Sunday, July 11, 2010

உலக உதை பந்தாட்டமும் இந்தியாவும் : FIFA Final 2010

இன்று நடந்த முடிந்த உதை பந்து போட்டியின் முடிவில் ஸ்பெயின் மக்களின் முகங்களில்தான் எத்தனை மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. ஸ்பானியார்ட்ஸ்ம் சரி அவர்களுக்கு எதிர்ப்பாக விளையாடிய டச்சுக்காரர்களும் சரி கொஞ்சம் கூட விளையாட்டில் தொய்வே இல்லாதபடிக்கு விறு விறுப்பாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பதினைந்து நிமிடங்களில் விளையாட்டாக சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஸ்பானியார்டின் Andres Iniesta பந்தை அலேக்காக தூக்கி உள்ளே போட்டு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற காரணமாகிப் போனார்.

இறுதிகட்ட மேட்ச் என்பதால் அமளிதுமளிக்கு ஒன்றும் குறைச்சலே இல்லாமல் இருந்தது. உதை பந்தாட்ட நடுவர் Howard Webb விளையாட்டு வீரர்களை உச்சந்தலையிலிருந்து பார்த்தபடி கிட்டத்தட்ட 15 மஞ்சள் அட்டைகளையும், ஆட்ட முடிவின் 10 நிமிடத்திற்கு முன்பாக ஒரு சிவப்பு அட்டையையும் வழங்கி தனது இன்றைய தின இறுதி ஆட்டத்தினை கட்டுக்குள் வைத்திருந்தார்.

இது போன்று விளையாட்டுக்களை முன்னிருத்தி சர்வ தேச விழாக் கோலம் பூணும் ஒலிம்பிக்ஸ் மற்றும் சர்வ தேச உதை பந்தாட்டம் போன்றவைகளில் இந்தியாவின் சுவடுகளே தெரிவதில்லை. நான் இது போன்றே புலம்பி கடந்த ஒலிம்பிக்ஸின் போது ஒரு பதிவினை இட்டிருந்தேன். அதே போன்ற நடையில் இப்பொழுது இந்த உதை பந்தாட்டதின் இறுதி நாளில் என்னிடமிருந்து மீண்டும் ஒரு பதிவு வருவது என்னாலேயே தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஏன் இது போன்ற எண்ணம் வர வேண்டும். புலம்பித்தான் என்னாவாகிவிடப் போகிறது என்று சமாதானம் கூறிக் கொண்டாலும், ஏன் இத்தனை நான்காண்டு, ஐந்தாண்டு சர்வ தேச விழாக்கள் வந்து போனாலும் நம்மால் கூறிக் கொள்ளும் படியாக எதனையுமே உலக அரங்கில் தனது இருப்பை காட்டிக் கொள்ளும் படியாக எதனையும் சாதித்துக் கொள்ள முடிவதில்லை.


தருமியின் தளத்தில் ஆக்டோபஸ் ஆருடம் பற்றிய பதிவின் கடைசி பத்தியில், ஆக்டோபஸ் கூறியதாக முன் வைத்த வாதங்கள்தான் எத்தனை உண்மையானது. அந்தப் பத்தி இப்படியாக ஓடியிருந்தது...

... தமிழ்ஸ்போர்ட்ஸ்: இந்திய கால்பந்து பற்றி ஏதாவது கணித்து கூற முடியுமா?

கவலைப்படாதப்பா! பிரமாதமான வளர்ச்சி எதிர்காலத்துல இருக்கு.முதல்ல நல்ல ஸ்டேடியங்களை கட்டுங்க.சிறுவர்களை பள்ளிப்பருவத்தில் இருந்தே,கால்பந்து விளையாட பழக்குங்க.உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குங்க.இந்த அரசியல்வாதிகளை கால்பந்து பக்கம் அண்ட விடாதீங்க.முதல்ல அந்த பிரபுல் படேல்ட்ட இருந்து தலைவர் பதவியை பிடுங்கி கால்பந்து மேல உண்மையான பற்று இருக்குறவங்ககிட்ட கொடுங்க.அது ஏன் உங்க நாட்டுல மட்டும் இந்த அரசியல்வாதிகள் கையில் விளையாட்டு இருக்குது?(பால் கேட்ட கேள்விக்கு நம்மட்ட பதில் இல்லை)...


அதனைப் படித்தவுடன் என்னுள் தவிர்க்க முடியாமல் வந்து போன ஒரு எண்ணம் என்னவெனில் 1986ல் மெக்சிகோவில் நடைபெற்ற உலக உதை பந்தாட்டதின் போது பள்ளி தலைமை ஆசிரியரை இரவில் எழுப்பி தொலைக்காட்சிப் பெட்டியை விளையாட்டு மைதானத்திற்கு நகர்த்தி வைக்கச் சொல்லி அவரைப் படுத்திப் பார்த்த காலங்களும், பள்ளி விட்ட மாலை வேளைகளில் உடற்பயிற்சி ஆசிரியரிடம் திட்டு வாங்கியேனும் காற்று இல்லாத பந்தாக இருந்தாலும் கிடைத்த இடத்தில் உருட்டிக் கொண்டு திரிந்த நாட்களும் அச்சு பிறழாமல் மனதில் வந்து போனது. இப்படி ஒவ்வொரு கிராமத்திலும், அது அரசாங்க பள்ளிகளாக இருக்கட்டும், சற்றே பெரிய நகரங்களிலுள்ள தனியார் பள்ளிகளாக இருக்கட்டும் இந்தியா முழுதிற்குமே எத்தனை கோடி மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்திருக்கக் கூடும் (இன்றும் கூட).

