Monday, January 03, 2011

செத்தே விழும் பறவைகள்: Falling Birds in Arkansas!

இன்னிக்கு ஒரு செய்தி சி. என். என்ல பார்த்தேன். ரொம்ப வருத்தத்திற்குறியது. வருடப்பிறப்பின் வார இறுதியில் கிட்டத்தட்ட 5000 பறவைகளுக்கும் மேல் பறந்துகிட்டு இருக்கும் போதே பொத், பொத்தென்று செத்து ஒரு சதுர மைல் அளவில் உள்ள ஏரியா முழுதும் விழுந்ததாக அந்த செய்தி தெரிவித்தது. இது நடந்தது அமெரிக்காவில் உள்ள அர்க்கான்சஸ் என்ற மகாணத்தில். அதே நாளில் சில ஆயிரம் மீன்களும் செத்து மிதந்து கரை ஒதுங்கி இருக்கு.

காரணம் இதுதான் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லையாம். எல்லாம் கருதுகோலின் படி அவங்க அவங்க தியரியை அந்த பறவை, மீன்களின் இந்த மர்மமான துர் மரணத்தையொட்டி சொல்லி வைக்கிறாங்க. ஒரு விலங்குகள் மருத்துவர் பல பறவைகளின் நெஞ்சைக் கீறி மேஜை முழுதும் பரப்பி வைச்சிக்கிட்டு சொல்லுறார் ஏதோ உள்ளரயே இரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்திருக்கு அப்படின்னு. இது தெற்று வியாதியால் ஏற்பட்ட மாதிரியும் தெரியலன்னு சொல்லுறார். இன்னொன்னும் சொன்னார், அது வந்து மோதின அதிர்வில கூட அப்படி நடந்திருக்கலாம்னு, அப்போ ஏன் கீழே வந்து விழுந்துச்சின்னு சொல்லணும்ல; சொல்லலை.

பல தியரிகளில் ஒன்றாக சொல்றாங்க மின்னல் தாக்கி இருக்கலாம், அல்லது ஆலங்கட்டி மழை (hail storm) தாக்கி இறந்திருக்கலாம், அல்லது புது வருடப் பிறப்பினையொட்டி வான வேடிக்கை கேளிக்கையினை தொடர்ந்து இப்படி ஆகியிருக்கலாம், அல்லது விஷமேறிய உணவை உண்டிருக்கலாம் என்று பல கோணங்கள் முன்வைக்கப்படுது.

ஆனால் இந்த மின்னல், பனி மழை தியரிகளை மட்டும் எடுத்து பார்த்தோம்னா, என்னய்யா சொல்லுறாய்ங்க அந்த ஏரியாவில எப்படி வெதர் கண்டிஷன் அன்னிக்கு இருந்திச்சுன்னு பார்த்திட்டா தெரிஞ்சுட்டு போகுது. இந்தப் பறவைகள் அப்படி உயரத்தில பறக்கும் பறவைகளாவும் தெரியலேயே!

அடுத்து வான வேடிக்கை அதிர்வினால் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதனையும் நம்பும்படியாகவும் இல்லை. விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்பதனை ஒரு சாதாரண ஆட்டோப்சியிலேயே கண்டுபிடிச்சிருக்கலாமே! அப்படியே இந்த ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கினத்திற்கும் கருதுகோல்களின் அடிப்படையிலேயே பதில் சொல்லிட்டு இருக்காங்க. இந்த மர்மச் சாவுகளுக்கு உண்மையான காரணம் என்னவா இருக்குமின்னு முறையான துப்புத்துலக்குவதின் மூலமா கண்டுபிடிக்க முடியாதா? என்ன கதை சொல்லிட்டு இருக்காங்க... புதிசா ஏதாவது கண்டுபிடிச்சு பரிசோதனை செஞ்சிப் பார்த்ததின் பக்க விளைவா இப்படி ஆயிருக்கலாமோன்னு தோணுது.

இன்னும் முறையான செய்திகள் இந்த பறவை, மீன்களின் மர்மச் சாவினையொட்டி வெளி வந்ததாக தெரியவில்லை. யாருக்காவது தெரிஞ்சா இங்கே பகிர்ந்துக்கோங்க இல்லன்னா எனக்கு தெரிய வந்தா மேலும் இங்கயே தெரியப்படுத்துறேன்.

இந்த விடியோவையும் பார்த்து வைங்க...

48 comments:

Thekkikattan|தெகா said...

சில மக்கள் ஒரு படி மேலே போயி 2012 வந்திட்டே இருக்கில்ல, அபோகாலிப்ஸ் ஆரம்பிச்சிருச்சுன்னு ஆரம்பிச்சிட்டாய்ங்க

ஜோதிஜி said...

இந்தியாவில் மேனகா காந்தி. அமெரிக்காவில் தெகாவா? ஏன் இன்னும் கூட கொஞ்சம் யோசித்து சாதக பாதகத்தையும் சேர்த்து எழுதி இருக்கலாமே? நம்மூர்ல இதைப்பற்றி யோசிக்க எவருக்கு நேரம் இருக்கு?

