Thursday, November 18, 2010

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் இடைவெளி: What if...

தொடர்ந்து பதிவுகளா கொடுப்பதாக இந்த வாரம் அமைந்து போனதிற்கு வருந்துவதா? மகிழ்ச்சி கொள்வதா? பொதுவாக பழக்க போதைக்காக பதிவு எழுதுவது என்பது என்னிடம் இல்லை, சராசரியாக ஆண்டிற்கு 25 பதிவுகளே பதிந்து வருகிறேன். அது போன்ற பதிவுகளும் உள்ளிருந்து கொப்பளித்து வெளிக் கிளம்பும் வாக்கில் அமைந்தாலே உண்டு.

எண்ணங்கள் தவிர்க்க முடியாத வழியில் ஒரு குழந்தை முட்டிக் கொண்டு தாயின் மடியிலிருந்து வெளிவருவதாகவே எனது கட்டுரைகளும் இருந்தாலே ஒழிய அது வெளி உலக பார்வைக்கு கிடையாது. அப்படியாக உறங்க போட்ட கட்டுரைகளும் என்னிடமுண்டு. எதற்காக இதனை இங்கு முன் வைக்கிறேன் என்றால் தொடர்ந்து பதிவுகளை கொடுத்து திகட்ட வைத்து விடக் கூடாதே என்பதின் அடிப்படையிலேயே. நோ மோர் சுய புராணம்!

இந்த வாரத்தில் பல பதிவுகள் அவரவர்கள் பார்வையில் எது ஒழுக்கம்/பண்பாடு/பாரம்பர்யம்/கலாச்சாரம் என்று முன் வைத்து தன் தனது குதிருக்குள் எது போன்ற ஊறல்கள் இருக்கிறது என்பதனை மூடியை அகற்றி காமித்துக் கொண்டார்கள். என்னுடைய பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையிலும், அவர்களைத் தாண்டி எனக்கு கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் பெறப்பெற்ற உலக ஊடாட்டங்களைக் கொண்டும் எது போன்ற மன முதிர்ச்சியை, விசயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அப்படியே இல்லையெனில் கேள்விப்படும் அல்லது அந்த சமயத்தில் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியாத விசயங்களில் தலையை குனிந்து கொண்டு அதில் என்ன இருக்கிறது ஏன் என்னால் என் மன உலகை அந்த விசயம் சார்ந்து விரித்துக் கொள்ள முடியவில்லை என்ற பாங்கில் உள்ளரயே குமைந்துக் கொண்டு, காணாங் கோழியாகிவிடுவேன்; நன்கு புரிந்துகொள்ளும் வரையில்.

இங்கு நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் நிகழ்வுகளும், அது இயங்கும் தன்மையும் ரொம்ப விசிச்சிரமானது. எப்படியான வளைவுகளில் எது போன்ற ஆச்சர்ய விசயங்களை நம் வழியில் போட்டு அதனை புரட்டிப் போட்டுவிட்டு மேற்கொண்டு நம் பயணத்தை உந்தி தள்ள சவால் விடப் போகிறது என்பது யாருக்குமே தெரிவதில்லை.

அது போன்ற சவால்கள் மரணம் என்பது எவ்வளவு நாம் ஒவ்வொருவருக்கும் நிச்சயதாம்பூலம் செய்யப்பட்டு எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கும் ஒரு கொண்டாட்டமோ அது போலவே இது போன்ற வாழ்வின் சவால்களும் வந்து போகும். நாம் வளரும் பொழுது, அதிர்ஷ்ட வசமாக பொறுப்பான பெற்றோர்களை பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களும் அவர்களுக்குத் தெரிந்த சமூக அறிவைக் கொண்டும், தானே வளர்த்தெடுத்துக் கொண்ட சுய அறிவையும் கொண்டுதான், தன் குழந்தைகளுக்கு வாழுமிடம், சூழல்களின் வழியாக கையிறக்கம் செய்து கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த பெற்றோர்களுக்கும் ஓர் அறிவுசார் எல்லை இருக்கிறது. அதனைத் தாண்டி தான் பெறாத அறிவையும், பேரையும், புகழையும் அடையவே பொறுப்பாக நின்று தனக்கு சரியென பட்ட விசயங்களைக் கூறிக் கொண்டே தன் பெற்ற கல்வியை விட தன் குழந்தைகளுக்கு சிறப்பாக அமையுமாறும், தாங்கள் புழங்கிய மனிதர்களைக் காட்டிலும் இன்னும் கூடுதலாக அறிவில் சிறந்த மனிதர்கள் உலவும் உலகில் சங்கமித்து பரந்து விரிந்து வன்முறையற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து அவர்கள் சந்ததியை பெருக்க வேண்டுமென்று நினைத்தே அவர்களுக்கு கிடைக்காத அத்தனை வாய்ப்புகளையும் மறந்து/மறுத்து குழந்தைகளுக்கு வழங்கியே வாழ்ந்து விடுகிறார்கள், இல்லையா?

பெற்றோர்களுக்கும் அறிவுசார் எல்லைகளைக் கொண்டு என்று வரும் பொழுது, அவர்களுக்கு எட்டிய வளர்ச்சியைக் கொண்டே அவர்களால் தனக்கு வழங்கப்படும் வாழ்வின் சவால்களுக்கு விடையளிக்க முடியுமல்லவா? இது ஒரு சின்ன லாஜிக். தனது மகன்/மகள் தன்னைக் காட்டிலும் இன்னும் பெரிய பல்கலையில் பயிலும் வாய்ப்பைப் பெற்று, அறிவிலும், அவர்களுக்குக் கிடைத்த கூடுதல் உலக/மனித அனுபவம், வெளிநோக்கு (exposure) தளங்களைக் கொண்டு தன் இருப்பை கூடுதலாக ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும் நிலையை எட்டிய பிறகு எப்படி அந்த மூளை இன்னமும் தனது பெற்றோர்களின் அறிவு சார் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்து விட முடியும்?

அதனை ’உணர்ந்து கொள்ளும்’ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை வெளித் தளத்தில் எப்படி குப்புரடிச்சு எழுந்து தவழும் நிலைக்கு வந்தவுடன் தன் கண்களையே நம்ப முடியாமல் கைகொட்டி ஆர்ப்பரித்து கண்கள் அகல விரிய தங்களது முதல் அனுபவத்தை பெறுவார்களோ அதனைப் போன்றுதான், பின்னாலிலும் தன்னை விட பல வேறு வாழ்க்கை சவால்களை எதிர் நோக்கி முன்னெடுத்துச் செல்லும் பக்குவத்திற்கு வந்திருந்தால் வாயடைத்து சந்தோஷத்தில் நின்று அனுபவிப்பார்கள்.


தன் வயதில், அதே தெருவில் ஏதோ ஒரு social stigmaவைக் கொண்டு ஒரு குடும்பமே வெட்டிக் கொல்லப்பட்டதையோ, அல்லது சமூகமாக நெருக்கடி பேச்சுகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதையோ அவர் கண்ணுற்றிருக்கலாம் அது அப்படி நிகழ்ந்தது சரியென்றும் எண்ணியே அவரும் தனது முதுமை எட்டியிருக்கலாம். ஆனால், அந்த பெற்றோர்களைக் காட்டிலும் பல சாத்திய வித்தைகளை பெறும் வண்ணம் வாய்ப்புகளை பெற்று வளர்ந்த இந்த மனிதனும் அதே பாதையை தேர்ந்தெடுக்கிறான் என்றால், எங்கே தவறு நிகழ்ந்திருக்கிறது?

இப்போதான் பதிவின் கருவிற்கு வருகிறேன். இங்கேதான் குழந்தை பருவத்திலிருந்து பதின்மம் வரைக்குமான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் எந்தளவிற்கு அமைகிறதோ அதனை ஒட்டியே எதிர்கால சமூக முகம் காட்டல் ஒரு தனி மனிதனுக்கு இருக்கப் போகிறது என்பேன்.

சில சமயங்களில் இந்த உலகம் பூராவும் வாழ்க்கையில் பக்குவ மடைந்த மனிதர்கள் கல்வியறிவே இல்லாது போனாலும் ஒரு அன்னை தெரசா ரேஞ்சிலேயோ ஏன் அப்படி, குறைந்த பட்சம் மனிதாபிமான முள்ளவர்களாக, தன் மனசாட்சியைக் கேட்டு தனக்கு நேர்ந்தால் (what if...) என்ற அடிப்படைக் கேள்வியை கேட்டுக் கொள்ளும் நல்லவர்களாகிப் போய்விடுகிறார்கள். அவன் கைக்கு மீறி நடந்த ஒரு நிகழ்விற்காக அவன் கழுத்தில் நான் கத்தியை வைக்கிறேனே, நாளக்கி இதே போன்று என்னால் எடுக்கப்படாத ஒரு முடிவிற்காக என் கழுத்தில் அவன் கத்தியை வைத்தால்.... (அப்படியாக யோசிப்பது...)

ஊரில் ஒரு சம்பவம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரு தரபட்ட பெற்றோர்களை வைத்து பார்க்கலாம். ஒரு பெண் தனக்கு தன் பெற்றோர்கள் பார்த்து செய்யப் போகும் திருமணம் பிடிக்காமல் தனக்கு பிடித்தவனுடன் நடையைக் கட்டி விடுகிறாள். அதுவும் திருமணத் தேதியெல்லாம் குறித்து பத்திரிக்கையும் அடித்து விநியோகித்து என்ற காலகட்டத்தில். இப்பொழுது இது வெளியில் தெரிய வருகிறது, வளர்த்தெடுத்த குடும்பத்திற்கும், தாம்பூலம் போட்ட குடும்பத்திற்கும் பிறகு சம்பந்தமே இல்லாமல் வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் ஊருக்கும் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது நல்ல பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் படிப்பறிவே இல்லாத பெற்றோர் # 1) தனது பிள்ளைகளுடன் இரவு உணவை உண்டு கொண்டே சம்பாஷிக்கிறார்கள்... நன்றாகத்தானே போயிக்கொண்டு இருந்தது எப்படி பெத்தவங்களுக்கே தெரியாமல் இப்படி நடந்து போனது, இன்னும் கூடுதலாக அவரின்/ளின் அப்பா நேரத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கலாம், அவள்/னுடன் பேசி தெரிந்து கொண்டிருக்கலாம், வீட்டில் உரையாடுவதற்கு கூடுதலாக வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கலாமென்று லாஜிக்கல் விசயங்களின் பொருட்டு பேசிக்கொண்டே... ம்ம்ம் என்ன பிரச்சினையோ நமக்குத் தெரியாது. பாவம்! எவ்வளவு மனக் கஷ்டமோ இப்பொழுது...