ஏன் இத்தனை மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் இத்தனை பஞ்சம் சரியான விளையாட்டு வீரர்களை இனம் கண்டு சர்வ தேச அரங்கில் நிறுத்த. சாப்பாடு சத்து பத்தாமல், ஸ்டெமினா இல்லாமல் நாம் ப்ரைமரி மேட்சிற்குள் கூட நுழைய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோமா? இல்லை கிரிக்கெட்டை வைத்துக் கொண்டு அரசியல் பண்ணிக் கொண்டிருப்பதிலேயே காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோமா? சமச்சீராக ஒரு நாடு உலக சபையில் தன்னை அடையாளம் காண வேண்டுமென்றால் எல்லா விசயங்களிலும் தன்னை முன்னிருத்திக் கொண்டால்தானே கொண்டிருக்கக் கூடிய இடத்திற்கு அழகு! இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு 2020ல் வல்ல அரசு என்று வேறு கூறிக் கொண்டிருக்கிறோம். மொதல்ல இந்த இத்துப் போன அரசியல் வாதிகளை ஒரு சுனாமி கொண்டு போனாத்தான் உண்டு.

26 comments:

Thekkikattan|தெகா said...

P.S: Photo courtesy NY times and Pixdaus.com

Fifa2010 said...

அந்த யோகி கால்பந்து படம் ஜுப்பரு எங்கிருந்து சுட்டீரு

தமிழ் மதுரம் said...

சிறப்பான அலசலைத் தந்துள்ளீர்கள் தோழா. ஆருடங்கள் சில நேரங்களில் பொய்க்கலாம். ஆகவே கவலை வேண்டாம்.

cheena (சீனா) said...

அன்பின் தெகா

ஆதங்கம் புரிகிறது - அரசியல்வாதிகள் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும் - புலம்பிக் கொண்டே தான் இருக்க வேண்டும் - இருப்பினும் ஆசை நிறைவேற - நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

தருமி said...

//சமச்சீராக ஒரு நாடு உலக சபையில் தன்னை அடையாளம் காண வேண்டுமென்றால் எல்லா விசயங்களிலும் தன்னை முன்னிருத்திக் கொண்டால்தானே கொண்டிருக்கக் கூடிய இடத்திற்கு அழகு! //

இது ரொம்ப சரி. ஆனால் அதில் ஒண்ணு முதலில் மக்கள் வயிறு நிறையணும். அதன்பின் தான் விளையாட்டு மற்ற எல்லாம் தொடரும். நமது வயிறு இப்போ பரவாயில்லை. அதனால் நாம் வளர்ந்து விடலாம் சீக்கிரம். ஆனால் தமிழ் ஸ்போர்ட்ஸ் காம் சொல்வது முதலில் அரசியல் வியாதிகளிடமிருந்து விளையாட்டை தள்ளி வைக்கவேண்டும்.

Thekkikattan|தெகா said...

//தமிழ் மதுரம் said...

சிறப்பான அலசலைத் தந்துள்ளீர்கள் தோழா. ஆருடங்கள் சில நேரங்களில் பொய்க்கலாம். ஆகவே கவலை வேண்டாம்//

வணக்கம் மதுரம், அதாவது பொய்த்து இந்தியா ஒலிம்பிக்ஸில் முதலாவது இடத்தையும், நாம் வாழும் காலத்திலேயே FIFAவில் இறுதி சுற்றிலும் விளையாட வாய்ப்பிருக்கிறதுங்கிறீங்களா... எம்மாம் பெரிய ஆசை.

முதல் வருகைக்கு நன்றி தமிழ் மதுரம் :) .

தம்பி... said...

நல்ல பதிவு பிரபா. மட்டை பத்தாட்டத்தில் மின் விளக்கு ஆட்டத்தில் முதல் டி20-20 வரை நம்மால் சோறு போட்டு வளர வைக்க முடிகிறது ஆனால் உலக சர்வதேச அரங்கில் இந்த ஆட்டத்தில் நம்மால் முன்னோக்கி போக முடியவில்லை..

கால்பந்தாட்ட மைதானங்கள் இப்பொழுது மட்டை பந்தாட்ட மைதனங்கள் ஆன கதை தெரியுமா பிரபா..

மீண்டும் ஊர் சென்று பாருங்கள்.. நீங்கள் ஆடி அமர்களபடுத்திய மைதனங்கள் இன்று மொட்டை வெயிலில் மட்டை பந்தாட்ட களமாகி இருக்கும்..

இந்த மாற்றத்துக்கு யார் காரணம்.. வியாபரிகளா? இல்லை அரசியல் வாதிகளா.. இல்லை.. இந்த ஆட்டத்தை ஊக்க படுத்திய அவாக்களா??????

கல்வெட்டு said...

தருமி மற்றும் தெகா போன்றவர்கள் அரசியலால் விளையாட்டு பாதிக்கிறது அதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று சொல்வதால் இந்த எதிர்வினை.....


இந்தியாவில் தனியார் முதலாளிகள் அவர்களின் பொழுது போக்கிற்காக அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை கிரிக்கெட்டை நடத்தி வருகிறார்கள். ஏன் என்றால் கிரிக்கெட் என்பது Game அது Sports அல்ல. Game என்பதில் நிறைய பொழுது போக்கு அம்சங்கள் உண்டு. அதனால் அதை வைத்து நிறைய வருமானம் ஈட்டலாம்.