கோவி.கண்ணன் said...

காற்று நச்சுத் தன்மையானதாக இருந்திருக்கும், கடல் நீர் மாசு பட்டிருக்கும். நம்ம ஊரில் 1000க் கணக்கில் மனுசன் செத்தாலே கவலைப்படமாட்டாங்க.

Thekkikattan|தெகா said...

//காற்று நச்சுத் தன்மையானதாக இருந்திருக்கும், கடல் நீர் மாசு பட்டிருக்கும். நம்ம ஊரில் 1000க் கணக்கில் மனுசன் செத்தாலே கவலைப்படமாட்டாங்க//

கோவி - காற்று, வெடிப்புகையால் மாசு பட்டிருக்கலாமென்ற ஒரு பேச்சுமிருக்கு. கடல் நீர் மாசு பட்டிருந்தால் திடீரென்று எப்படி ஒரு குறிப்பிட்ட இன மீன் மட்டுமே இறந்து கரை ஒதுங்கியிருக்கு? இவையனைத்துமே மேற்பட்ட ஆய்வுக் கூட பரிசோதனைகளின் மூலமாக காரணமறியப்படலாம்.

நம்மூரில் போபல் விஷவாயு மரணங்களையொட்டி அப்படிச் சொல்லுறீங்களா? அதெப்படின்னா, முடிஞ்சளவிற்கு தனிப்பட்ட மனிதன் பணத்தை ரொப்புவதின் பொருட்டு கரப்பான் பூச்சிகளுக்கு இணையாகிப் போனது மனித உயிர்கள் :-((

வின்சென்ட். said...

புத்தாண்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிகழ்வு.ஆயிரக்கணக்கில் நீரிலும் (மீன்)ஆகாயத்திலும் (பறவை) சற்று தீவிரமாக ஆராய வேண்டிய நிகழ்வு. இதன் தொடர்ச்சியை அறிய விரும்புகிறேன்.

அரசூரான் said...

தெகா, நான் இன்று என்.பி.சி-யில் பிரையன் வில்லியம்ஸோட நைட்லி நியூஸ் பார்தேங்க, ஒரு சின்ன தகவல்கூட சொல்லலிங்க, அதே பாட்ட பாடி முடிச்சிட்டாங்க. என் பொண்ணு கேட்டா, நாம புத்தாண்டுக்கு வெடிச்ச வெடியான்னு? ஏதோ காரணம் சொல்லனும்னு சொன்ன மாதிரி இருந்தது. இடிய தவிர மத்த இரண்டும் ஒன்னும் நம்பும் படியா இல்லை... பார்ப்போம்.

Best Online Jobs said...

Good Post

Thekkikattan|தெகா said...

ஜோதிஜி said...

இந்தியாவில் மேனகா காந்தி. அமெரிக்காவில் தெகாவா? ஏன் இன்னும் கூட கொஞ்சம் யோசித்து சாதக பாதகத்தையும் சேர்த்து எழுதி இருக்கலாமே? நம்மூர்ல இதைப்பற்றி யோசிக்க எவருக்கு நேரம் இருக்கு//

:) அந்தக் காந்தி எப்படி இருக்காங்க. ஊர்லதான் இருக்காங்கலா? கேரளாவிற்கு போகும் அடிமாடுகளின் எண்ணிக்கை குறைஞ்சிடுச்சா??

இந்தப் பதிவில ஒரு செய்தியாகத்தான் கொண்டு வந்திருக்கேன். வெளியில் மேற்கொண்டு காரணங்கள் தெரிய வரும் பொழுது முழுமையா பகிர்ந்துப்போம்னு. ஏன், வெங்காயம், தக்காளியின் விலையைக் குறைக்க போராடிகிட்டு இருக்காங்களா நம்மூர்ல ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உலகில் நிகழ்ந்த அதிசயங்கள் பற்றீய குழந்தைகள் புக் ல மீன் மழை பற்றி படிச்சிருக்கேன்.. இது அதுபோன்ரதான்னு தெரியல..அது உயிருள்ள மீன்களா தரை தொட்டதா இருக்கு..

Thekkikattan|தெகா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உலகில் நிகழ்ந்த அதிசயங்கள் பற்றீய குழந்தைகள் புக் ல மீன் மழை பற்றி படிச்சிருக்கேன்.. இது அதுபோன்ரதான்னு தெரியல..அது உயிருள்ள மீன்களா தரை தொட்டதா இருக்கு.//

Raining Animals இது போன்று ஒரு வார்த்தை ஆணித்தரமாக எங்குமே நான் படித்த புத்தகங்களில் வாசித்ததே இல்லை. இப்போ நீங்க கூறியதற்கு பிறகு படித்துப் பார்க்கும் பொழுது சில வருடங்களுக்கு முன்பு சிறு தீவுகளுக்கிடையேயான உயிரினப் பரவல் காற்றைக் கொண்டு கடத்தி செல்லப்படுவதாக படித்த ஞாபகம் வந்து போனது.