என்று பேச்சை அடுத்த தளத்திற்கு நகர்த்தி எடுத்துச் செல்வார்கள். அது போன்றே ஒரு தொழு நோயாளியோ அல்லது மனப் பிறழ்சி கொண்டு அலைந்து திரியும் ஒரு நபரைப் பார்க்க நேர்ந்து அவர்கள் மற்ற சிறார்களால் கல்லை விட்டு எரிந்தோ அல்லது பரிகசித்து பேசி/துன்பமிழைப்பதனைக் கண்டால் தனது பிள்ளைகளுக்கு அது போன்று பேசுவதின் ‘அறியாமை’யையிம், அது துன்பம் இழைக்கப்பட்டவருக்கான வலியையிம் எடுத்துரைப்பார்கள் - அது பண்பாட்டுடன் வளர்ந்து வரும் குடும்பத்துக்கான அறிகுறி. அதாவது அடுத்தவர்களின் மனது புண்பட தன் வழியில் நேரடியாக ஒரு விசயத்தை இழைக்காதே என்பது அடிப்படையில் விதைக்கப்பட்ட ஒரு ”யுனிவெர்சல் நல்லொழுக்கம்.” அதனை ஆண்டிபட்டியிலும் பயன்படுத்தலாம், அண்டார்டிகாவிலும் பயன்படுத்தலாம். உதை வாங்கி சாக வைத்து விடாது.

குடும்பம் # 2) நல்ல படிப்பறிவும் வெளி நோக்கு பார்வையும் இருந்தாலும் அந்த பண்பாடு என்ற வஸ்து விழிப்புணர்வு கிடையாத பெற்றோர்கள். அங்கு தினமும் அடுத்த குடும்பங்களைப் பற்றிய பொரணிபேசுதல் அவர்களின் பொழுது போக்கு. அதனில் குழந்தைகளும் தெரிந்தோ தெரியாமலோ காது வழியாக கேட்டு பழகி பிறகு தானும் கலந்து கொள்ளும் அளவிற்கு வந்த குடும்பம். அங்கும் இது போன்ற ஒரு உணவு கூடல் - அங்கும் மேற் கூறிய நல்லொழுக்க அடிப்படை குறிகளைக் கொண்ட குடும்பத்திற்கான அதே சம்பாஷணை. அங்கு பெற்றோர்கள் சொல்கிறார்கள் - காதலனுடன் நடையைக் கட்டிய பெண்ணின் அம்மா பொறுத்தான முதல் விமர்சனம் ’அவ, பொம்பளையா அவ, சரியான ஓடுகாலிய பெத்து வைச்சிருக்கா’ இப்போ அப்பா சொல்லுறார் ’நானா இருந்த்த்தாஆஆஆ அந்த பொண்ண கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்...’ அப்படியே தொழு நோயாளி/மனப் பிறழ்வு சூழ்நிலைக்கும் இது போன்ற முரட்டு வைத்தியம் ‘இவிங்கள எல்லாம் தெருவுக்குள்ளர விடாம கூடியடிக்கணும்... சகிக்கல’ அப்படின்னு சொல்லிட்டு நகர்ந்திடும்.

இப்போ பேசுவோம். இந்த இரண்டு குடும்ப சூழல்களில் வளர்ந்த பிள்ளைகள் எந்தந்த சூழ்நிலைகளில் எது போன்ற ரியாக்‌ஷன்களை முன் வைப்பார்கள்? அந்த அடிப்படை சம்பாஷணை விதைத் தூவல் இரு வேறு உலகங்களாக பரிணமிக்கிறது ஒவ்வொரு தனிமனித சமூக வெளி நோக்கிலும், இல்லையா? அப்பொழுது, வாழ்க்கை தன்னை விட பெரிது, சூழ்நிலைகளை அது பாட்டுக்கு நகர்த்திக்கொண்டே செல்கிறது, #2வில் அந்த அப்பா சொன்னதைப் போன்று ...அந்த பொண்ணை கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்னு.... சொன்னதிற்கு இணங்க அவர்களின் பிள்ளைகள் நாளக்கி இது போன்று ஒரு சம்பவம் யாருடைய குடும்பத்திலோ நிகழப் போக அதே வார்த்தையை உதிர்ப்பார் அல்லது தனக்கு தன் பிள்ளை தன்னை விட அறிவுசார் தளத்தில் எங்கோ போய் நிற்கின்றது இவரால் ஜுரணிக்க முடியாத ஒரு கருத்தியலைக் கொண்டு வருகிறது அப்பொழுது, வெட்டிப் போட்டுவிட்டு சிறைச்சாலைக்கு அவர் சென்று விடுவாரா, அல்லது தானே விஷமருந்தி மரணத்தை கட்டி பிடித்துக் கொள்வாரா?

மீண்டும் இங்கேதான் அந்த பெற்றோர்களின் அடிப்படை உரையாடல் பிள்ளைகளிடத்தில் கைகூடி மிக்க நலன் பயக்கிறது. தன் சக்திக்கு மீறிய தனிக் குடும்ப நிகழ்வுகள் தன்னைச் சுற்றி நிகழும் பொழுது (முட்டாள் தனமான, எதிர்மறை எண்ணங்களை கொட்டுவதை தவிர்க்க), what if... கேள்வியைக் கேட்டு மூர்க்கமான தன் சினத்தை மூக்கணாங்கயிறு போட்டு அடக்கிக் கொள்வதின் பொருட்டு அந்த அடிப்படைக் கல்வி உதவ வேண்டும். தன்னை விட பெரிய நிகழ்வு அது வெளியில், ஆனால் அதற்காக தான் முட்டி தேய உழைத்து உருவாக்கிய/வளர்த்த பிள்ளைகள் தன் வாழ்க்கை அளவை விட Outgrow ஆகி நிற்கிறார்கள் என்பதனால் தன் குடும்பத்தை நிந்தித்து கொள்வது எப்படி சமயோசிதமாக யோசிக்கும் மண்டைக்கு சாத்தியம்?

இப்போ புரிகிறதா? நம்முடைய பெரும்பாலான வியாதிகளின் மூலம் எங்கிருந்து வருகிறதென்று. ஆம்! நாம் பிள்ளைகளை நல் வழி படுத்தவே “நமக்குத் தெரிந்த விசயங்களை” உட்புகுத்தி வளர்க்கிறோம், ஆனால் நாளக்கி நம் மீது பிள்ளைகள் ஏறி நம் பார்வைக்கும் எட்டாத தூர விசயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் உணரவேண்டும். வளர்வதுதான் வாழ்க்கை தேய்வதல்லவே!

எனவே, முடிந்தளவிற்கு குழந்தைகளுடன் கிடைக்கும் ‘வாய்ப்புகள்’ தோரும் நல்ல ’யுனிவெர்சல் ஒழுக்கம் சார்ந்த’ உரையாடல்களை நிகழ்த்துங்கள் அது பின் வரும் காலங்களில் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் யாரையும் தனி மனித குடும்பங்களில் மூக்கை நுழைத்து பரிகசிக்கும் காட்டுமிராண்டித் தனத்தை தொடராத வாக்கில். அதுவே ஆரோக்கிய வாழ்வு உனக்கும், எனக்கும் ஒரு சமூகத்திற்கும் ஏன் இந்த உலகிற்குமே!!




பி.கு: அண்மையில் இந்தக் கட்டுரை எனது பெற்றோர்களுடன் உரையாடும் பொழுது கருவாக உருவானது. இங்கே அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல், உங்களுக்காகவே!!

69 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம். தொடர்ந்து குழந்தைகளிடம் பேசுவோம் நிறைய பேசுவோம்..

நசரேயன் said...

//தொடர்ந்து பதிவுகளா கொடுப்பதாக இந்த வாரம் அமைந்து போனதிற்கு வருந்துவதா? மகிழ்ச்சி கொள்வதா? பொதுவாக பழக்க போதைக்காக பதிவு எழுதுவது என்பது என்னிடம்
இல்லை//

போட்டு தாக்குங்க .. நாங்க எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம்

நசரேயன் said...

//தொடர்ந்து குழந்தைகளிடம் பேசுவோம் நிறைய பேசுவோம்//

அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்

ராஜ நடராஜன் said...

தேசங்களையும் தாண்டி பெற்றோர் பிள்ளைகளுக்கான உரையாடல் குறைந்து வருகிறதென்பதே உண்மை.

எழுத்து நல்லா கைகூடி வருது.

ராஜ நடராஜன் said...

இது போன்ற இடுகைக்குமா அனுமதி சாவி போடுவாங்க?

Thekkikattan|தெகா said...

இது போன்ற இடுகைக்குமா அனுமதி சாவி போடுவாங்க?//

வாங்க ராஜ நட, அப்படியில்ல மூக்கணாங்கயிறு போட்டு தன் சுவாசத்தை கட்டுப்படுத்த தெரியாதவர்களுக்கு தெரிந்து கொள்ளும் வரையிலும் இது போன்ற பூட்டுக்கள் தேவைப்படுகிறதே என்ன செய்வது... :)

இப்போ என்ன திறந்து விடணுமா... ஏன் நிறைய பேசப் போறீங்களா? இதன் பொருட்டு வாங்க நிறைய உரையாடுவோம்.

ராஜ நடராஜன் said...

//வாங்க ராஜ நட, அப்படியில்ல மூக்கணாங்கயிறு போட்டு தன் சுவாசத்தை கட்டுப்படுத்த தெரியாதவர்களுக்கு தெரிந்து கொள்ளும் வரையிலும் இது போன்ற பூட்டுக்கள் தேவைப்படுகிறதே என்ன செய்வது... :)
//

இப்படியும் ஒண்ணு இருக்குதுல்ல?அதுவும் சரிதான்.

பெற்றோர்களும்,பிள்ளைகளும் இன்னும் அவர்களாகவே இருக்கிறார்கள்.முன்பு இந்திய அளவில் எப்பொழுதாவது திரையரங்கு போவதென்பதே பொழுதுபோக்காக இருந்தது.பத்திரிகை படிக்கணுமுன்னா சலூன்கடைகள்.புத்தகம் படிக்கணுமின்னா நூலகம் இப்படி.மீதி நேரங்கள் குடும்பத்தோடே ஒட்டி வாழும் நிலை.பெண்கள் பேன் பார்க்கிறேன் பேர்வழின்னு கதைகள்,பாத்திரம் விளக்குறேன்னு பக்கத்து வீட்டு பொரணியெல்லாம் பேச அவகாசம் இருந்தது.பசங்க,பொண்ணுக அவரவர் வயசு,மன அலைக்கு தகுந்தவாறு கூட்டு சேர்வதெல்லாம் இயல்பாய் இருந்தன.