சரத்பவார் போன்ற சில மனிதர்கள் கிரிக்கெட் தொழிலதிபர்களாக இருந்து கொண்டு விவசாய அமைச்சராகவும் இருப்பதால் ஒரு வேளை அரசியலை பொறுத்திப்பார்க்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.

அரசு சொன்னால்தான் செய்வேன் என்று இருக்காமல் மக்கள் செய்ய வேண்டியது....

1. கிரிக்கெட்டைப் பற்றி வெட்டியாக புள்ளி விவரங்கள் தந்து வெட்டிப் பேச்சு பேசுவதையே (விளைடுவதுகூட இல்லை சும்மா ஸ்கோர் கேட்பது,பார்ப்பது,பேசுவது) Sports அங்கீகாரம் என்று சொல்லித் திரியும் முட்டாள்களை ஒதுக்க வேண்டும். இவர்கள் சோம்பேறிகள். சினிமா பார்த்துவிட்டு அதை விமர்சித்தால் அவர்கள் டைரக்டர்கள் இல்லை.

2. தொந்தி தொப்பையுடன்கூட கிரிக்கெட் , கோல்ப் செஸ் விளையாடலாம் அது Game. ஆனால் கால்பந்து விளையாட முடியாது அது Sports. கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற ஸ்போர்ட்ஸ்களுக்கு உடல்வலிமையும் ஸ்டெமினா என்ற நீண்ட நேரம் உடல் இயக்கத் திறனும் அவசியம்.

3. உடல் வலிமை என்பது சும்மா பெருச்சாளிமாதிரி தின்று கொழுப்பதும் அல்ல பட்டினி கிடப்பதும் அல்ல. சமச்சீரான உணவும் நல்ல உடற்பயிற்சிகளும் தேவை.

4. சிறுவயதில் இருந்தே கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற ஸ்போர்ட்ஸ்களை பள்ளியில் அறிமுகப்படுத்தி , பள்ளிகளுக்கிடையேயான சின்னச் சின்ன போட்டிகளை ஊக்குவிக்க வேண்டும். பள்ளி கல்வி விளையாட்டுத்துறையுடன் அந்த அந்த பகுது மக்கள் சேர்ந்து செய்ய வேண்டிய ஒன்று.

5. மார்க் எடுப்பது மட்டுமே இலட்சியம் என்று வாழும் ஆட்டுமந்தைச் சமுதாயத்தில் பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளிகள்.

6. நான் படித்த கிராமத்து ஆரம்பப்பள்ளியில் மைதானமே கிடையாது. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மைதானம் என்பது ஒரு வாலிபால் விளையாடக்கூட இடம் இருக்காது.

(அரசு உதவியுடன் நான் படித்த அரசு உதவி பெறும் திண்டுக்கல் எம் எஸ் பி சோலைநடார் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து மைதானம் , ஹாக்கி மைதானம், கூடைப்பந்து மைதானம், இரண்டு பேட்மிட்டன் மைதானம், ஒரு கோக்கோ மைதானம் என்று இருந்தது. )

7.சும்மா செங்குத்தாக ஒரு கட்டடம் மூன்று அறைகளுடன் இருந்தாலே பள்ளி தொடங்கலாம். இப்போது பள்ளிகள் என்பவை புத்தகம் படிக்கவும் பரீட்சை எழுதவும் என்றாகிப்போன சமுதாயத்தில் யாரும் இதை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை.

8. மானாட மசிராடவிற்கும் , பாட்டுப்பாடவும் இருக்கும் ஆர்வம் விளையாட்டுகளில் இல்லை.

9.விளையாட்டிற்கு கொடுக்கப்படும் உதவித்தொகைகள் தனியாரிடம் இருந்து அதிகமாக இல்லை.

***

தனக்கு என்ன தேவை என்பதே தெரியாத மக்கள் உள்ளவரையில் இந்த நாடு இப்படித்தான் இருக்கும்.

Sports என்பது கல்வியின் அங்கமாக இருக்க வேண்டும். கல்வி எனது கற்றல் . கூமுட்டைகளின் நாட்டில் கற்றல் என்பது புத்தக அறிவு என்பதாக மட்டும் உள்ளது.

விளையாட்டும் கற்றால்தான் வரும் அதையும் கல்வியின் பகுதியாக சீரியசாக ஏற்கவேண்டும்.

.

kumaresanphoto said...