அதனையொட்டியே இந்த மீன், பறவை மழை என்று பேசும் பொழுது பல லாஜிக்கள் ஓட்டைகள் இருப்பதாகவும், அதற்கு இது போன்ற பெரும் எண்ணிக்கையில் பறவைகளும், மீன்களும் அடித்து தூக்கிக் கொண்டு போவது அவைகள் வலசை போகும் சமயத்தில் நேர்ந்திருக்கலாம் என்ற அடிப்படையில் பார்த்தாலும்... அதன் அடிப்படையில் கூட அன்மையில் சுனாமி நடந்த பொழுது கோடியக்கரையில் உள்ள அனைத்து விலங்குகளும் ஒதுங்கி பாதுகாப்பான பகுதிக்கு சென்றதை நாம் அறிவோம். அப்படி இருக்கும் போது...

தனிப்பதிவில பேசுற அளவிற்கு விசயமிருக்கே...

Thekkikattan|தெகா said...

// வின்சென்ட். said...

புத்தாண்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிகழ்வு.ஆயிரக்கணக்கில் நீரிலும் (மீன்)ஆகாயத்திலும் (பறவை) சற்று தீவிரமாக ஆராய வேண்டிய நிகழ்வு. இதன் தொடர்ச்சியை அறிய விரும்புகிறேன்.//

ஆமாம், வருடத்தின் முதல் நாளில் இப்படி ஒரு பீதியான நிகழ்வு. மேலே முத்துலெட்சுமிக்கு கொடுத்த பின்னூட்டத்தின் பின்புலத்தில் சில விசயங்கள் யோசிக்கப்பட வேண்டியது. மேலும் அதிகார பூர்வமான காரணங்கள் வெளிவரும் பொழுது பகிர்ந்து கொள்கிறேன் அய்யா

கையேடு said...

ரொம்ப வருத்தமூட்டும் செய்தியா இருக்கே.

Unknown said...

Was there any nuclear testing going on in that area? Possible in that area.

Air Pockets - Causing death of the birds.

All guessing.

ஜோதிஜி said...

ஏன், வெங்காயம், தக்காளியின் விலையைக் குறைக்க போராடிகிட்டு இருக்காங்களா நம்மூர்ல ;-)

போராட்டமா? நம்மூர்ல? என்ன கொடும மாதவா?

நாங்க வெங்காயத்த பார்த்தே வாரக்கணக்கு ஆகுது.

பேசமா பொத்திக்கிட்டு இருந்துடுவோம். ஆட்டம் முடிந்தவுடன் தொடை தட்டுவோம்.

ஏன்னா நாங்க காந்தி சொல்லிக் கொடுத்த சகிப்பாளர்கள்.

சுகிப்பாளர்கள் அல்ல

Thekkikattan|தெகா said...

நாங்க வெங்காயத்த பார்த்தே வாரக்கணக்கு ஆகுது.//

என்னங்கய்யா சொல்லுறீங்க, இங்க ஓர் ஆளு தேங்கா இல்லன்ன உடனயே ஒரு வாரத்திற்கு சாப்பாடு அப்படி இப்படித்தான் இருக்குமின்னு ஸ்ட்ரைக் போடுறாய்ங்க,... எப்படிய்யா வெங்காயம் இல்லாம வாரக்கணக்கா? இன்னேரம் ரத்த ஆறு ஓடியிருக்க வேணாம் ;-)

//பேசமா பொத்திக்கிட்டு இருந்துடுவோம். ஆட்டம் முடிந்தவுடன் தொடை தட்டுவோம்.//

நான் நினைச்சேன் பூரா ஆளுங்களும் வெவசாயம் பண்ண கிளம்பிட்டீங்களோன்னு... இல்ல, சர்க்கரை இறக்குமதி செய்ற மாதிரி இதையிம் வெளிநாட்டில இருந்து இறக்கப் போறீங்களா. செஞ்சாலும் செய்வீங்க, 2020 வந்திட்டே இருக்கில்ல :)

Thekkikattan|தெகா said...

நான் இன்று என்.பி.சி-யில் பிரையன் வில்லியம்ஸோட நைட்லி நியூஸ் பார்தேங்க, ஒரு சின்ன தகவல்கூட சொல்லலிங்க, அதே பாட்ட பாடி முடிச்சிட்டாங்க//

நான் செய்திகள் பார்க்கிறதையெல்லாம் நிப்பாட்டி ரொம்ப நாளாச்சு :) ... காலீன் பவல், ஈராக் போரை விற்க கஷ்டப்பட்டதிற்கு எப்படி இங்க உள்ள மீடியாக்கள் பக்கபலமா நின்னு உதவினுச்சுங்கிறதிலே இருந்தே என்னோட அனைத்து சந்தேகங்களும் தீர்ந்து போச்சு, மீடியாக்கள் பொருத்து இருந்த நம்பிக்கை எல்லாம்.