மாற்றங்கள் இவற்றையெல்லாம் விழுங்கி விட்டது.இதோ!உங்களோட இங்கிருந்து அங்கே கருத்து பரிமாற்றம் செய்வது மகிழ்ச்சியாக இருந்தாலும் அம்மணி ”திங்கற சோத்தைக்கூட கவனிக்காம எப்ப பாரு லொட்டு லொட்டுன்னுட்டு:)” சொல்லும் போது அதிலும் நியாயம் இருக்கவே செய்யுது.

பசங்களுக்கு கார்ட்டூன் பார்க்கணும்.எனக்கு செய்தி பார்க்கணும்.இரண்டும் உரையாடலுக்கான இடைவெளியை அதிகரிக்கிறது.இப்படி பல....

ராஜ நடராஜன் said...

//போட்டு தாக்குங்க .. நாங்க எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம்//

நசரு!பின்னூட்டத்துல முன்னேற்றம் காணப்படுது.வாழ்த்துக்கள்:)

Thekkikattan|தெகா said...

பத்திரிகை படிக்கணுமுன்னா சலூன்கடைகள்.புத்தகம் படிக்கணுமின்னா நூலகம் இப்படி.மீதி நேரங்கள் குடும்பத்தோடே ஒட்டி வாழும் நிலை.//

அது போன்று தேடி பெறுபவர்களே பிற்காலத்தில் சுயமாக சிந்திக்கும் நிலையை எட்டி இருக்கிறார்களோ என்று எண்ணச் செய்கிறது, ராஜ நட. அதுவே நீண்ட்ட்ட காலத்துக்கு தாகத்தை தீராத விசயமா வைச்சிருக்கு போல. இருந்தாலும், நம்மூர் பத்திரிக்கைகள் எதுவும் படிக்கும் ஒரு விசயம் பொருட்டு ஞானம் எட்ட வேண்டி கொடுப்பதாக இல்லைதானே... ஜஸ்ட், ஸ்கிம் செய்கிறோம்.

//பக்கத்து வீட்டு பொரணியெல்லாம் பேச அவகாசம் இருந்தது.//

இந்த பொரணிதான்யா, தலீபான் ஸ்டைல் சமூகக் கொலைகள் செய்வதற்கான ஆடுகளம் :)))

//தோ!உங்களோட இங்கிருந்து அங்கே கருத்து பரிமாற்றம் செய்வது மகிழ்ச்சியாக இருந்தாலும்...//

அந்த திட்டு வீட்டுக்கு வீடு போல, ஆனா, இப்போ ஒரு விசயம் படிச்சேன் பாருன்னு, அந்த லைன்ல பேச எவ்வளவு விசயங்கள் இல்லையா, ராஜ நட். அப்படி பேசி பசங்களையும் உங்க கற்பனைக்கு எட்டின மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், உரையாடிட்டு போறோம். ஏன்னா, உங்க சிந்தனை இந்த பரந்த உலகத்திற்கு அவசியம் அன்பரே! வச்சிக்கிட்டு வஞ்சகம் பண்ணாதீக... நான் அப்படிச் சொல்லுறேன்னு வீட்டுக்காரம்மாகிட்ட சொல்லுங்க ;)

கலகலப்ரியா said...

இருங்க வந்துட்டே இருக்கேன்...

தேவையில்லாத தலைவலிங்க கிட்டப் பேசியே தலைவலி...

கலகலப்ரியா said...

||இப்போதான் பதிவின் கருவிற்கு வருகிறேன். இங்கேதான் குழந்தை பருவத்திலிருந்து பதின்மம் வரைக்குமான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் எந்தளவிற்கு அமைகிறதோ அதனை ஒட்டியே எதிர்கால சமூக முகம் காட்டல் ஒரு தனி மனிதனுக்கு இருக்கப் போகிறது என்பேன்.||

ம்ம்... இதுதான் குழந்தை வளர்ப்புப் பத்தி சொல்ல வந்தேன் ... முந்திக்கிட்டீங்க... அவ்வ்வ்வ்

கலகலப்ரியா said...

அருமையான பகிர்வு தெகா...

Thekkikattan|தெகா said...

ம்ம்... இதுதான் குழந்தை வளர்ப்புப் பத்தி சொல்ல வந்தேன் ... முந்திக்கிட்டீங்க... அவ்வ்வ்வ்//

வளர்த்த விதம் சரியில்லீங்க அதான் இப்படி கோணல் மானல யோசிச்சிட்டு கண்ட பேரையிம் பதிவின் தலைப்பா வைச்சி பதிவு போடுறேன் :))...

//அருமையான பகிர்வு தெகா...//

உப்புமா நல்லாருந்திச்சிங்கிறீங்க... some nuts are hard to break; the skull doubly, trebly layered I guess. Still, we should try...

நன்றி!

கலகலப்ரியா said...

அப்புறம் இந்த நடராஜரு இருக்காருல்ல... சர்ர்ர்ர்ரியான ஆளுங்கோ...

இவரு என்ன நினைக்கிறாருன்னு பட்டுன்னு சொல்ல மாட்டாரு...

அதும் செரி மாதிரிதான் தோணுது... இதும் அப்டிதான் தோணுது... ஏதோ சொல்றாய்ங்க... அப்டின்னுட்டு...

சில நேரத்தில வாழைப்பழத்தில ஊசி ஏத்தற மாதிரி மெதுவா சொல்லிட்டுப் போவாய்ங்க...

நம்ம அயன் ராண்ட் பதிவில கூட.. அப்டித்தான் ஏதோ சொன்னாப்ல..

அம்பூட்டுப் பயம்... இப்போதான் தெரியுது பயம் எதனாலன்னுட்டு...

வரட்டு.. பேசிக்கலாம்.. :o)

கலகலப்ரியா said...

||ராஜ நடராஜன் said...
//போட்டு தாக்குங்க .. நாங்க எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம்//

நசரு!பின்னூட்டத்துல முன்னேற்றம் காணப்படுது.வாழ்த்துக்கள்:)||

பாலா சார் போஸ்ட்ல என்னோட பின்னூட்டத்த நசரு பின்னூட்டம் ரேஞ்சுக்கு ஒப்பிட்டதுக்கே உங்கள கழுவில ஏத்தலாம்...

நான் ம்.. சொன்னாலும்... டாட் போட்டாலும்... டாஷ் போட்டாலும் அதில ஒரு அர்த்தம் இருக்கு கேட்டோ...

நசரு படிக்காம கண்ண மூடிக்கிட்டே போடற டெம்ப்ளேட்டும் இதும் ஒன்னா...

கொக்கமக்கா...

இந்த சண்டை எல்லாம் முடியட்டு... இருக்கு...

Unknown said...

குழந்தைகளுடன் ஒரு lively conversation செய்து வந்தாலே அவர்களுக்கு அது ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும். எப்பப் பார்த்தாலும் நாம கம்ப்யூட்டர் தட்டிக்கினே இருந்தா அவங்க டிவி முன்னாடி போய் தஞ்சமடைஞ்சிடுவாங்க. அப்புறம் டிவி ல் சொல்லுவதுதான் அவர்களுக்கும் பெரிதாகத் தெரியும்.

ஆண் பெண் இருவரும் வேலை செய்வது குடும்பத்துக்கும் சரி, ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சமுக விழிப்புணர்வுக்கும் உதவும். தேவையும் கூட. இதனால் குழந்தையை சிறு வயதிலேயே மற்றவரிடம் விட்டு வளர்ப்பதால், அவர்களுக்கு மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பதும் ப்ராதானமாகப் போய்விடுகிறது.

ஆகவே இது வெறும் ஒரு தந்தை, தாய், குழந்தை தவிர, அவர்களுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்கும் சுற்றுப் புற சூழ் நிலையும் மிக முக்கியமானது.

வெறும் ஏழாவது படித்த எங்க அப்பா, எங்களுக்கு குழந்தையில் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை முறை பல விதத்தில் உதவியது. தனது வேலை போக காலையில் 1 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பார்ட்-டைம் செய்வார். எங்களோடையும் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுவார். இருந்தாலும் ஒரு மனுஷனால எவ்வளவு தான் செய்ய முடியும்.

ஒரு அப்பா தான் வெட்டுவேன் குத்துவேன்னு சொல்ற நிலையில் தான் சுற்றுப் புற சூழ் நிலை இருந்தால், வாழ்க்கை நெறி முறைகளை எங்கு நல்லா இருக்குங்கிரத்துப் பார்த்து சொல்ல அல்லது செல்ல வேண்டி வரும்.

நீங்கள் சொல்லியவற்றிலும் முழு உடன்பாடே.

Thekkikattan|தெகா said...

//போட்டு தாக்குங்க .. நாங்க எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம்// == ஹிஹிஹி... விடுவோமா ;)

அட! நசரேய்... ம்ம்ம் விட்டுத் தாண்டிட்டாருப்போய்ய்ய்... அனேகமா அவரோட கீபேர்ட் ஃபிக்ஸ் ஆயிருச்சு போல :P

//அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்//

வும்மைதான், நானும் வழிமொழிகிறேன். இந்த ஊர்ல நாம செய்ற தப்பு என்ன தெரியுமா நம்ம வாண்டுகள்கிட்ட அவிங்க இருக்கும் போது கருப்பய்ங்க தடியன், ஸ்பானிஷ் ஏமாத்துவான் அப்படின்னு குருட்டுக் கம்பளம் விரிச்சு பேசுவோமா ;) நம்ம புள்ளங்க ஸ்கூல்ல வைச்சு எதையாவது சொல்லப் போக, பாவம் நம்ம புள்ளைங்க - சோ, அதில கொஞ்சம் கவனமா இருக்கணும். அது இங்க கொஞ்சம் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வரைக்கும் கூட போயி பெரும் பிரச்சினையாக வாய்ப்பிருக்கிறது.

நன்றி, நசரேய் - வாங்க உரையாடுவோம்!

vasu balaji said...