மக்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்ற ரீதியில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீடியாக்களே முதல் காரணம்.கால்பந்து ஒரு நல்ல விளையாட்டு மட்டுமல்ல பணம்காய்ச்சி மரமும் கூட. கால்பந்து ஒரு குளோபல் ஸ்போர்ட் அதனால் உள்நாட்டில் திறமையை காட்டினால் மான்செஸ்டர் யுனைடெட்,பார்சிலோனா,லிவர்பூல்,செல்சி,ரியல் மாட்ரிட் போன்ற கிளப்புகளில் ஆட விளையாட வாய்ப்பு கிடைக்கும். திறமை இருந்தால் பணத்தை கொட்டி கொடுக்க இந்த கிளப்புகள் தயங்குவது இல்லை.கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் மேற்கண்ட அணிகளில் இந்தியர்கள் விளையாடினால் எப்படி இருக்கும்?அதனால் முதலில் உள்நாட்டில் நல்ல கட்டமைப்புடன் கூடிய உள்நாட்டு லீக் இருக்க வேண்டும்.உதாரணமாக ஐ.பி.எல் போல. அப்போது ஏராளமான கால்பந்து வீரர்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.பிரேசில் ஆண்டுக்கு ஆயிரம் கால்பந்து வீரர்களை தயார் செய்கிறது. அவர்கள் பல நாடுகளில் விளையாடுகிறார்கள். பிரேசிலுக்கு பல மில்லியன் டாலர் அன்னிய செலவானி கிடைக்கிறது.இந்த உலக கோப்பை முடிந்தாகி விட்டது.ஒரு வாரம் கழித்து தமிழ் பத்திரிகைகளை புரட்டுங்கள். ஒரு சிங்கிள் பிட் கால்பந்து செய்திகள் வந்தால் எனக்கு மெயில் அனுப்புங்கள்.சோ!மீடியாக்கள் முதல் காரணம். அடுத்ததாக திட்டமிடப்படாத அரசியல் கலந்த கால்பந்து சங்கங்கள்.

Thekkikattan|தெகா said...

ஆதங்கம் புரிகிறது - அரசியல்வாதிகள் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும் - புலம்பிக் கொண்டே தான் இருக்க வேண்டும் - இருப்பினும் ஆசை நிறைவேற - நல்வாழ்த்துகள்//

சீனா, தலமையே பொறுப்பில்லாம இருக்கும் பொழுது அவிங்க பார்த்துக்குவாய்ங்கன்னு இருக்கிற மக்கள் எப்படி இருப்பாங்க அப்பிடித்தேய்ன்... எல்லாத்திலும் சுய லாபம் மட்டுமே பார்த்திக்கிட்டே இருந்தா எந்தக் காலத்தில எட்டிப் பிடிக்கிறது... நன்றி - சீனா!

ராஜ நடராஜன் said...

தெகா!என்னா இது?ஓட்டப்பந்தயத்துல கடைசி நிமிசத்துல மூக்கை நீட்டி ஜெயிக்கிற மாதிரி இப்ப வந்து கடைய திறக்கறீங்க:)

நாங்க ஒரு மாசமா மாநாடு நடத்தி நன்றி நவிழலும் சொல்லி முடிச்சிட்டோம்.

ராஜ நடராஜன் said...

மொதப்படம் சுட்டது சரி.இரண்டாவது படம்?

தமிழில் சொல்லனுமின்னா சான்ஸே இல்ல.

ராஜ நடராஜன் said...

//ஸ்பானியார்ட்ஸ்ம் சரி அவர்களுக்கு எதிர்ப்பாக விளையாடிய டச்சுக்காரர்களும் சரி கொஞ்சம் கூட விளையாட்டில் தொய்வே இல்லாதபடிக்கு விறு விறுப்பாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.//

இதுக்குத்தான் அவசர அவசரமா பின்னூட்டம் போடக்கூடாதுங்கிறது.முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பா?ஒரே சொதப்பல்.அடுத்த பாதியும் அதிக 28 நிமிட நேரமே ஆட்டத்தின் களை.நிதானமா ஆடியது ஸ்பெயின் மட்டுமே.ஆரஞ்சி ஓட்டப்பந்தயம் மட்டுமே நடத்தியது ஜெர்மனி மாதிரி:)

ஜான் கார்த்திக் ஜெ said...

//இந்த இத்துப் போன அரசியல் வாதிகளை ஒரு சுனாமி கொண்டு போனாத்தான் உண்டு.// சுனாமியும் இத்துப்போன ஒன்னு தான்! அரசியல்வாதிகள் எங்க போறாங்க.. :( என்னைக்கு தான் நம்ம ஆடுற புட்பால் பார்க்க போறோமோ!!

Thekkikattan|தெகா said...

வாங்க தருமி ரொம்ப நாளாச்சு நம்ம வீட்டாண்டை உங்கள பார்த்து என்ன நடக்கிது.

சரி வாங்க சீரியசா பிசினெஸ் பேசுவோம் :) .

//இது ரொம்ப சரி. ஆனால் அதில் ஒண்ணு முதலில் மக்கள் வயிறு நிறையணும். அதன்பின் தான் விளையாட்டு மற்ற எல்லாம் தொடரும்.//

எத்தனை பத்தாண்டுகளுக்குத்தாங்க வயிறு வளர்க்கிறதிலேயே தேங்கிப் போயி கிடப்பது... அது எப்படியா இருந்தாலும் இருக்கும் மக்கள் தொகை அத்தனைக்கும் முழு வயிறுச் சோறு போட்டு சேர்த்து கூட்டிட்டுப் போறோம்னு ஒரு நாள் வர ரொம்ப நாட்களாகும், பின் விட்டுடுத்தான் போகப் போறோம், இப்போ போயிட்டு இருக்கிற மாதிரியே...

//ஆனால் தமிழ் ஸ்போர்ட்ஸ் காம் சொல்வது முதலில் அரசியல் வியாதிகளிடமிருந்து விளையாட்டை தள்ளி வைக்கவேண்டும்.//

அதுக்கு பல மைல் தூரம் அதுக தொலை நோக்கு பார்வையோட தன்னோட சுய நலத்தை மூட்டைக் கட்டி வைச்சிட்டு முழு மனசோட உழைச்சாதான் உண்டு, தன் வீட்டு மக்களுக்காக சொத்து சேர்க்கிற மாதிரி... நடக்கிற மாதிரியா தெரியுது உங்களுக்கு?