//ஏதோ காரணம் சொல்லனும்னு சொன்ன மாதிரி இருந்தது. இடிய தவிர மத்த இரண்டும் ஒன்னும் நம்பும் படியா இல்லை... பார்ப்போம்..//

அப்படித்தான் இருக்கு ’ஏதோ’சப்பைக் காரணங்கள். முறையான ஆவணப்படுத்தல் இதுக்குப் பிறகான காரணம் தெரியவில்லையெனில், எல்லாமே க்கெஸ்லதான் ஓட்டணும். இந்த விலங்குகள் மழையும் ஒன்னும் பெரிசா சொல்லிக்கிற மாதிரி இல்ல. இடி (மின்னல்) இப்படி ஒரே நேரத்தில 5000 பறவைகள் இருக்கிற ஏரியாவை கவர் செய்ய முடியுமா?

Thekkikattan|தெகா said...

Best Online Jobs said...

Good Post//

thanks!

cheena (சீனா) said...

இன்னும் காரணம் கண்டு பிடிக்கலியா

Thekkikattan|தெகா said...

கையேடு said...

ரொம்ப வருத்தமூட்டும் செய்தியா இருக்கே...//

ஆமாங்க கையேடு. என்னன்னவோ இதுக்கு பின்னான காரணமா சொல்லுறாங்க.

Thekkikattan|தெகா said...

Sethu said...

Was there any nuclear testing going on in that area? Possible in that area.

Air Pockets - Causing death of the birds.//

நீங்க சொல்லுறது அந்த ஏரியா பக்கமாத்தான் அதெல்லாம் செஞ்சு பார்க்கிற வாய்ப்பா இருந்தாலும்... இப்படியும் பேசிக்கிறாங்க இப்போ நடந்ததைப் பொருத்து - Electromagnetic scalar weapons that can artificially manipulate the environment could be responsible for the mass die offs. isn't it scary?

பார்க்கலாம், தனிப்பதிவா போட்டு இன்னும் விரிவா பேச முடியுமான்னு.

suneel krishnan said...

தண்ணீரில் வாழும் மீன்களும் அதை அருந்திய பறவைகளும் மாண்டு உள்ளது ..தண்ணீரின் ph range -acidic ஆகா மாறியதால் இருக்கலாம் ,அதனால் கூட ரத்த கசிவு ஏற்படும் ,தண்ணீரின் இந்த மாற்றம் நடக்க அங்கு ஏதும் சாத்தியம் உண்டா தெகா சார் ?

மாதேவி said...

செய்தியில் கேட்டேன். தொடருங்கள்.

கோமதி அரசு said...

//புதிசா ஏதாவது கண்டுபிடிச்சு பரிசோதனை செஞ்சிப் பார்த்ததின் பக்க விளைவா இப்படி ஆயிருக்கலாமோன்னு தோணுது.//

குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ப்றவைகள் செத்து விழுவதால் நீங்கள் சொல்வதுப் போல் இருக்கலாம்.

5000 பறவைகள் ஒரே நேரத்தில் இறந்துபோனது வருத்தமாய் உள்ளது.

http://thavaru.blogspot.com/ said...

குறிப்பிட்ட அந்த இடத்தைவிரிவான
ஆராய்ச்சிக்கு உட்படுத்துகையில்
ஏதேனும் விடை கிடைக்கலாமா தெகா...

ஒரே நேரத்தில் அவ்வளவு உயிர்களின் இழப்பு என்பது சுனாமி கோரம் தான்.

Thekkikattan|தெகா said...

cheena (சீனா) said...

இன்னும் காரணம் கண்டு பிடிக்கலியா//

இன்னும் முறையான, அங்கீகரிக்கப்பட்ட காரணங்கள் வெளியிடப்படவில்லை, சீனா!
********************

வாங்க டாக்டர்,

//தண்ணீரின் ph range -acidic ஆகா மாறியதால் இருக்கலாம் ,அதனால் கூட ரத்த கசிவு ஏற்படும் //

அது போன்று தண்ணீர், உணவு சார்ந்த அழிவு என்றால் இன்னேரம் சில ஆய்வுக் கூட டெஸ்டுகளின் மூலமாகவே உண்மை வெளி வந்திருக்குமே! அது போன்ற நீரின் நச்சுத்தன்மை குறிப்பிட்ட phஅளவுகோலை விட அதிகரித்திருந்தால் அப்படி நீட்டித்து இருக்க விட்டிருக்க மாட்டார்கள்.

அப்படியே இருந்தாலும், ஒரே நாளில் அத்தனை பறவைகளும், மீன்களும் மாண்டிருக்குமா, நச்சு சிறுகச் சிறுக உடலில் ஏறியது என்று கொண்டால்... ??

Unknown said...
This comment has been removed by the author.
இயற்கை நேசி|Oruni said...

மாதேவி said...

செய்தியில் கேட்டேன். தொடருங்கள்//

நன்றி! ம்ம்ம்... தொடருவோம், இன்னும் பெரிசா சொல்லிக்கிற மாதிரி இல்லை.