/அதனை ’உணர்ந்து கொள்ளும்’ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை வெளித் தளத்தில் எப்படி குப்புரடிச்சு எழுந்து தவழும் நிலைக்கு வந்தவுடன் தன் கண்களையே நம்ப முடியாமல் கைகொட்டி ஆர்ப்பரித்து கண்கள் அகல விரிய தங்களது முதல் அனுபவத்தை பெறுவார்களோ அதனைப் போன்றுதான், பின்னாலிலும் தன்னை விட பல வேறு வாழ்க்கை சவால்களை எதிர் நோக்கி முன்னெடுத்துச் செல்லும் பக்குவத்திற்கு வந்திருந்தால் வாயடைத்து சந்தோஷத்தில் நின்று அனுபவிப்பார்கள்/

இங்க ரொம்ப நேரம் கட்டிப் போட்டிச்சி தெ.கா. இந்தக் கட்டத்தில இப்ப நான் இருக்கேன். எவ்வளவு அர்த்தமிருக்கு இந்த வரிகளுக்குள்ள. கொஞ்சம் பக்குவப்பட்ட மனசுன்ன நாமளும் குழந்தையா மாறி சொல்லி கொடுங்கப்பு. கத்துக்குறோம்னு தகப்பன்சாமியா பார்க்கமுடியும். இப்படி நினைக்கிறப்ப இதைத்தான் சிம்பாலிக்கா சொன்னாங்களோ. நாமதான் ஞானபண்டிதா, சுவாமிநாதாவோட நின்னுட்டமோன்னு தோணுது.

vasu balaji said...

/இன்னும் பெரிய பல்கலையில் பயிலும் வாய்ப்பைப் பெற்று, அறிவிலும், அவர்களுக்குக் கிடைத்த கூடுதல் உலக/மனித அனுபவம், வெளிநோக்கு (exposure) தளங்களைக் கொண்டு தன் இருப்பை கூடுதலாக ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும் நிலையை எட்டிய பிறகு எப்படி அந்த மூளை இன்னமும் தனது பெற்றோர்களின் அறிவு சார் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்து விட முடியும்?/

க்ளாஸ்.

கையேடு said...

இப்பதான் கலாச்சாரப் பின்னூட்டமெல்லாம் ஏறக்குறைய படிச்சு முடிக்கிற நிலமையில இருக்கு, அதுக்குள்ள இன்னும் ரெண்டு இடுகையா.. நடத்துங்க.. :)

Anna said...

Great topic!

My random thoughts....

பிள்ளைகளின் சிந்தனைத்திறனை வளர்க்க பெற்றோர்கள் எல்லா முயற்சியும் எடுக்க வேண்டுமென நினைக்கின்றேன். Thinking is one of the most basic human skills and is essential for the advancement of human kind. Children are great at creative thinking which exponentially decrease as we age and conform to the societal norms.

As Sir Ken Robinson (Have you listened to him? he is amazing here
and here) points out mainly refering to education and how current education basically kills the creativity in children,

எமது கலாச்சாரமும் நாம் அநேகமாக பிள்ளை வளர்க்கும் முறையும் அதே விளைவுகளையே தருகின்றன. தொடக்கத்திலிருந்தே, உதாரணத்திற்கு, சரியான பிளையான செயல்களைக் கற்றுக்கொடுக்கும் போதே, இது சரி, இது பிழை ‍ ஏன் என்று கேட்காதே, நான் சொல்வதற்குக் கீழ்ப்படி என்று தானே இன்றும் பலர் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்கிறார்கள். இதையே அவர்களை இருத்தி வைத்து அவர்கள் செய்ததால் வந்த‌ விளைவுகளை விளக்கி அவர்களையே சிந்தித்து எது சரி எது பிழையென யோசிக்கச்சொன்னால் என்ன?

அதோடு எம‌து dicipline tactics ஜ‌ யும் மாற்ற‌வேண்டும். என்ன‌வாவ‌து பிழை விட்டால் ஒரு பேச்சும் இல்லாம‌ல் மிக‌க் க‌டுமையான‌ த‌ண்ட‌னை ஒவ்வொரு முறையும் கொடுத்து வ‌ந்தால் பின் அவ‌ர்க‌ளால் அவ‌ர்க‌ளின் செய்கைக‌ளை ம‌றைக்க‌ முடிந்தால் பிள்ளைக‌ள் எம்மிட‌ம் சொல்ல‌வே மாட்டார்க‌ள். எம‌க்கு அவ‌ர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ளென‌த் தெரியாவிடில் அவ‌ர்க‌ளை எப்ப‌டி guide ப‌ண்ண‌ முடியும்?

அத்தோடு we should expect utmost respect but not OBEDIENCE from them. We should also realise that we are humans and not perfect (and we make mistakes) and value our children's opinions as well.

mmm. Not sure whether these ramblings makes sense or even related, but hey, just some food for thought.

மணிநரேன் said...

பெற்றோர் பிள்ளைகளுடன் பேசுவது பற்றிய ரொம்ப முக்கியமான விசயத்தை கூறியிருக்கீங்க தெகா....
பலரும் பிள்ளைகளின் படிப்பை பற்றி மட்டுமே உரையாடிவிட்டு பிள்ளைகளுடன் அதிகமாக பேசுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல், படிப்பை தாண்டி சராசரி வாழ்வில் நடக்கும் பலவற்றை பற்றி நல்லவிதமாக பேச வேண்டியது அவசியமென்று நினைக்கிறேன்.

அதோடு மட்டுமல்லாமல், பிள்ளைகள் ஏதேனும் கூறினால் அதனை அதிங்கப்பிரசங்கித்தனமாகவே பார்க்கும் பார்வையை பெரியவர்கள் விட்டொழிக்க வேண்டும். நீங்கள் கூறியுள்ளது போல தன் பிள்ளைகளுக்கும் தங்களை விடவும் சில விசயங்கள் அதிகம் தெரிந்திருக்கும் என்ற மனமுதிர்ச்சியை பெற்றவர்கள் பெற வேண்டியது அவசியமாகிறது.

பெற்றோர் எப்போதுமே தங்கள் கருத்தை மட்டுமே திணிக்காமல் எந்த விசயத்தையும் ஒரு நல்ல விவாதமாக தங்கள் பிள்ளைகளிடம் எடுத்துச்சென்றால் அங்கு அவர்களிடத்தில் ஏற்படக்கூடிய இடைவெளி குறைந்து பரந்துபட்ட எண்ணங்களும், இணக்கமும் ஏற்பட வழிவகுக்கும் என்று நம்புகின்றேன்.

Anna said...

A child's outlook on life is definitely shaped by his/her upbringing and surroundings.

"அதனை ’உணர்ந்து கொள்ளும்’ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை வெளித் தளத்தில் எப்படி குப்புரடிச்சு எழுந்து தவழும் நிலைக்கு வந்தவுடன் தன் கண்களையே நம்ப முடியாமல் கைகொட்டி ஆர்ப்பரித்து கண்கள் அகல விரிய தங்களது முதல் அனுபவத்தை பெறுவார்களோ அதனைப் போன்றுதான், பின்னாலிலும் தன்னை விட பல வேறு வாழ்க்கை சவால்களை எதிர் நோக்கி முன்னெடுத்துச் செல்லும் பக்குவத்திற்கு வந்திருந்தால் வாயடைத்து சந்தோஷத்தில் நின்று அனுபவிப்பார்கள். தன் வயதில், அதே தெருவில் ஏதோ ஒரு social stigmaவைக் கொண்டு ஒரு குடும்பமே வெட்டிக் கொல்லப்பட்டதையோ, அல்லது சமூகமாக நெருக்கடி பேச்சுகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதையோ அவர் கண்ணுற்றிருக்கலாம் அது அப்படி நிகழ்ந்தது சரியென்றும் எண்ணியே அவரும் தனது முதுமை எட்டியிருக்கலாம். ஆனால், அந்த பெற்றோர்களைக் காட்டிலும் பல சாத்திய வித்தைகளை பெறும் வண்ணம் வாய்ப்புகளை பெற்று வளர்ந்த இந்த மனிதனும் அதே பாதையை தேர்ந்தெடுக்கிறான் என்றால், எங்கே தவறு நிகழ்ந்திருக்கிறது?"

பிள்ளையின் வளர்ப்பு, சுற்றம், சூழலுடன், உலக அறிவு வளர வளர வாழ்க்கையில் தமது கருத்துக்களை evaluate பண்ணி மாற்ற வேண்டுமெனில் மாற்றி மனத்தால் வளர முடியாத பெற்றோர்களும் முக்கிய காரணிகளென நினைக்கின்றேன்.


உதாரணத்திற்கு என் பெற்றோரையே சொல்லலாம்.

நான் காதலித்தபோது (சமயம் வேறு, சாப்பாட்டு முறை வேறு, படிப்பு வேறு, background வேறு ‍ இப்படி நிறைய வேறுபாடுகள் (மொத்தத்தில் நாட்டையும் மொழியையும் தவிர மிச்சம் எல்லாமே) :))இந்த வேறுபாடுகளை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லி பேச்சு விழுந்ததேயொழிய வாழ்க்கைக்கு உருப்படியாகத்தெவையான எதுவும் நான் தேர்ந்தெடுத்தவரில் இருக்குதா என்னுடன் ஒத்துப்போகுமா, வேறு எதாவது விபரீதமான கெட்டபழக்கம் இருக்குதா, etc, etc, etc ‍அதைப்பற்றியெல்லம் அக்கறைப்படவேயில்லை. பயங்கரப் பிரச்சினை. But all sorted now.:)

The point of that story was,

இதனால் நன்மையடைந்தது என் தங்கைகளே. I seriously think eldest child is a guinea pig for parenting. :) SERIOUSLY. You mostly figure out and encounter everything for the first time with them anyway. So not fair. Never mind.:) I just hope we don't use our son as a guinea pig as we learn to be parents.

என் தங்கை தனது காதலைச் சொன்ன போது/அனுமதி கேட்ட போது, என் அம்மா எல்லாச் சரியான கேள்விகளுமே கேட்டார். She even said that it's you life, not the society's, so you have to figure out whether he is right for you in the long run. And I was like, இந்த அம்மா தான் எனக்கு அப்ப தேவைப்பட்டது.

our amma literally did a 180 degree turn in her way of thinking and treating different ideas. I think my situation and her work environment helped her grow mentally.

இப்ப நாம் அம்மாவுடன் எதைப்பற்றி வேண்டுமென்றாலும் கதைக்கலாம். அவ எமது point of view உடன் ஒத்துப் போகாவிட்டாலும் அவவின் point of view ஜ விளக்குவாவே ஒழிய, she would never disown us/or be mad at us. It's amazing.