Thekkikattan|தெகா said...

வாங்க தம்பி,

//மட்டை பத்தாட்டத்தில் மின் விளக்கு ஆட்டத்தில் முதல் டி20-20 வரை நம்மால் சோறு போட்டு வளர வைக்க முடிகிறது//

எதனை வைத்து பிராந்திய அரசியலும், திடீர் பணமும் பண்ண முடியுமோ அதனைக் கொண்டு அங்கே மொய்த்துக் கொண்டிருக்கிறார்களென நினைக்கிறேன்.

//நீங்கள் ஆடி அமர்களபடுத்திய மைதனங்கள் இன்று மொட்டை வெயிலில் மட்டை பந்தாட்ட களமாகி இருக்கும்...//

அதுவும் நடந்து அதற்கு பின்னான குளம், குட்டைகளில் கூட தண்ணீர் வற்றிய நிலையில் மட்டைப் பந்தாட்டம் என்ற பெயரில் வெயில் காய்கிறார்கிறார்களே மக்கள்.

அது போன்ற இளைஞர்களுக்குக் கூட ஏன் கால் பந்தட்டாமும், ஹாக்கியும் மற்ற பிற விளையாட்டுக்களும் விளையாட்டுத்தான் என்று எண்ணத் தோன்றுவதில்லை. அதுக்கு மற்ற பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கும் பொழுது பேசுவோம்.

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு,

வாங்கய்யா வாங்க! அரசாங்கத்தின் பங்களிப்பை எதிர்பார்க்காமயே மக்களா செய்யக் கூடிய விசயங்கள் என்பதில் தனிப்பட்ட முறையில் உடற் பயிற்சிக்கு சமமாக மக்களே பிடித்த விளையாட்டுக்களை விளையாடுவது வரைக்கும் வேண்டுமானால், நீங்க சொன்னது சரி இந்த விசயத்தில்.

அதனையொட்டிய மக்களின் ஆட்டிட்யுட் எந்த அளவிற்கு மாற வேண்டுமென்பதிலும் எந்த ஆட்சோபனையுமில்லை.

மற்றபடி பள்ளிகளில் போதுமான அளவிற்கு கட்டமைப்புகளை அமைத்துக் கொடுப்பதும், தனிப்பட்ட மாணவனுக்கு எதனில் விருப்பமிருக்கிறதென அறிந்து அந்த விளையாட்டுத் தளத்தில் சிறக்க சரியான வாய்ப்பை அமைத்துக் கொடுக்க பள்ளி நிர்வாகத்தாலே முடியும். அந்த பள்ளி நிர்வாகமும் அரசாங்கப் பள்ளியாகிப் போனால், முழுப் பொறுப்பும் அரசாங்கத்தின் தலையிலேயே விடிகிறது. ஏனெனில், ஒரு மாணவன் ஹாக்கியில் சிறக்கிறான் என்றால் அவன் அந்த தாலூக்கா அளவிலிருந்து மாவட்ட அளவில வளர்ந்து மாநில அளவிற்கு செல்லும் வரையிலுமே எந்த அளவிற்கு அந்த ஹாக்கி விளையாட்டில் எதிர்காலம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனைப் பொருத்தே ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதும், சுருக்கிக் கொள்வதும் அமைகிறது இல்லையா?

மாவட்ட வாரியாக இன்றளவிலும் கால்பந்தில் சிறந்தவர்களுக்கு எது போன்ற வேலை வாய்ப்புகள் ஒதுக்கித் தரப்படுகிறது. எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர்கள் கல்லூரி காலங்களில் விளையாட்டில் சிறக்க வேண்டுமென, படிப்பின் சுமையை எளிமையாக்கிறேன் பேர்வழி என்று காமா சோமா பாடப் பிரிவுகளில் சேர்ந்து பின்பு இதுவுமில்லை அதுவுமில்லை என்றாகி போனதையும் பார்த்திருக்கிறேன்.

எனவே எந்தளவிற்கு தகுந்த திட்டமிடுதலுடன் அரசாங்கம் விளையாட்டுக்களில் சிறப்பதும் ஒரு நாட்டின் இன்றியமையாத் தேவை என்று உணர்ந்து அது சார்ந்த கட்டமைப்புகளுக்கென வசதிகளை அமைத்துத் தருவதும், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் பொழுது விளையாட்டு மைதானங்களுக்கான தேவையை வலியுருத்தி அப்படி அந்தப் பள்ளிகள் கட்டமைக்கப் பட்ட பின்னரே அனுமதி வழங்குவதும் அவசியமாக்கப்பட வேண்டும், அதுவும் அரசாங்கத்தாலே முடியும்.

மற்றபடி இந்தத் துறை சிறந்து வளரும் போக்கைக் கொண்டே பெற்றோர்களின் ஆட்டிட்யுட் மாறி குழந்தைகளை விளையாட்டில் போடுவதும் ஒரு பிரகாசமான வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களும் முன் வரக் கூடும்; இந்த ஸ்ட்டீரியோ டைபிக் இஞ்சினியர், மருத்துவர், கணினி மென் பொருள் எழுத்தர் என்பதனை தாண்டியும் குழந்தைகள் ஊக்குவிக்கப்படலாம் ...

கல்வெட்டு said...

தெகா ,
அரசு செய்யவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் தனக்கு என்ன வேண்டும் என்பதில் மக்களுக்கு தெளிவு வேண்டுமா இல்லையா?