*******************************

வாங்க கோமதியம்மா,

//குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ப்றவைகள் செத்து விழுவதால் நீங்கள் சொல்வதுப் போல் இருக்கலாம்.//

ஆமா மிக்க வருத்ததிற்குறியது. பார்க்கலாம் பல கருதுகோல்கள் புழக்கத்தின் உள்ளது. எது தீர்க்கமானது என்று இன்னும் தெரியவில்லை.

இயற்கை நேசி|Oruni said...

தவறு said...

குறிப்பிட்ட அந்த இடத்தைவிரிவான
ஆராய்ச்சிக்கு உட்படுத்துகையில்
ஏதேனும் விடை கிடைக்கலாமா தெகா...//

இது வரைக்கும் வான வேடிக்கையை ஒட்டியே இப்படியாகிவிட்டது என்ற கோணத்திலேயே நகருவதால், அப்படி ஒரு தள ஆராய்ச்சி மேற்கொள்ள வில்லை போலும். மேலும், ஆட்டோப்ஸியிலும் விஷத் தன்மையாலோ அல்லது தொற்று வியாதியாலோ இல்லை என்பதாலும் இருக்கலாம். அதனை தாண்டிய ஏதோ ஒரு நிகழ்வு என்றால் அங்கே தள ஆராய்ச்சிக்கு வேலையே இல்லை ;-)...

//ஒரே நேரத்தில் அவ்வளவு உயிர்களின் இழப்பு என்பது சுனாமி கோரம் தான்//

பின்னே கண்ணுக்கு எட்டிய வரைக்கும் இறந்த பறவைகளின் உடலை பார்த்தா என்னாகும்...

ramachandranusha(உஷா) said...

இந்தியால அஸ்ஸாம் மாநிலத்தில் -எந்த இடம் என்று நினைவில்லை. கூகுளில் தேடணும்-
ஒரு இடத்தில் ஆயிரக்கணக்கான/ நூற்றுக்கணக்கான பறவைகள் சூசைட் பண்ணிக் கொள்ளும். எனக்கு
நினைவிருந்தவரையில் அவ்வப்பொழுது நடக்கும் சம்பவம்

Thekkikattan|தெகா said...

வாங்கங்க உஷாங்க, வலைப்பதிவுகள் பக்கமே பார்க்கிற முடியறதில்ல. நல்லா இருக்கீங்களா?

//ஒரு இடத்தில் ஆயிரக்கணக்கான/ நூற்றுக்கணக்கான பறவைகள் சூசைட் பண்ணிக் கொள்ளும். //

மனிதனைத் தவிர, வேற ஏதாவது உயிரினங்கள் குறிப்பாக மனிதனுக்கு மிக அருகில் இருக்கும் சிம்பன்சிகள் கூட தற்கொலை செய்து கொள்வதாக அறிந்ததில்லையே? Are they conscious being? Can they recall, feel ashamed of, and act based on predetermined thoughts. I do not think none of which நடக்கிது அதன் உலகிலேன்னு எனவே விலங்குகளில் மனிதன் தவிர்த்து தற்கொலை என்பது நடப்பதாக தெரியவில்லை.

நகைச்சுவைக்காக, ஒரு ஃபாரம்ல எடுத்தது :-

Re: BIRDS COMMITTING MASS SUICIDE - WHY? - ITS ANYBODIES GUESS! Quote

I SAW AT LEAST 4 OF THEM SHOOT THEMSELVES..AND A HANDFUL OF THEM SLIT THEIR WRIST...

Thekkikattan|தெகா said...

கெக்கே பிக்குணி - ஏங்க கமெண்டை இழுத்து போட்டீங்க. உங்களுக்கு பதில் சொல்ல படிச்சிட்டு இருந்தேங்க கூடுதலா சில விசயங்களை அந்த பின்னூட்டத்தின் மூலமா கொடுக்கலாம்னு.

என்னாச்சு?!!

Unknown said...

இந்த செய்தி வந்தன்னையிலிருந்து ஃபாலோ செய்ததால், இன்று இதுவும் கண்ணில் பட்டது. இறுதியில் நான் தடித்துச் செய்திருக்கிற செய்தித் துணுக்கைப் பாருங்கள்!????

http://news.yahoo.com/s/ap/20110105/ap_on_re_eu/eu_sweden_dead_birds

Wed Jan 5, 7:49 am ET

STOCKHOLM – Officials say about 50 birds have been found dead on a street in Sweden.

Veterinarian Robert ter Horst says the cause of jackdaws' deaths was unclear but that fireworks were set off near the scene Tuesday night.

The birds were found dead on Wednesday.

Ter Horst says cold weather, difficulties finding food and possible shock from the fireworks could be responsible, leading to the stressed birds either dying from the stress or being run over by vehicles.

Five of the dead jackdaws found in the city of Falkoping were being tested.

Mass bird deaths aren't uncommon.

In the U.S., New Year's Eve fireworks were blamed in Arkansas for killing thousands of blackbirds, and a few days later power lines likely killed about 450 birds in Louisiana.

Unknown said...