ஆனால் எல்லோருக்கும் இவ்வாறு மாற‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வாய்ப்ப‌தில்லை.

Thekkikattan|தெகா said...

Analyst,

Such an elaborate and conducive comment (beautiful, indeed). I will add more to it later... thanks! :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

. வளர்வதுதான் வாழ்க்கை தேய்வதல்லவே!//


அழகா மனங்களை, குடும்பங்களை படம் பிடிச்சு காண்பித்தீர்கள்...

போலியான சமூகப்பார்வைக்கு பயந்து ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் வளர்ச்சியையும் விட்டுக்கொடுக்கணுமா என யோசிக்கணும்தான்....

முக்கியமான விஷயம் உங்க பதிவை உள்வாங்க வைத்தது நீங்கள் கையாண்டிருக்கும் விதம்..

அராஜகமாக இல்லாமல் மென்மையாக..

இதை பலர் பின்பற்றணும்..

கருத்துகள் தான் முக்கியமே தவிர " அடேய் உடேய் நான் ரவுடி தெரியும்ல எனக்கு இதெல்லாம் ம**** " என்ற போக்கல்ல..

Unknown said...

The Analyst said...
--

உங்க நீண்ட விவரமான விளக்கம் படிப்பதற்கு நன்றாக இருக்குங்க. பலர் வீட்டிலே இது மாதிரி மாறிக் கிட்டே தான் இருக்குங்க. நெருங்கிய சொந்தங்களைத் தவிர வெளியில் தெரியாததினால் தான் பலர் ஏசுவது. இன்னும் மாறும்.

Thekkikattan|தெகா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம். தொடர்ந்து குழந்தைகளிடம் பேசுவோம் நிறைய பேசுவோம்...//

பேசுவோம்... பேசிகிட்டே இருப்போம். :)

ஜோதிஜி said...

//போட்டு தாக்குங்க .. நாங்க எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம்//

நாசரேயன் இங்கே உங்களுக்கு ஒரு சங்கம் வைக்கலாம்ன்னு நினைக்கிறேன்.

உலக பொதுச்செயலாளர் நடா

Thekkikattan|தெகா said...

சேது,

//குழந்தைகளுடன் ஒரு lively conversation செய்து வந்தாலே அவர்களுக்கு அது ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும்.//

மேலும் காலப்போக்கில் நம்பகமான ஒரு நண்பர்கள் நிலைக்கு நம்மை அவர்களின் உள்ளத்தில நகர்த்திவிடுவார்கள். அந்த இடம் ரொம்ப முக்கியமான நிலைன்னு நினைக்கிறேன். பயம் அறவே வரக் கூடாது. ஆனா, பாசமான மரியாதை :)

//இருந்தாலும் ஒரு மனுஷனால எவ்வளவு தான் செய்ய முடியும்.//

இந்த ஒரு வரியிலேயே நீங்க எந்த அளவிற்கு திரும்ப உங்க அப்பாவிற்கு வட்டியும் முதலுமா திரும்ப கொடுக்கிறீங்கன்னு தெரியுது...

//ஒரு அப்பா தான் வெட்டுவேன் குத்துவேன்னு சொல்ற நிலையில் தான் சுற்றுப் புற சூழ் நிலை இருந்தால்,//

இருக்கலாம் ஒரு காலம் வரைக்கும். ஏன்னா அவரே அப்போ கூடிதான் வளர்த்துக்கிட்டு கூட இருக்கலாம் ஆனா குழந்தைகள் தான் சொல்வதனை கவனிச்சி மிமிக் பண்ண ஆரம்பிச்சிருச்சின்னாவே எந்தந்த விசயத்திற்கு எப்படி ‘கம்பளம் விரிச்சு’ பேசுறோம்னு கவனிக்க ஆரம்பிச்சிர்றது நல்லது.

நன்றி சேது, பதிவிற்கு கூடுதலாக வலு சேர்த்தமைக்கு.

Thekkikattan|தெகா said...

வாங்க வானம்பாடிகள்,

//இந்தக் கட்டத்தில இப்ப நான் இருக்கேன். எவ்வளவு அர்த்தமிருக்கு இந்த வரிகளுக்குள்ள. கொஞ்சம் பக்குவப்பட்ட மனசுன்ன நாமளும் குழந்தையா மாறி சொல்லி கொடுங்கப்பு. கத்துக்குறோம்னு தகப்பன்சாமியா பார்க்கமுடியும்.//

அருமை. என் அப்பா பல சூழ்நிலைகளில் பேசி கொண்டிருக்கும் பொழுது அப்படியாக தனது நிலையை மாற்றிக் கொள்வார்கள். என்ன சொல்லுவாருன்னா, நான் இங்க இருக்கேன் என் காலம் வேற உனக்குத் தெரியாததா உன்னால முடியும் செய்யீ சரியாத்தான் இருக்குமின்னுருவாரு (அது எவ்வளவு பெரிய பிரச்சினைக் கதை சொன்னாலும்...)

நன்றிங்க :) - very encouraging!

உமர் | Umar said...

இந்தப் பக்கம் வராம எங்கேயோ பராக்கு பாத்துக்கிட்டு இருந்திருக்கேன். இப்ப, வேடிக்கை பாக்குறதுக்காக (எங்க ஊரு பக்கம் வாய் பாக்குறதுன்னு சொல்லுவாங்க), ஒரு துண்டு போட்டு வச்சிக்கிறேன்.

கையேடு said...

ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க..
எழுதிய விதத்திலே கொஞ்சம் வரிகளை உடைச்சு போட்டு எழுதினா உள்வாங்கிக எளிதா இருக்கும்.

அனலிஸ்ட் அவர்கள் பின்னூட்டமும் வாசிக்க ஆர்வமூட்டுவதாய் இருந்தது. (வழக்கம் போல).

பெற்றோர்கள் உரையாடவில்லைன்னு சொல்லும் போது, இரண்டு கேள்வி வருது.

1. உண்மையிலேயே அவர்களுக்கு உரையாடலில் ஆர்வமில்லையா?

தங்களது பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் உரையாட வேண்டும் என்ற ஆர்வமில்லாத பெற்றோர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள்னு நம்புகிறேன்.

2. ஒருவேளை ஆர்வமிருந்தும் அவர்களை உரையாடலில் இருந்து தடுப்பது எதுவாக இருக்கலாம்னு நினைக்கிறீங்க?

Thekkikattan|தெகா said...

கையேடு,

//இப்பதான் கலாச்சாரப் பின்னூட்டமெல்லாம் ஏறக்குறைய படிச்சு முடிக்கிற நிலமையில இருக்கு, அதுக்குள்ள இன்னும் ரெண்டு இடுகையா.. நடத்துங்க.. :)//

முடிச்சிட்டீங்களா... பட்டாம் பூச்சி, மின்மினி பூச்சியெல்லாம் பறந்திருக்குமே உங்களச் சுத்தி :))...

//எழுதிய விதத்திலே கொஞ்சம் வரிகளை உடைச்சு போட்டு எழுதினா உள்வாங்கிக எளிதா இருக்கும்.//

என்னுடைய அடுத்த பின்னூட்டத்தில் உங்களுடைய இரண்டாவது பின்னூட்டதிற்கான கேள்விகளை நாம் சற்று உள்நோக்குவோம். ஆனா, அதுக்கு முன்னாடி என்னோட எழுத்து நடை பத்தி, நானும் முக்கித், திணறித்தான் பார்க்கிறேன் முடியல்ல ;) - உங்களோட சேர்த்து நாலாவது ஆளு, என் வூட்டுக்காரம்மாவை சேர்த்து சொல்லியாச்சு. அதில பாருங்க இந்த மாதிரி பதிவுகள் எழுத ஆரம்பிச்சு எழுதி முடிச்சுட்டு திரும்ப வாசிச்சா எனக்கே புரியறதில்ல ..ஹிஹிஹி... அங்கே படைப்பாளி இறந்துட்டானாமா :D.

முயற்சி பண்ணுறேங்க. அதையும் சீக்கிரமாவே கைவசம் பண்ணிக்குவேன்னு நம்புறேன். பார்க்கலாம்.

கல்வெட்டு said...

தெகா,
கலாச்சார பட்டாச கொளுத்திப் போட்டுட்டு சத்தம் இல்லாமல் அடுத்ததிற்கு வந்தாச்சு. :-‍)))))

*
பொறுமையாக படித்துவிட்டு வருகிறேன். அடுத்தவாரம் நிறையப் பேசுவோம்.


.

Thekkikattan|தெகா said...

கலாச்சார பட்டாச கொளுத்திப் போட்டுட்டு சத்தம் இல்லாமல் அடுத்ததிற்கு வந்தாச்சு. :-‍)))))////

ஹிஹிஹி... கல்வெட்டு அப்படியா நினைக்கிறீங்க, அந்தப் பதிவு கொஞ்சம் அதிகம் அதான் அஜீரணமாகி எல்லாம் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்கன்னு நினைச்சிட்டு அடித்தள OS இங்கிருந்து ஆரம்பிச்சிருக்கு. இப்போ நீங்க புள்ளிய இணைச்சிக்கோங்க :))) ...

தொடர்ந்து வருவோம்ல! வாங்க! வாங்க!! இதெல்லாம் ஓவர்நைட்ல பேசி புரிஞ்சிக்கிற விசயமா ;)

Thekkikattan|தெகா said...

//இதையே அவர்களை இருத்தி வைத்து அவர்கள் செய்ததால் வந்த‌ விளைவுகளை விளக்கி அவர்களையே சிந்தித்து எது சரி எது பிழையென யோசிக்கச்சொன்னால் என்ன?//

ம்ம் இது நல்ல கேள்வி. அங்கே என்ன நடக்கிறது ‘உரையாடலுக்கான’ கதவை திறந்து விடுகிறோம். பல வாய்ப்புகள் இருக்கிதுங்க அப்படியான சூழ்நிலைகளை சாதகமாக திருப்பி பேசி, பழகிக்கொள்ள. சில பேரு காசு கொடுத்தாத்தான் வாயே திருப்பேன்னு இருக்கவங்க, அடிப்படையிலேயே பிரச்சினையாத்தானே இருக்கும்.