கிராமங்களைச் சொல்லி தப்பிக்க வேண்டாம். சென்னை போன்ற நக‌ரங்களில் மெத்தப்படித்த மக்கள் அரசிடம் என்ன எதிர்பார்கிறார்கள் விளையாட்டு சம்பந்தமாக?

எத்தனை பேர் பள்ளியின் விளையாட்டு கல்வியை விசாரிக்கிறார்கள்?

ஸ்போர்ட்ஸ் எனது இவர்களைப் பொறுத்தவரை கல்வி அல்ல.

**

தமிழகத்தில் நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்கள் படிப்பில் கோட்டைவிட்டு எதற்கும் இலாயக்கு இல்லாதவர்களாகிறார்கள். படிப்பில் கோட்டைவிட்டால் விளையாடமுடியாது அமெரிக்க‌ பள்ளி கல்லூரிகளில் . கல்வியில் ஒரு குறிப்பிட்ட தகுதி (ரேங்க்) வாங்கியவர்களே பள்ளி/கல்லூரி சம்பந்தமான அதிகாரபூர்வ போட்டிகளில் சேர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள். நல்ல உதாரணம் Blindside படம். சட்டென்று புரியும் கல்வி ப்ளஸ் விளையாட்டு எப்படி சேர்ந்து பயணிக்கிறது என்று தெரியும்.

**

முதலில் பிள்ளை அழுகட்டும் தெகா பால் கொடுக்கலாம். :-))

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு,

//ஆனால் தனக்கு என்ன வேண்டும் என்பதில் மக்களுக்கு தெளிவு வேண்டுமா இல்லையா? //

இந்தத் தெளிவு எல்லாம் அந்த விளையாட்டுத் தளத்தில் இருக்கும் முன்னோடிகளின் வளர்ச்சிகளைக் கொண்டே மக்களின், பெற்றோர்களின் கண்ணோட்டம் மாறுகிறது. அதற்கான prototypes எங்கே? இப்படியும் ஒரு நாடாக வளர்ந்து காட்ட வேண்டுமென்ற aggressive compaign and demand வைத்தால் அல்லவா மக்களும் அதனில் தனது குழந்தைகளை ஆர்வத்துடன் போடுவார்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க முடியுமென்ற நம்பிக்கையுடன்.

ஆனா, ஒரே ஒரு சானியா டென்னிஸ்ல, அப்புறம் மட்டையை விட்டுத் துழாவுற வீரர்கள் மட்டுமே இப்பொழுது லைம் லைட்டிற்கு கீழே இருந்து காமிப்பதால், மக்கள் எல்லாருக்கும் அதன் மீது ஒரு கண்ணாக இருக்கலாம்.

இப்போ ராணுவத்தில சேருபவர்கள் எங்கயும் சரி எல்லாரும் நாட்டைக் காக்கப் போகிறோமென்ற ஜுவலையுடனா செல்கிறார்கள், பிழைத்துக் கிடக்க வேறு வழியே இல்லையென்றால் சேருவது மாதிரியும், ஆள் பற்றாக் குறை வரும் பொழுது எந்தந்த முறையிலோ எல்லாம் பிரச்சாரம் பண்ணி சேர்ப்பதில்லையா? அது போலத்தான் மக்களை மயக்கி இந்தத் துறையிலும் பயிற்சி அளித்து சிறக்க வைக்க முடியுமென்று நான் நம்புகிறேன்.

//முதலில் பிள்ளை அழுகட்டும் தெகா பால் கொடுக்கலாம்.//

அட கதறிகிட்டு இருக்கிறவனுக்கே ஒண்ணும் செய்ய மாட்டீங்கிறாய்ங்கிங்கிறேன்... இந்தியா ஹாக்கி டீம் மக்கள் எல்லாம் என்னாச்சு???? எங்கே அந்த புகழ் பெற்ற விளையாட்டு நிற்கிறது இந்திய மேடையில்?

People need to be insisted and firmly make them to believe sports also truely a lucrative profession can do so much with it அப்படிங்கிற நம்பிக்கை வர வைக்கணும்... அது யாரால கொடுக்க முடியும்?

Thekkikattan|தெகா said...

குமரேசன்,

ரொம்ப அருமையான பின்னூட்டம். நீண்ட காலம் நீங்க இந்த அலங்கோலத்தை கவனிச்சிட்டு வார மாதிரி இருக்கு. கண்டிப்பாக நமது மீடியாக்களின் வடிகட்டிய முட்டாள்தனமும் ஒரு முக்கிய காரணமென்பதனை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு முறையும் விளையாட்டுச் செய்திகள் என்று கொடுக்கும் ஒரிரு நிமிடங்களிலும் இந்த மொக்கை கிரிக்கெட் பற்றி சொல்லி நிரப்புவதைக் காணும் பொழுது இந்தியாவில் வேறு எது போன்ற விளையாட்டுக்களுமே இல்லையா என்று தோணாமல் இருந்ததே கிடையாது.