I will quickly add here what I wanted add in detail. Since I was acutely interested in this topic, found a recent update (less than 2hrs) on this.

http://www.google.com/search?q=arkansas+birds&hl=en&client=firefox-a&hs=0QM&rls=org.mozilla:en-US:official&prmd=ivnsu&source=univ&tbs=nws:1&tbo=u&ei=gzMlTZPcOIWBlAfluMGAAg&sa=X&oi=news_group&ct=title&resnum=1&ved=0CDQQqAIwAA

BEEBE, Ark. (WQOW) -- Preliminary tests from the U.S. Geological Survey's National Wildlife Health Center in Madison show the thousands of red-winged blackbirds died from blunt force trauma on New Year's Eve.

The report supports preliminary findings from the Arkansas Livestock and Poultry Commission.

The results show unusually loud noises caused the birds to flush from a roost. Additional fireworks in the area may have forced the birds to fly at a lower altitude than normal, causing them to run into houses, vehicles, trees and other objects. Blackbirds typically do not fly at night because they have poor night vision.

It's estimated up to 5,000 birds fell out of the sky before midnight on December 31 near Beebe, Arkansas.

Sorry gotta go. So I am providing what I found in English.

BTW, your blog template needs to be fixed - delete button for comment is invisible, but works:-<>

I want to know where the fireworks for all these places originated from

ramachandranusha(உஷா) said...

இல்லை தெகா. உறுதியாய் தெரியும் இறக்கைகளை மடக்கிக் கொண்டு பாறையில் மோதி
இறக்கின்றன.
புத்தாண்டில் இருந்து, இனி எழுத்துலகில் தீவிர பங்களிப்பு என்பதில் உறுதியாய்
இருக்கின்றேன் ;-)

ramachandranusha(உஷா) said...

தெகா, Jatinga என்று கூகுளிட்டு பாருங்கள். அஸ்ஸாமில் ஒரு வருடம் வசித்திருக்கிறேன்.
காதில் விழுந்த மற்றும் வாசித்த உறுதியான தகவல். இயற்கையின் அளவில் அடங்காத
புதிரில் இதுவும் ஒன்று

Thekkikattan|தெகா said...

கெக்கே பிக்குணி,

எங்கே கடுப்பாகி உங்க கமெண்டெயே தூக்கிட்டீங்களோன்னு நினைச்சிட்டேன். அப்பாடா திரும்ப வந்திட்டீங்களா, வாங்க! :)

//The results show unusually loud noises caused the birds to flush from a roost. Additional fireworks in the area may have forced the birds to fly at a lower altitude than normal, causing them to run into houses, vehicles, trees and other objects. Blackbirds typically do not fly at night because they have poor night vision.//

அதேதாங்க எல்லா இடத்திலும் சொல்லுறாங்க. அப்படிப் பார்த்தா இதுக்கு முன்னாடி நடந்த வான வேடிக்கை சமயங்களில் ஏன் இப்படி நடக்கலா? அல்லது வேறு நகரங்களில் அர்க்கான்சஸை விட அதி விமரிசயாய் வான வேடிக்கை நடக்கும் நகரங்களில் இது போன்ற நிகழ்வு அறியப்படவில்லையே ஏன்?

ஹ்ம்ம்ம் வெடிச் சத்தம் இந்தப் பறவைகளை குழப்பமடைய வைத்து அங்குமிங்கும் பறக்க வைத்து மோதிக் கொண்டு இறந்து விழுந்தது என்று கொண்டாலும், மிகச் சரியாக எத்தனை மணிக்கு நிகழ ஆரம்பித்தது என்பதும் கணக்கில் வரணும்... யாராவது அந்த ஏரியாவிலிருந்து டிவிட் ஏதாவது செய்திருந்து கிடைத்தால் நன்றாக இருக்கும் - முதல் கவனிப்பாக மிகச் சரியாக வருடப் பிறப்பு கொண்டாடிய 10 நிமிடங்களுக்குள் இந்த பறவை மழை நிகழ ஆரம்பித்ததாக.

அப்படியே இந்த நியூ சயிண்டிஸ்ட் இணைப்பையும் பாருங்க... ஒரே மாதிரியா இருக்கும்

//I want to know where the fireworks for all these places originated from//

அதுவும்தான்... அப்போ நியூ யார்க் டைம் ஸ்கொயரில் நடப்பதனைக் காட்டிலும் பெரிய ஷோவா அர்க்கான்சஸ் வான வேடிக்கை...

//your blog template needs to be fixed - delete button for comment is invisible, but works://

அப்படியா?! எனக்கு சரியாத்தானேங்க காட்டுது. கேக்குறேன்... மாற்ற ஆளுங்ககிட்டயும்.

Thekkikattan|தெகா said...

உறுதியாய் தெரியும் இறக்கைகளை மடக்கிக் கொண்டு பாறையில் மோதி இறக்கின்றன.