//என்ன‌வாவ‌து பிழை விட்டால் ஒரு பேச்சும் இல்லாம‌ல் மிக‌க் க‌டுமையான‌ த‌ண்ட‌னை //

கண்டிச்சு வளர்க்கிறேன்னு செய்கின்ற ஒரு அணுகுமுறை. முதுக்கு பின்னாக செய்யக் கூடிய நிலைக்கு நாமே அடிக்கல் நட்டு, பிள்ளையார் சுழி செய்து கொடுத்து விடுகிறோம். மாறாக, அதன் பொருட்டு சாதகமான நேரம் இருக்கும் போது பேச விட்டு கேக்கலாம் ;) - இப்போ இங்க உங்களை எல்லாம் நான் பேசிக் கொல்லுறமாதிரி பேசியே கொன்னுடுவேன், என் பசங்ககிட்ட; அட அவங்களையும் பேச விட்டுட்டுத்தேய்ன் :D

//எம‌க்கு அவ‌ர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ளென‌த் தெரியாவிடில் அவ‌ர்க‌ளை எப்ப‌டி guide ப‌ண்ண‌ முடியும்?//

அதானே? எப்படி... எதிர் தரப்பு வாதத்தையும் கேக்கணுமில்ல... :)

///அ) we should expect utmost respect but not OBEDIENCE from them.

ஆ) We should also realise that we are humans and not perfect (and we make mistakes) and value our children's opinions as well.//

ரொம்ப முக்கியமான விசயம் ரெண்டும். நமக்கு என்ன பயம் நாளக்கி நம்ம புள்ளங்க நம்ம மதிக்காம போயிடும், கண்டிச்சு வளர்த்த பயமிருக்கும் - அங்கே பெரிய சறுக்கல் உரையாடல் மூலமாக நண்பர்கள் நிலையை எட்டாமல் அவர்களின் தயக்கத்தை நாம களைய முடியாது... பயமிருந்தால் சிந்தனையே போயிடும் - ஒரு பேப்பர் ப்ரசெண்ட் பண்ணும் பொழுது எப்படி உதறல் எடுக்குமே அப்படியாக...

//Not sure whether these ramblings makes sense or even related, but hey, just some food for thought.//

no no cool... very useful, Analyst. We will talk more through your second comment... :)

மங்கை said...

ellaarthukullum idaiveli thaaan.. peasinaaal manamum ennangalum thelivaaahum... aanaal uraiaadal kku thaanea inga panjam..mmmm

nandri...engalai m yosikka vaikkarathukku

ஜெயந்தி said...

பெற்றோர்களே பிள்ளைகளின் முதல் ஆசான்னு சொல்வாங்க. அவங்க ஒரு வழிகாட்டியா இருக்கனும். அஸ்திவாரம் போடுவது அவர்கள்தான்.

இப்போ வீட்டைத்தாண்டி நிறைய விஷயங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள கிடைக்கிறது. அதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. அதையெல்லாம் தாண்டித்தான் அவர்கள் வரவேண்டியிருக்கிறது.

கலகலப்ரியா said...

||மங்கை said... ||

உரையாடறதே பாவம்கிறாய்ங்க...

(மீதிப் பின்னூட்ஸ் அப்பால நோக்குஃபை..)

Thekkikattan|தெகா said...

வாங்க மணிநரேன்,

//பலரும் பிள்ளைகளின் படிப்பை பற்றி மட்டுமே உரையாடிவிட்டு பிள்ளைகளுடன் அதிகமாக பேசுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல், படிப்பை தாண்டி சராசரி வாழ்வில் நடக்கும் பலவற்றை பற்றி நல்லவிதமாக பேச வேண்டியது அவசியமென்று நினைக்கிறேன்.//

மிக மிக அவசியம். அதுதான் பின்னாலில் பொதுத் தொடர்பில் பண்புடையவனாக ஆக்குகிறது. மத்ததெல்லாம் பிறகுதான். அந்தக் கலைதான் முதலில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

உங்கள் மறுமொழியை வரிக்கு வரி வழிமொழிகிறேன். சில தேவையில்லாத திணிப்புகளை குழந்தைகள் இறக்கி வைக்க ரொம்பவே பட்டு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நன்றி மணிநரேன். தொடருங்கள்... பேசுவோம்.

Thekkikattan|தெகா said...

அழகா மனங்களை, குடும்பங்களை படம் பிடிச்சு காண்பித்தீர்கள்...

//போலியான சமூகப்பார்வைக்கு பயந்து ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் வளர்ச்சியையும் விட்டுக்கொடுக்கணுமா என யோசிக்கணும்தான்..//

ரொம்ப உண்மை; யோசிக்கணும், யோசிக்கணும். அங்கே தனக்குத்தானே உள்முகமாக வளரும் வளர்ச்சியை வழங்கிக் கொள்வதிலிருந்து மறுத்தே வாழ்ந்து முடித்திடுவோம்னு நினைக்கிறேன்.

புரிதலுக்கு நன்றிங்க!

Thekkikattan|தெகா said...

அனலிஸ்ட்,

தங்களின் சொந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த ’கினியா பன்றி’ ரொம்ப உண்மை. முதல் பிள்ளையை வைத்துதான் எல்லா இடங்களிலுமே பெற்றோர்களே அது சார்ந்த கல்வியறிவு பெறுவார்கள் போல.

உங்களின் கதையைப் போலவே, எனக்கும் நிகழ்ந்ததுண்டு இங்கே பாருங்க. :).

இதனைப் தொடர்ந்து பின்னாலில் ஊர்க்காடுகளில் யாராவது பிடித்தவர்களுடன் காதல் மணம் புரிய நேர்ந்தால் ஓரளவிற்கு பக்குவத்துடன் எடுத்துக் கொள்ளக் கூடிய பண்பு எங்கள் உடனடி ரீச்சில் உள்ள மக்களுக்கு சென்றடைந்திருக்கு.

கூட்டமாக கூடி ‘சமூக கொலை’ செய்வதிலிருந்து கொஞ்சமாக விலகி இருக்கிறார்கள். பெரிய அளவு முன்னேற்றம் என்றுதான் கூற வேண்டும்.

//இப்ப நாம் அம்மாவுடன் எதைப்பற்றி வேண்டுமென்றாலும் கதைக்கலாம். அவ எமது point of view உடன் ஒத்துப் போகாவிட்டாலும் அவவின் point of view ஜ விளக்குவாவே ஒழிய, she would never disown us/or be mad at us. It's amazing.//

என்ன நடந்திருக்கிறது என்று புரிகிறது. அம்மாவின் கற்பிதங்கள் அதன் பொருட்டு நொருங்கி கீழே விழுந்து விட்டது. வாழ்க்கையை ஒரு ஓட்டமாக எடுத்துக் கொள்ள தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார்கள்... அப்படித்தானே? :)

//ஆனால் எல்லோருக்கும் இவ்வாறு மாற‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வாய்ப்ப‌தில்லை//

1000தில் ஒன்றிரண்டு அது போன்று நிகழ்ந்து விட்டாலே பெரிதுதான்.

Thekkikattan|தெகா said...

ஜோதிஜி said...
//போட்டு தாக்குங்க .. நாங்க எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம்//

நாசரேயன் இங்கே உங்களுக்கு ஒரு சங்கம் வைக்கலாம்ன்னு நினைக்கிறேன்.

உலக பொதுச்செயலாளர் நடா//

ஜி, பொறுப்பை நசரேஸ் வாங்கிட்டாரா? பதிவை பொருத்து ஒண்ணுமே சொல்லலையே...

நிறைய விசயங்கள் நீங்களும் சேர்த்து பின்னூட்டத்தின் மூலமாக இணைக்க இருந்திருக்கணுமே...

suneel krishnan said...

மிகவும் விரிவாக எழுதப்பட்டுள்ளது ,பின்னூடங்களையும் ரசித்தேன் ,
நம் குழந்தைகள் நம்மை விட ஒரு படி புத்திசாலிகள் ,நமது ஒவ்வொரு சிறு சிறு நடத்தையும் அவர்களின் ஆழ மனதில் பதிகிறது .
மனைவியை அடிக்கும் தந்தை ,அதே சமயம் மகனுடன் பாசமாக இருந்தால் பின்னாளில் மகனும் தனது மனைவியை அடிக்க தயங்க மாட்டான் ,தனது ஹீரோ செய்ததையே அவனும் தொடருவான் .
நமது குணாதிசயங்கள் கிட்ட தட்ட நமது பதினான்கு வயதிற்கு முன்பே முடிவாகி விடுகிறது என்று உளவியல் கூறுகிறது ,அதன் பின் நாம் நம்மை மாற்ற மிகுந்த சிரம பட வேண்டும் ,நாம் நம் அடுத்த தலைமுறைக்கு எதை அளிக்கிறோம் என்பதில் அதீத கவனம் தேவை .

Thekkikattan|தெகா said...

ஒரு துண்டு போட்டு வச்சிக்கிறேன்.//

கும்மி, பராக்கு ரொம்ப நேரமா பார்த்திட்டே இருந்திட்டியபோலவே! போட்ட துண்டு வேற போட்ட இடத்திலேயே கெடக்கு... சட்டுபுட்டுன்னு வந்து துண்ட கலெக்ட் செஞ்சுக்கோங்க இல்லன்னா... :) - நன்றி, கும்மி!

குட்டிப்பையா|Kutipaiya said...

இதன் அவசியம் அத்தகைய பெற்றோர்களை கொண்டோரை விட, அப்படி இல்லாத பெற்றோர்களை கொண்டவர்களுக்கு மிகவும் புரியும்!!!

Thekkikattan|தெகா said...

கையேடு,

நான் உங்களுக்கான போன பின்னூட்டத்தில் கூறியதைப் போன்று சற்றே உடைத்து நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விடையாக என்ன இருக்கலாம் என்று ஆராய்வோமா? நான் வைப்பது தவறானதாக இருந்தால் உங்களது மாற்று சிந்தனை முன் வையுங்கள். தெரிந்து கொள்வோம்.

//பெற்றோர்கள் உரையாடவில்லைன்னு சொல்லும் போது, இரண்டு கேள்வி வருது.

1. உண்மையிலேயே அவர்களுக்கு உரையாடலில் ஆர்வமில்லையா?

தங்களது பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் உரையாட வேண்டும் என்ற ஆர்வமில்லாத பெற்றோர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள்னு நம்புகிறேன்.//

கண்டிப்பாக அப்படி எந்த ஒரு பெற்றோர்களும் நினைப்பதேயில்லைன்னு கருதுகிறேன். ஆனால், அந்த உரையாடலை எப்படியாக லாவகப் படுத்துவது என்பதில் வேண்டுமானால் அணுகுமுறைச் சிக்கல் இருக்கலாம்... அதற்கென முயற்சியையோ அல்லது உழைப்பையோ போடுவதில்லை. அல்லது அந்த விழிப்பே இல்லாமல் ஓட்டி முடித்துவிடுவதாக இருக்கலாம்.