//கால்பந்து ஒரு நல்ல விளையாட்டு மட்டுமல்ல பணம்காய்ச்சி மரமும் கூட. கால்பந்து ஒரு குளோபல் ஸ்போர்ட் அதனால் உள்நாட்டில் திறமையை காட்டினால் மான்செஸ்டர்யுனைடெட்,பார்சிலோனா,லிவர்பூல்,செல்சி,ரியல் மாட்ரிட் போன்ற கிளப்புகளில் ஆட விளையாட வாய்ப்பு கிடைக்கும்.//

கண்டிப்பாக நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆஃப்ரிக்கா நாடுகளிலிருந்தும், தென் அமெரிக்காவிலிருந்தும் அது போன்று ஆட்கள் பணத்தை நீங்கள் கூறியபடி அள்ளிக் குமிக்கிறார்கள் மற்றுமொரு அன்னியச் செலவானி பணமாக என்பதனை நானும் அறிவேன்...

நீங்கள் இது தொடர்பாக தொடர்ந்து உங்களது தளத்தில் எழுதலாமே. நல்ல முயற்சிதானே! தொடர்ந்து செய்யுங்க. கண்டிப்பாக ஆதரவு கிடைக்கும் குமரேசன். நன்றி!

கல்வெட்டு said...

//அட கதறிகிட்டு இருக்கிறவனுக்கே ஒண்ணும் செய்ய மாட்டீங்கிறாய்ங்கிங்கிறேன்... இந்தியா ஹாக்கி டீம் மக்கள் எல்லாம் என்னாச்சு???? எங்கே அந்த புகழ் பெற்ற விளையாட்டு நிற்கிறது இந்திய மேடையில்?

People need to be insisted and firmly make them to believe sports also truely a lucrative profession can do so much with it அப்படிங்கிற நம்பிக்கை வர வைக்கணும்... அது யாரால கொடுக்க முடியும்?//

நிச்சயம் உங்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன் தெகா. என்னை பிசாசின் வக்கீல் என்று வைத்துக் கொள்ளுங்கள்... :-))))

1. கதறி அழுவது ஹாக்கி விளையாடுபவர்களும் கொஞ்சம் மக்களும். பெரும்பான்மை மக்கள் கிரிக்கெட் கேம் பார்ப்பதே போதும் அதிகமாக இப்போது கிரிக்கெட்டில் அயிட்டம் டான்ஸ் வேறு கிடைக்க ஆரம்பித்து விட்டது. இனிமேல் கொஞ்சம் காபரே போட்டல் கிரிக்கெட்டை அடித்துக் கொள்ள முடியாது.

(கொடுமை என்ன தெரியுமா தெகா. அடுத்த பெண்கள் சியர் லீடிங்கில் ஆடினால் பார்க்கும் அமெரிக்காவாழ் இந்திய மண்டூகங்கள் , அவர்கள் பெண்னை சியர்லீடிங்கில் சேர்க்க மாட்டார்களாம். ஆபாசமாம். அப்ப அடுத்த பெண்கள் ஆடுவதை ஸ்போர்ட்ஸ்சின் ஒரு அங்கம் என்று வெட்கமில்லாமல் பார்கிறாயே ? கிப்போகிரேட்டுகள். அமெரிக்க மக்களுக்கு சியர் லீடிங்கும் ஒரு ஸ்போர்ட்ஸ்தான். அவர்களது மகள் சியர் லீடிங்போனால் அமோகமாக வரவேற்கவே செய்வான். )

2. மக்களை திருப்ப அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்கிறீர்கள். நான் கொஞ்சமாவது எருமைமாட்டு உணர்வில் இருந்து மக்களிடம் மாற்றம் அவர் வேண்டும் என்று சொல்கிறேன்.

3. தூங்குபவனை(மக்கள்) அரசு எழுப்ப வேண்டும். பிரச்சனை என்ன என்றால் எழுப்ப வேண்டியவனும் தூங்குவதே. தூங்குபவன் அவனாக எழுந்திருக்கவும் மாட்டான். யார் எழுப்புவது? நாமதான் தெகா. நாம்தான் தட்டி எழுப்பவேண்டும். நிச்சயம் நாம் எழுப்புவோம் தெகா.

.

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

//தெகா!என்னா இது?ஓட்டப்பந்தயத்துல கடைசி நிமிசத்துல மூக்கை நீட்டி ஜெயிக்கிற மாதிரி இப்ப வந்து கடைய திறக்கறீங்க:)

நாங்க ஒரு மாசமா மாநாடு நடத்தி நன்றி நவிழலும் சொல்லி முடிச்சிட்டோம்.//

ஹாஹாஹா.... அதுக்கு நான் என்ன செய்றது, பதிவெல்லாம் பொங்கி பிரவாகமெடுக்கும் போது மட்டுமே என்னிடமிருந்து, not like obsessive compulsionல எல்லாம் போடுறதில்லை :))) ... லூசில விடுங்க.

//மொதப்படம் சுட்டது சரி.இரண்டாவது படம்?
தமிழில் சொல்லனுமின்னா சான்ஸே இல்ல.//

ஆமால்ல. எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. அந்த சாதுக்கள் விளையாடிய படத்தை பார்த்தவுடன் படமே பல கதைகள் சொல்ல வந்த மாதிரி இருந்திச்சு. அந்த கிழங்களுக்கே இன்னமும் இவ்வளவு ஃபயர் இருந்து என்ன வேகமா பந்தை எடுக்கிது பாருங்க, அப்போ இளமையா இருக்கும் பொழுது என்ன வேகம் இருந்திருக்கும், அத்தனை சக்தியும் சும்மாதானே போயிருக்கும் - அப்படிங்கிற கோணத்தில நான் பார்த்தேன்.

