Monday, September 20, 2010

ஊடுருவி...



கிறுக்கனாக்கிப் போன அந்த
ஒற்றை வார்த்தையின் சுகத்தில்
அடர்வான ஒரு பாடலொன்றை கேட்டவாறு
காலச் சுழிப்பற்ற ஓர் ஆழ்கறுந்துளையின்
வழியாக பயணித்தவாறே அமிழ்ந்து திளைக்கிறேன்...

பெரும் வெடிப்பினைப் போல் எங்கும்
சிதறிய வெண் வண்ணத்தினூடே
கண் முன் குமிழ்ந்த உயிரினங்களுடன் ஒன்றித்து
உட்கொண்ட சங்கீதத்தில் நனைந்தபடி எனை தொலைத்து
வெளியேறுகையில்
வெளியெங்கும் சிதறியொடுங்கிய
வார்த்தை இடிபாடுகள் கிறுக்குநிலையின்
மகத்துவமறிய நிழலாடியது!

6 comments:

மூன்றாம் கோணம் said...

அருமை!

பழமைபேசி said...

ஊடுருவி

Thekkikattan|தெகா said...

பழமைபேசி,

ஊடுறுவி - என்று நான் முதலில் கருதி வைத்தமைக்கு ஒரு காரணமுண்டு; ஊடாடி’’ அறு , என்ற பொருளில் பற்றறுக்கும் தொனியிலே சிந்தித்து வைத்தது.

ஊடுருவி - என்பதும், காலங்களுனூடான ஊடுருவலில் பெற்ற ஞான நிலையாகவும் அறியத்தருவதால் இரண்டுமே இங்கே சரியாகவே இருப்பதாகப் படுகிறது.

நன்றி- சுட்டியமைக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏன் இப்படி ? !
முதல் வரி நல்ல்ல்ல்லாப் புரியுது..

கோமதி அரசு said...

கிறுக்கு நிலையின் மகத்துவம் /


நல்லா இருக்கு.

Unknown said...

//ஏன் இப்படி ? ! //

அதானே, ஏன்ன்ன்ன்?? :)

Related Posts with Thumbnails