உரையாடலே ஒரு கலை. கிடைச்ச விசயத்தை எப்படியாக சூழ்நிலை அறிந்து நகர்த்துவதுன்னு. அதுக்கு கொஞ்சம் விசய ஞானமும் ;) கூடுதல் பயிற்சியிம் தேவை போல - ஆனா, எல்லாம் வளர்த்திக்கிறதுதானே!

//2. ஒருவேளை ஆர்வமிருந்தும் அவர்களை உரையாடலில் இருந்து தடுப்பது எதுவாக இருக்கலாம்னு நினைக்கிறீங்க?//

ரொம்ப முக்கியமான கேள்வியது, கையேடு. சமூக ரீதியாக வளர்ப்பு முறை சார்ந்து நாம் கட்டமைத்துக் கொண்ட ‘கற்பிதங்கள்.’ பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான வரை எல்லைகள் - கண்டிப்பு, பாசம் காட்டுதல், வழி சுட்டுதல், சமூகப் பார்வை போன்றதிலும், உடற் கூறுகள் சார்ந்து எது வரையிலும் பேச விடலாம் விடக் கூடாது என்ற குழப்ப நிலைகள் இத்தியாதி., காரணமாக அமையலாம். மேலே சில பின்னூட்டங்களில் அதனைப் பொறுத்து மேலும் கொஞ்சம் பேசியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

இது எல்லாவற்றிற்கும் என்னிடம் உள்ள ஒரே தீர்வு பயமற்ற, நண்பர்கள் நிலையை உள்ளரே நிலவ விடுவதுதான் ஏனைய அனைத்தும் அது இயல்பிலேயே ஓட ஆரம்பித்துவிடும். என்ன சொல்லுறீங்க.

குட்டிப்பையா|Kutipaiya said...

மனசு விட்டு பேசுறது மட்டுமில்லை, பிள்ளைங்களோடது அடுத்த தலைமுறை, அவங்க வளர்ற உலகம், அவங்க கடந்துவந்த உலகத்தைவிட வித்தியாசமானது,நிறைய வளர்ச்சிகளும் அதற்கேற்ற நிறைகளும் குறைகளும் கொண்டது என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லையெனில், மனந்திறந்த பரிமாற்றங்கள் நிகழாமல் போகலாம். எப்படியும் அவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை என்ற ஒரு pre-assumption பிள்ளைகளுக்கு வராமல் பார்த்துக் கொள்வது இந்த பரிமாற்றங்களுக்கு மிக முக்கியம் என நினைக்கிறேன்.

மங்கை said...

//எப்படியும் அவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை என்ற ஒரு pre-assumption பிள்ளைகளுக்கு வராமல் பார்த்துக் கொள்வது இந்த பரிமாற்றங்களுக்கு மிக முக்கியம் என நினைக்கிறேன்.///

ஆயிரத்தில் ஒரு வார்த்தை.. இது தான் நம்ம காலத்திலும் நடந்தது...இப்பவும் நடந்துட்டு இருக்கு...

மங்கை said...

//இப்ப நாம் அம்மாவுடன் எதைப்பற்றி வேண்டுமென்றாலும் கதைக்கலாம். அவ எமது point of view உடன் ஒத்துப் போகாவிட்டாலும் அவவின் point of view ஜ விளக்குவாவே ஒழிய, she would never disown us/or be mad at us. It's amazing.//

இங்கே தான் குழந்தைகளுக்கு நம்பிக்கை விதையை விதைக்கிறோம்.. எந்த ஒரு உறவிலும் இந்த புரிதல்.. சௌகரியம்.. ஸ்பேஸ்... நம்பிக்கை.. இருந்தால் வாழ்க்கை தெளிந்த நீரோடை தான்...ம்ம்ம்

Thekkikattan|தெகா said...

//ellaarthukullum idaiveli thaaan.. peasinaaal manamum ennangalum thelivaaahum... aanaal uraiaadal kku thaanea inga panjam..mmmm //

ஆமாம், மங்கை. பல விதமான கற்பிதங்களின் அடிப்படையிலேயே உரையாடலுக்கான சாத்தியங்கள் விலகியே சென்றுவிடுகிறது. மனது இருட்டரைக்குள்ளரயே தஞ்சம் கொண்டு விடுகிறது - வாழ்வு முழுமைக்குமே!

மற்ற பின்னூட்டங்களுக்கும் நன்றி!

//nandri...engalai m yosikka vaikkarathukku//

You are welocme, Mangai!

Thekkikattan|தெகா said...

வாங்க ஜெயந்தி,

//பெற்றோர்களே பிள்ளைகளின் முதல் ஆசான்னு சொல்வாங்க. அவங்க ஒரு வழிகாட்டியா இருக்கனும். அஸ்திவாரம் போடுவது அவர்கள்தான்.//

ஆமாம்! மிகமிக உண்மை.

//இப்போ வீட்டைத்தாண்டி நிறைய விஷயங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள கிடைக்கிறது. அதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. அதையெல்லாம் தாண்டித்தான் அவர்கள் வரவேண்டியிருக்கிறது.//

மீண்டுமொரு உண்மையான கூற்று. இதன் அடிப்படையிலேயே நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் தோரும், அனைத்து விதமான விடயங்களிலும் குழந்தைகளுடன் உரையாடி விட்டு, நல்லது, கெட்டதுகள் அவர்களின் வழியில் எடரும் பொழுது முடிவு செய்து கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பாகி விடுகிறது. ஏனெனில், அதனை நினைத்தே வாழ்க்கை தோரும் நாம் வலி/பயங்களினூடே வாழ்வதில் என்ன பொருள் இருந்து விட முடியும்?

CorTexT (Old) said...

நல்ல பதிவு தெகா! சிறு வயதிலிருந்து நாம் எப்படி பார்க்க, கேட்க, பேச, பழக, நடக்க, அறிய, பகுத்தறிய கற்கின்றோம் (neuroscience, cognetive science), ஒழுக்க நெறி முறைகள் ஏன், எங்கிருந்து வந்தது, எப்படி வளர்ச்சி பெற்றது (பரிணாம வளர்ச்சி - ஜீன்கள் மற்றும் மெம்கள்) என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். இது நம்மையே நாம் சீர்தூக்கி பார்க்கவும், குழந்தைகளை எப்படி சிறந்தபடி வளர்க்கலாம் என்பதற்கும் சில வழிகளை தரலாம். எப்படியாகிலும் குழந்தை வளர்ப்பு ஒருவகை கலை தான்!

http://icortext.blogspot.com/2009/11/blog-post.html (இது குழந்தை வளர்ப்பை பற்றிய பதிவு அல்ல; ஆனால் சற்றே தொடர்புடைய...)

பிள்ளைகளுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில், கேள்வி கேட்கும் பட்சத்தில், மது, புகை, போதை, பால் முதலிய பல விசயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது உகந்தது என்பது எனது அபிப்பிராயம்.

Thekkikattan|தெகா said...

CorText,

அந்த கட்டுரையை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி. இந்தப் பதிவிற்கு அப்படியே அறிவியல் ரீதியாக ஒரு மூளையின் செயற்பாடும் அது எப்படியாக சேகரிக்கப்பட்ட செய்திகளை சேமித்து, கடத்திச் சேர்க்கிறதெனவும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

இந்தப் பகுதி என்னுடைய கட்டுரைக்கு மிக்க நெருக்கமாக இருக்கிறது...

...நாம் எப்படி கற்று கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன: நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல...

//பிள்ளைகளுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில், கேள்வி கேட்கும் பட்சத்தில், மது, புகை, போதை, பால் முதலிய பல விசயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது உகந்தது என்பது எனது அபிப்பிராயம்.//

கட்டாயமாக. எவ்வப்பொழுது கேள்விகள் வருகிறதோ தவறாமல் பேசிட வேண்டியதுதான் என்பதே எனது நிலையும்.

உங்கள் அனைத்து பதிவுகளையும் தோண்டி பார்த்துவிடுகிறேன். அஞ்சறைப் பெட்டியில் நிறைய சரக்கு வைத்திருக்கிறீர்கள் என்று படித்த பதிவுகள் கூறுகிறது. :-)

ரொம்ப நன்றி, CorText.

கையேடு said...

//சமூக ரீதியாக வளர்ப்பு முறை சார்ந்து நாம் கட்டமைத்துக் கொண்ட ‘கற்பிதங்கள்.’ பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான வரை எல்லைகள் - கண்டிப்பு, பாசம் காட்டுதல், வழி சுட்டுதல், சமூகப் பார்வை போன்றதிலும், உடற் கூறுகள் சார்ந்து எது வரையிலும் பேச விடலாம் விடக் கூடாது என்ற குழப்ப நிலைகள் இத்தியாதி., காரணமாக அமையலாம்.//

இதையேதான் நானும் ஊகித்திருந்தேன்.. பிள்ளைகள் சமூகத்தினைச் சார்ந்தவர்கள், வீதியும்,சமூகமும்தான் அவர்களை வளர்த்தெடுக்கிறது என்பதை பெற்றோர்கள் சிலர் உணருவதில்லை.

ஒரு மாற்றுக் கருத்தை தங்களது பிள்ளைகள் உள்வாங்கியிருந்தால், தங்களது வளர்ப்பின் மீதே சந்தேகித்து தங்களையே குற்றவாளிகளாகக் கருதிக்கொள்ளும் பெற்றோரைப் பார்த்தால் இன்னும் வருத்தமாக இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

வாங்க Dr. சுனில்,

தங்களின் கருத்து செறிந்த பின்னூட்டங்கள் இங்கு யாவருக்கும் பயனளிக்கிறது என்பதனை மறுக்க முடியாது, டாக்டர். தப்பித்தவறி படிப்பவர்களின் யாருக்கேனும் ஒருவருக்கு கூட எங்கோ எப்பொழுதோ உதவினாலும் கூட உங்களின் நேரம் இங்கே போட்டதிற்கு பலனாக கிடைத்து விட்டது :-).