//இதுக்குத்தான் அவசர அவசரமா பின்னூட்டம் போடக்கூடாதுங்கிறது.முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பா?ஒரே சொதப்பல்.//

அடப் பாவத்தே அதுவும் அப்படியா, எனக்கு அன்றைய ஆட்டம் விறுவிறுப்பு ஏன் சொல்லுங்க, நிறைய ஆட்டத்தை நான் பார்க்கலை :D, ஆனா, முழுசா இறுதி ஆட்டம் பார்த்தேன், அதுனாலாயா இருந்திருக்குமோ ;)!!

kumaresanphoto said...

தெக்கிட்டானுக்கு நன்றி!தாங்களும் தொடர்ந்து எமது இணையதளத்திற்கு கட்டுரைகள் வடிக்கவும் அதனை படிக்கவும் வேண்டுகிறோம்.தருமி சார் ரெகுலராக தருவார்,தருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்.உலக கோப்பை சமயத்தில் ஆனந்தவிகடனில் எனக்கு 5 வாரங்கள் கட்டுரை வடிக்கவும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியான விஷயத்தை இந்த நேரத்தில் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

Thekkikattan|தெகா said...

//ஜான் கார்த்திக் ஜெ said...

//இந்த இத்துப் போன அரசியல் வாதிகளை ஒரு சுனாமி கொண்டு போனாத்தான் உண்டு.// சுனாமியும் இத்துப்போன ஒன்னு தான்! அரசியல்வாதிகள் எங்க போறாங்க.. :( என்னைக்கு தான் நம்ம ஆடுற புட்பால் பார்க்க போறோமோ!//

ஜான், உம்மோட ஆற்றாமையில எவ்வளவு சோகம் ஒளிஞ்சிக்கெடக்கு... புரிஞ்சிக்கிறவிங்க புரிஞ்சிகிட்டா நல்லாத்தான் இருக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை நம்புவோம் ;)

Thekkikattan|தெகா said...

// என்னை பிசாசின் வக்கீல் என்று வைத்துக் கொள்ளுங்கள்... :-))))//

அந்தப் பிசாசு இல்லாமல் உண்மையை எப்படி வெளியிலக் கொண்டு வாரதாம். அவசியம் வாங்க பேயீஈஈ :)).

//அதிகமாக இப்போது கிரிக்கெட்டில் அயிட்டம் டான்ஸ் வேறு கிடைக்க ஆரம்பித்து விட்டது. இனிமேல் கொஞ்சம் காபரே போட்டல் கிரிக்கெட்டை அடித்துக் கொள்ள முடியாது.//

ஹாஹாஹா, கல்வெட்டு கலக்கல் போங்க. அயிட்டம் டான்ஸ், மரத்திற்கு ஒரு சேலை கட்டி அது காத்தில பரந்து ஆடினா கூட கலை நுணுக்கத்தோட பார்க்கிற கலாச்சார கோமான்களின் பார்வை கோணத்தைப் போயி, அயிட்டம் டான்ஸ் ஆக்கிப்புட்டீங்களே... :)

//அப்ப அடுத்த பெண்கள் ஆடுவதை ஸ்போர்ட்ஸ்சின் ஒரு அங்கம் என்று வெட்கமில்லாமல் பார்கிறாயே ? கிப்போகிரேட்டுகள்.//

அட இது கூட தெரியாதா? அடுத்த மாநிலத்து பொண்ணை நடிகையா கூட்டியாந்து நம்ம நடிகர்களை விட்டு கட்டிபிடிக்க விட்டா, அதில கெளரதை இருக்கிற மாதிரியேதான் இதுவும் ;). சரி, விடுங்க இப்படிப் பாருங்க, இன்னொரு நாட்டிற்குள்ள போர் நடத்திப் போயி அந்த நாட்டுப் பெண்களை வன்புணர்வு செஞ்சா அது எப்படியோ அதே மாதிரிதான் நாங்க செய்றோம் வெள்ளைக்காரய்ங்கிட்ட இந்த ச்சீயர் லீடிங் ‘அயிட்டங்கள’கூட்டியாந்து :-P ...

உங்க பாயிண்ட் எல்லாம் உண்மைதாங்க... # 2 மற்றும் 3 ரொம்ப உண்மை. ஒருத்தனை ஒருத்தன் எழுப்பிக்கிட்டு எழுந்திருக்கணும். தெம்பா இருக்கு நீங்க சொல்லுறது...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

எங்க மாமா மூன்று பேர், எங்க நாத்தனார் பையன்கள் மூன்று பேர் இன்னும் நிறைய உறவினர்கள் கால்பந்தாட்ட வீரர்கள். அவர்களை உற்சாகப்படுத்த உறவுகளே தயாரில்லை. இந்த விளையாட்டில் கால் ஒடிவது, கை பிசகுவது ரொம்ப சகஜம். அந்த நேரங்களில் வீடுகளில் கிடைக்கும் திட்டும், தனி மரியாதையையும் பொருட்படுத்தாமல் விளையாடுவார்கள். ஆனாலும் என்ன பயன். ஜெயிக்கும் அன்று ஒரு கோப்பை, பரிசுப்பணம் அதோடு முடிந்து விடுகிறது.என்னைக்கேட்டால் (!) கால்பந்தாட்டத்திற்குத் தேவையான சக்தி மிகுந்த வீரர்களை கிராமங்களில் தான் கண்டெடுக்க முடியும். அவர்களின் அடிப்படைத்தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்தால் நல்ல வீரர்கள் கிடைப்பார்கள்.

Related Posts with Thumbnails