்களின் வர்ணனையும் சரி, அருமை.

குட்டிப்பையா|Kutipaiya said...

Nice phtos n description thekki - kudave kutitu pora madhri azhaga varnichirkinga....

The cloud photos are worth a mention. Kalakkals :)

பித்தனின் வாக்கு said...

நல்ல படங்கள். அருமையான புகைப் படங்கள். நல்ல பகிர்தலுக்கு மிக்க நன்றிகள்.

Admin said...

Nice pictures and thanks for sharing.

Thekkikattan|தெகா said...

வாங்க சீனா, எல்லாரும் கண்டு ரசிக்கத்தான் இந்தச் சேவை...

//எழுதியவுடன் ஒரு முறை படித்துப் பார்த்து பிறகு இடுகையாக இடவேண்டும்//

எல்லாம் ஆர்வக் கோளாறு நான் என்னாத்தை சொல்லுறது போங்க. அடுத்த முறை பாத்துகிடறேன் :)

//ஜெரி ஈசானந்தா. said...

கலக்கல் கலர்புல்.//

ஆ! ஜெரி.... வாங்க, வாங்க ...

//மயில்ராவணன் said...

A visual tour we had with you...//

hey Ravana, Enjoyed, huh? How have you been... long time no see. come often :)

Thekkikattan|தெகா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ட்ராகன் நல்ல கற்பனை..//

மேலே பார்க்க ஆரம்பித்த கண்ணை இன்னும் கீழே இறக்கவே இல்லையே... மறந்து போச்சா வானப் பலகை, கவிஜா :)

Asokaa Photo said...

BEST PHOTOGRAPHY//

Thanks Asokaa! i visited your photography blog-page, u have got some awesome photographs too... especially the fire works. keep coming...

வாங்க இராமசாமி.

//ஒவ்வொன்றும் ஒரு கவிதை அது.//

ம்ம் அப்படித்தான் நானும் பார்த்தேன் புகைப்படம் எடுக்கும் பொழுதும் சரி இப்பொழுது அந்தப் படங்களை பார்க்கும் பொழுதும் சரி.... படங்களும் கவிதை சொல்லும். நன்றி!

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அருமையான புகைப்படங்கள்.சுற்றுலா போற பதிவர்கள் நண்பர்களோட மட்டும் போறாங்கப்பா! குடும்பம்,புள்ளைக வீட்டப்பாத்துக்கவா! நாங்களும் குழு கூட்டிறனும் கும்மியடிக்க!

Thekkikattan|தெகா said...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...
அருமையான புகைப்படங்கள்.சுற்றுலா போற பதிவர்கள் நண்பர்களோட மட்டும் போறாங்கப்பா! குடும்பம்,புள்ளைக வீட்டப்பாத்துக்கவா! நாங்களும் குழு கூட்டிறனும் கும்மியடிக்க//

அவ்வ்வ்வ்வ்... கேட்டீங்களே ஒரு கேள்வி இது மாதிரி இன்னொரு ஆளும் கேட்டாங்க, ஒண்ணும் சொல்லுற மாதிரி இல்ல... இப்போ சொல்லுறேன் பாருங்க ஒரு ஜால்சாப்பு ஏத்துகிடற மாதிரி இருக்கா பாருங்க :) - அது ஒண்ணுமில்ல சரியா நேரம் அமையல - கைப்பிள்ள கையில , ஹிஹிஹி

Thekkikattan|தெகா said...

பதி,

கல்லூரி நாட்களில் அந்தப் பக்கமாக போயிருந்தால் கூடுதல் சுகமாக இருந்திருக்குமே, சூரியன் அஸ்தமன காட்சியும் கேரளா நாட்டு ;-) ...
************************

முகுந்த் அம்மா,

தொடர்ந்த வருகைக்கும் தட்டிக் கொடுத்தல்களுக்கும் எனது நன்றிகள்!
************************

குட்டிப்பையா,

//kudave kutitu pora madhri azhaga varnichirkinga...//

oh! did you come along - :-)

//The cloud photos are worth a mention. Kalakkals :)//

No matter what, I can not stand next to the chennai trekking club guy's photographs, right :) ...anyway, daangu

Radhakrishnan said...

:) அழகிய படங்கள். நல்ல வர்ணனை.

பதி said...

//கல்லூரி நாட்களில் அந்தப் பக்கமாக போயிருந்தால் கூடுதல் சுகமாக இருந்திருக்குமே, சூரியன் அஸ்தமன காட்சியும் கேரளா நாட்டு ;-) ...//

அதே அதே !!!!

அதுவும் கல்லூரி இறுதியாண்டு சமயங்களில் கோயம்புத்தூர் பேக்கரிகள் போரடிக்கும் சமயத்தில் பாலக்காடு போய் டீ அடிச்சுட்டு அங்கே பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய அணை அருகில் பொழுதைப் போக்கி விட்டு வருவது வழக்கம் !!!!

:-)

ராஜ நடராஜன் said...

தெகா!படத்துக்கு ஒரு சலாம் சொல்லிட்டு இடுகை திருப்தியளிக்கவில்லைன்னு சொல்லலாம்ன்னு வந்தேன்.அதுக்குள்ள உங்கள் பின்னூட்டமும் பதியின் பதிலும் நம்மள மாதிரி கல்லூரிக் கும்மி பார்ட்டிகள் இருக்கறது மனசைக் குளிர வச்சிடுச்சு:)

(ஆமா அந்த...பேரென்ன மறந்து போச்சே!அந்த சேச்சி இன்னும் சிலையா உட்கார்ந்துகிட்டு இருக்குதா இல்லை வில்லங்கத்துல கண்ணகி மாதிரி இடம் பெயர்ந்துடுச்சா?)

Thekkikattan|தெகா said...

பித்தனின் வாக்கு, வாங்க நல்ல எஞ்சாய் பண்ணீங்களா அப்பப்போ இது மாதிரி ட்ரீட் வைக்கிறேன் வந்து போங்க... :)
****************************

//Admin said...
Nice pictures and thanks for sharing//

ok ...cool.

//V.Radhakrishnan said...
:) அழகிய படங்கள். நல்ல வர்ணனை//

Thanks Ve. Ra ... more to come later ;-)

தருமி said...

அழகான நாட்டியம் ...........
நிறைந்த அழகு

எடுத்தவருக்குப் பாராட்டுக்கள் (இப்படியெல்லாம் பனி, மேகம் அப்டின்னு எடுத்து எங்களை மாதிரி ஆட்களை காமிராவைத் தொட விடாத இந்த மனிதர்களுக்கு எதற்குப் பாராட்டுக்கள் - இப்டி மனசு சொல்லுது.)

தருமி said...

கடைசிப் படத்தில் இடது பக்கம் இருப்பவரைப் பார்த்ததும் எப்போடா, இவரோடு இவரு ஊர் சுத்தப் போனாருன்னு நினச்சிட்டேன்!

ஆ.ஞானசேகரன் said...

புகைப்படம் அனைத்தும் மிக்க அழகு நண்பரே

Related Posts with Thumbnails