தான் கடைபிடிக்கும் தினசரி வாழ்வியல் சூத்திரங்களைக் கூட நம்மில் பலர் பகிர்ந்து கொள்ள தயங்கி சுயநலமாக இருந்து போகும் மனிதர்களையும் உள்ளடக்கியதுதான் நமது சமூகம் என்பது உங்களுக்கு நான் சொல்லி புரிய வேண்டியதில்லை. :))

//நமது ஒவ்வொரு சிறு சிறு நடத்தையும் அவர்களின் ஆழ மனதில் பதிகிறது .//

ஆம். இதனை மிக்க விரிவாக அறிவியல் பின்னணியில் நண்பர் CoText, விளக்கியிருக்கிறார். அங்கும் சென்று வாருங்கள்.

//அதன் பின் நாம் நம்மை மாற்ற மிகுந்த சிரம பட வேண்டும் ,நாம் நம் அடுத்த தலைமுறைக்கு எதை அளிக்கிறோம் என்பதில் அதீத கவனம் தேவை .//

வரிக்கு வரி மறுமொழிகிறேன். இதனைத்தான் மற்றொரு பின்னூட்டத்தில் கலகலப்ரியாவின் பதிவினுள் கூறினேன் என்று ஞாபகம், நீங்கள் கூறியபடியே குழந்தைகளின் கிரகிப்பு சார்ந்து விசயமிருக்கும் பொழுது, மேலோட்டமாக ‘புனுகு’ பூசுவது என்பது கண்கெட்ட பின்னே சூரிய வணக்கத்திற்கு இணையானது என்று...

நன்றி, சுனில்!

Thekkikattan|தெகா said...

//kutipaiya said...

இதன் அவசியம் அத்தகைய பெற்றோர்களை கொண்டோரை விட, அப்படி இல்லாத பெற்றோர்களை கொண்டவர்களுக்கு மிகவும் புரியும்!//

ம்ம்ம் எத்தனை உண்மை...

//எப்படியும் அவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை என்ற ஒரு pre-assumption பிள்ளைகளுக்கு வராமல் பார்த்துக் கொள்வது இந்த பரிமாற்றங்களுக்கு மிக முக்கியம் என நினைக்கிறேன்.//

இதெல்லாம் கால காலத்தோட வந்து சொன்னதான் என்னவாம். இதனில் எத்தனை பொருள் பொதிந்து இருக்கிறது. கற்றுக்கொள்கிறோம், நாம் அனைவருமே!

Chitra said...

இப்போதான் பதிவின் கருவிற்கு வருகிறேன். இங்கேதான் குழந்தை பருவத்திலிருந்து பதின்மம் வரைக்குமான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் எந்தளவிற்கு அமைகிறதோ அதனை ஒட்டியே எதிர்கால சமூக முகம் காட்டல் ஒரு தனி மனிதனுக்கு இருக்கப் போகிறது என்பேன்.


.....very interesting.... நன்கு அலசி, வெளிப்படையாக சொல்லி இருக்கும் விதம் நல்லா இருக்குதுங்க.

http://thavaru.blogspot.com/ said...

நிறையவே யோசிக்க வைக்கிறது உங்க கட்டுரை. வாழ்த்துகள்

குட்டிப்பையா|Kutipaiya said...

communication gap'oda effects !!came thro this Q&A in slate.com - relevant to post it here!

//Dear Prudence,
My problem is my 22-year-old brother, who's been coddled into uselessness by our mother. First some background on me: I have a slight limp due to the after-effects of a childhood illness. My mother was very protective of me, keeping me out of gym classes and certain field trips because she (mistakenly) thought the activities would be bad for me or that I would be embarrassed. By the time I went away to college, I realized how much I had missed because of her well-intentioned hovering. I managed to break away and live on my own terms. My brother, meanwhile, has his own issues. He has a small speech impediment and is socially awkward. My mom has indulged—even encouraged—his tendency to avoid the outside world. He's been home-schooled since middle school and has never had a job. He attends community college, is nowhere near a degree, and basically hangs out at the house and fools around on the computer. Except for this blind spot, my mom is a wonderful person, and I love her more than anything. As for my father, I think he's frustrated and wishes he'd done something about my brother sooner but now thinks it's a lost cause. It's painful to see my brother missing out on life. Is there any way I can intervene?

—My Brother's Keeper?

Dear Keeper,
Your mother doesn't just have a blind spot. As far as mothering is concerned, she has two inoperable cataracts. She may have wonderful qualities, but she sounds like a dismal parent. One of her central obligations was to prepare her children to be independent, productive people—instead, her approach was to emotionally cripple them. In a misguided attempt to protect you two from a possibly cruel world, and elevate herself as your protector, she sought to weaken you both. Thank goodness you had a core of resilience and made it out. But she became your brother's whole world. He had no classmates, no teachers, no therapists, no friends. The result is a young man who's been trained to be a parasite. So encompassing is your mother's need to drain her children emotionally that your father gave up and let her ruin his son. A lot of remediation needs to be done here, but first your brother must acknowledge that he wants more out of life and that it's going to require hard work. I'm not sure your mother is capable of admitting the gravity of the problem and her role in creating it. You should try to enlist your father to re-engage in your brother's life. Tell him that it's not fair to write off a 22-year-old. Your father needs to help formulate a plan to get your brother professional help with his social skills and independence—which might mean standing up to his wife. You should treat your brother as an adult. Take him out to dinner, talk to him out about what he would like to do with his life, and tell him you'd like to help him get there. Let's hope it's not too late to free him from being a hostage to your mother's psyche.

//

Thekkikattan|தெகா said...

.....very interesting.... நன்கு அலசி, வெளிப்படையாக சொல்லி இருக்கும் விதம் நல்லா இருக்குதுங்க.//

மிக்க நன்றி, சித்ரா!

Thekkikattan|தெகா said...

தவறு said...

நிறையவே யோசிக்க வைக்கிறது உங்க கட்டுரை. வாழ்த்துகள்.//

நன்றிங்க! தொடர்ந்து சேர்ந்தே யோசிப்போம் :-)

ஜோதிஜி said...

குழந்தை பருவத்திலிருந்து பதின்மம் வரைக்குமான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் எந்தளவிற்கு அமைகிறதோ அதனை ஒட்டியே எதிர்கால சமூக முகம் காட்டல் ஒரு தனி மனிதனுக்கு இருக்கப் போகிறது என்பேன்.

உங்கள் முகவரி தேவை. துரித அஞ்சலில் என் முத்தத்தை அனுப்பி வைக்க விரும்புகின்றேன்.

ஜோதிஜி said...

மூக்கணாங்கயிறு போட்டு தன் சுவாசத்தை கட்டுப்படுத்த தெரியாதவர்களுக்கு தெரிந்து கொள்ளும் வரையிலும் இது போன்ற பூட்டுக்கள் தேவைப்படுகிறதே என்ன செய்வது...

எழுத்துச் சித்தர் தெகா ? இதுக்கு என்ன அர்த்தம் நண்பா?

ஜோதிஜி said...

நம்மூர் பத்திரிக்கைகள் எதுவும் படிக்கும் ஒரு விசயம் பொருட்டு ஞானம் எட்ட வேண்டி கொடுப்பதாக இல்லைதானே

பத்து நாள் செய்திதாளை ஒன்றாக படிக்கும் சூழ்நிலை ஏற்படும் போது கொலைவெறி வருவதை தடுக்க முடியவில்லை. பொதுவாக கத்தரித்து முக்கிய செய்திகளை வைத்துக்கொள்வேன். ஆனால் இப்போது அவ்வாறு பாக்யத்தை தர எந்த செய்தி நிறுவனங்களும் கஷ்டப்பட விரும்பவில்லை என்பதை சமீப காலமாக புரிந்து கொண்டேன்

ஜோதிஜி said...

நாமதான் ஞானபண்டிதா, சுவாமிநாதாவோட நின்னுட்டமோன்னு தோணுது.

இல்லைங்க...........

குழந்தைகளுடன் பேசும் போது நாம் எத்தனை தற்குறி என்றே புரிகின்றது.

Thekkikattan|தெகா said...

அதானே என்னடா ஜோதிஜி இந்தப் பதிவிற்கு இன்னும் கூடுதலாக நிறைய விசயங்களை சேர்க்க வேண்டி இருக்குமே இப்படி ஃபார்மல் மறுமொழியோட பொயிட்டாரேன்னு நினைச்சேன். மறுக்க வந்திட்டியள் அதுவும் என்னன்னவோ சொல்லிட்டு :)

//உங்கள் முகவரி தேவை. துரித அஞ்சலில் என் முத்தத்தை அனுப்பி வைக்க விரும்புகின்றேன்.//

ப்ரோஃபைல் படத்தை வேற ‘பாரதி’யா வைச்சிட்டு இப்படி முத்தம் அது இதுன்னு சொல்லி பீதியக் கிளப்புறீங்களே - spontaneity, huh! அதிரடி போங்கோ அப்படி என்ன சொல்லிட்டேன்னு ;-) ...

[[...மூக்கணாங்கயிறு போட்டு தன் சுவாசத்தை கட்டுப்படுத்த தெரியாதவர்களுக்கு தெரிந்து கொள்ளும் வரையிலும் இது போன்ற பூட்டுக்கள் தேவைப்படுகிறதே என்ன செய்வது... ]]

எழுத்துச் சித்தர் தெகா ? இதுக்கு என்ன அர்த்தம் நண்பா?//

ஹ்ம்ம்ம்... கோபமா இருக்கும் போது நம்மோட மூச்சின் வீச்சத்தை கவனிச்சிப் பார்த்திருக்கீங்களா... அந்த மூச்சுதான் அப்படியே வார்த்தைகளா மாறி வருது. அததான் நான் சிம்பாலிக்கா சுவாசத்தைக் கவனி, அதற்கு மூக்கணாங்கயிறு போடுங்கிறேன். சித்தரா - ஹிஹிஹி - ரொம்ப கோவமா இருக்கிய போல ;)

வர, வர உரைநடைக்கும் “தெளிவுரை” எழுதுறமாதிரியாகிப்போச்! அவ்வ்வ்... :)

பழமைபேசி said...

இடுகையும், பின்னூட்டங்களும் சிந்தனையைக் கிளறின! வாழ்த்துகளும் நன்றியும்!!

ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு பரிமானம் தெரிய வரும்...

நிலாமகள் said...

கூகுலாண்டவருக்கு நன்றி! வலைப்பூவுலகில் ஒரு நறுமண மலர் மனம் நுகரச் செய்தமைக்கு! அவசியமான ஒன்றை அலசிய விதம் அருமை... பதிவும், மறுமொழிகளும் பலப்பல நிதரிசனங்களை விளக்கி நிற்கின்றன... நன்றி சகோதரா...!

Related Posts with Thumbnails