காதில் விழுந்த மற்றும் வாசித்த உறுதியான தகவல்.//

ஹ்ம்ம்ம்... நிஜமாவே ஆச்சர்யமூட்டுகிறது. நீங்க சொல்வதை கேக்கும் பொழுது. உண்மையாகவே இது போன்று விலங்குகள் உலகில் நிகழ்கிறது என்றால் ஏன் இது வரையிலும் நேஷனல் ஜியோக்ராஃபி, டிஸ்கவரி சானல், அனிமல் ப்ளானட் போன்ற தொலைக்காட்சி ஊடகங்களில் அது போன்ற காணொளி காட்சிகள் கிடைக்கவே பெறவில்லை?

ஏனெனில் நீங்க கூறிய நிகழ்வு கூட அச்சு ஊடக செய்தியும், காது விழுந்ததனைக் கொண்டும்தான் எனும் பொழுது யோசிக்க வைக்கிறது. இப்போ உஷாவே பார்த்திருந்தாங்க அப்படின்னா... இயற்கையின் அளவில் அடங்காத புதிரில் இதுவும் ஒன்று ....ஆம், இது மிக்க ஆச்சர்யமூட்டக் கூடிய நிகழ்வே!

//புத்தாண்டில் இருந்து, இனி எழுத்துலகில் தீவிர பங்களிப்பு என்பதில் உறுதியாய் இருக்கின்றேன் ;-)//

கண்டிப்பா எழுதுங்க!

ramachandranusha(உஷா) said...

இல்லை தெகா, நான் பார்க்கவில்லை. அஸ்ஸாமில் இருந்தப்பொழுது யாரோ சொன்னது. பிறகு செய்தியாக கண்ணில் பட்டது.

Thekkikattan|தெகா said...

அஸ்ஸாமில் இருந்தப்பொழுது யாரோ சொன்னது. பிறகு செய்தியாக கண்ணில் பட்டது.//

நம்மூரில் கதைகளுக்கா பஞ்சம். நிறைய கதை சொல்லிகள் விதவிதமா :))

உணவு நச்சு மூலமாக ஏதோ ஒரு காரணத்திற்காக இப்படி ஆயிரக்கணக்கில் கொன்று போட்டுவிட்டு அச்சு ஊடகங்களைக் கொண்டு கதைகளை சொல்லச் சொல்லலாம்... எனவே முறையான ‘காணொளி’ விவரணைகள் இல்லாமல் விலக்குகளில் தற்கொலை என்பதெல்லாம் நம்புவதற்கில்லை :)...

Unknown said...

I keep trying to getting back to what I "NEED" to do for a living..., but.

Theka, please google "Jatinga". Usha is right.

For Jatinga, "Western logical" explanation is the bright lights from the tribals.

Thekkikattan|தெகா said...

* The repeated episodes are confined to a 1.5 km strip of the village.

* Is it really suicide, or something else?

"It is not a suicide, to be precise. But the fact remains that birds are attracted by light and fly towards any object with a light source. This phenomenon still puzzles bird specialists," said Anwaruddin Choudhury, a well-known ornithologist in Assam, on the sidelines of the First International Jatinga Festival here.

* The late Salim Ali, the country's pre-eminent ornithologist, too was struck by this oddity.

"The most puzzling thing to me about this phenomenon is that so many species of diurnal resident birds should be on the move when, by definition, they should be fast asleep. The problem deserves a deeper scientific study from various angels," he had written.

* The Zoological Survey of India had sent a team to visit the place in 1977. Later, leading ornithologists from Europe, the US and Japan too studied the mystery.

* However, no case of migratory birds plunging to their deaths has been recorded yet.

** Some bird specialists attribute the phenomenon to the electro-magnetic forces of Jatinga, which is surrounded by geographical faultlines all round. But no conclusive evidence has emerged till now.

இதெல்லாம் உஷா அஸ்ஸாம்ல உள்ள Jatinga என்ற இடத்தில் நிகழும் பறவைகளில் தற்கொலை பற்றி இங்கே அறியத்தர, அது சம்பந்தமான செய்தி டெக்கான் க்கொரினிகிலில் கிடைத்து அதனிலிருந்து சில பகுதிகளை இங்கே கொண்டு வந்தேன்... மேலும் செய்தி இங்கே-

http://www.deccanchronicle.com/national/mystery-suicide-hundreds-birds-jatinga-391

பூச்சிகளில் ஒளியை நோக்கி கவர்ந்திழுக்கப்படும் பிஹேவியர் யாவரும் அறிந்ததே... இருப்பினும் இரவு வெளிச்சத்தால் பறவைகளில் நடப்பது எனக்கு இதுவே முதல் முறை அறிவது. ஆர்வமூட்டும் வாசிப்பு! நன்றி உஷா அண்ட் கெக்கே பிக்குணி!!

Anna said...

இன்னும் மர்மமாகவே உள்ளது. Seems like mass animal deaths are happening in many places around the world. America விலும் Arkansas இல் மட்டுமல்ல lousiana விலும் இதே incidence நடந்துள்ள‌து.

இங்கு NZ இல் coromendel peninsula கடற்கரைகளில் பல ஆயிரம் மீன்கள் இறந்துள்ளன. Apparently Brazil இலும் Maryland இலும் இப்படி பல ஆயிரம் மீன்கள் இறந்துள்ளனவாம்.

Related reads:
Dead Birds

Hibernating North American Bats Face Possible Endangerment

Thekkikattan|தெகா said...

The Analyst,

//Seems like mass animal deaths are happening in many places around the world. America விலும் Arkansas இல் மட்டுமல்ல lousiana விலும் இதே incidence நடந்துள்ள‌து. //

என்னங்க இப்படி மிரட்டுறீங்க! இன்னும் பரவலா பல நாடுகளில் ஒரே சமயத்தில நடக்கிறதா...

நியூஸியில் கரையொதிங்கிய மீனுக்கு சொல்றாங்க ஏற்கெனவே மீன் பிடி வலையில் பிடிபட்டு இறந்துபட்ட மீன்களை மர்ம படகுகள் இரண்டு வந்து கொட்டிவிட்டு போனதுன்னு... அதுவும் சப்பைக் காரணம்.

பனித்தூக்கத்தில் இருக்கும் போது மாண்டழியிம் வவ்வால்கள் இறப்பிற்கு காரணம் அந்த நேரத்தில் அவைகளை தாக்கும் ஒரு பூஞ்சைக் காளன் என்பது நல்ல கண்டறிவிப்பு.

ஆனால், ப்ரேஸில், அர்க்கான்சஸ், லூசியான, மேரிலாண்ட் அப்புறம் நியூஸி ஒரே சமயத்தில் இப்படி பரவலாக ஏதோ ஒரு காரணத்தால் நிகழ்ந்திருக்கிறதின்னா... the authority better wake up and find out the actual cause of the mass die offs. Or do you believe in the ancient Mayan’s (Calender) prediction of 2012 ;-) ??

Anna said...

"the authority better wake up and find out the actual cause of the mass die offs"
I hope so too.

"do you believe in the ancient Mayan’s (Calender) prediction of 2012 ;-) ??"
Oh yeah!:) LOL. That must be it.
உலகம் முடிந்தவுடன் தற்சமயம் கடவுளைத் திடீரென்று பார்த்தீர்களானால் சொல்ல வேண்டியவை இங்கே. Loved it.

Thekkikattan|தெகா said...

hahaha... that read is hilarious! honestly, where did you find all these links :)?

I liked the most out of it, what is said in the following passages...

^^^You’re going to judge me? On behalf of all that’s good and decent in your creation, I judge you. I may have been a willful child, but you were a terrible father.

He rejected the very creator -hahaha...

^^^^So you created us because you desired companionship and love? Well then, you needed me. But I didn’t need you. I grew up and took responsibility for my own life.

கையேடு said...

கொஞ்சம் தாமதமாக வந்திருக்கேன்..

//During these late monsoon months, mysterious behaviour of birds takes place. However, some other conditions are also necessary for the phenomenon to occur. The air must be foggy, cloudy or misty. If there is slight rain, it would be even better. The wind must be from south to north. It should be moonless dark nights. And the best time is between 7 p.m. and 10 p.m.//

They hit against trees or other objects and get injured in their flight towards the light source. The villagers hit the hovering birds with bamboo poles or catapults to bring them down

Another interesting fact has been brought out is that no long distance migratory bird gets attracted to the light traps. The victims are resident birds of the adjacent valleys and hill slopes.

இது ஜடிங்கா பறவைகள் குறித்து தேடியதில் கிடைத்தது.. அஸ்ஸாம் மலைகள் பற்றிய அலுவல் தளத்தில் கிடைத்தது.. http://nchills.nic.in/NCHILLS-JATINGA.htm
//

பறவைகள் ஒளியை நோக்கி ஈர்க்கப்படுவது குறித்து ஒரு சிறுவயது அனுபவம்..

மாலையில் எங்கள் வீட்டைச் சுற்றி வெகுகுறைவான ஒரேயொரு சாலைவிளக்கு அல்லது அதுவும் எரியாமலோ இருக்கும் போது சில சிட்டுக் குருவிகளும், சில நேரங்களில் தவிட்டுக் குருவி என்றழைக்கப்படுபவையும் வீட்டுத் திண்ணைக்குள் புகுந்துவிடுவதுண்டு.

அவற்றிற்கு பார்வை சரிவரத் தெரியவில்லை என்பதை எளிதாகப் புரிந்துக் கொள்ளலாம் அங்கே இங்கே முட்டி மோதிக்கொண்டிருக்கும் வழிதெரியாமல்.

வேடிக்கை என்னவெனில், விட்டின் திண்ணையில் இருக்கும் மிகப்பெரிய கம்பித் தடுப்புகளில் அமர்ந்து கொள்ளும், இதுவும் ஒரு விபத்து போலவேதான் நடக்கும், நேர்த்தியாக போய் அமராது. ஆனால் அவை அமர்ந்திருக்கும் கம்பில் இருந்து அந்தப்பக்கம் பறந்தால் அவை பறந்து திரிந்த வெளி இருக்கிறது என்பதை அவற்றால் உணரமுடியவில்லை, மீண்டும் விளக்கிலும் திண்ணைச் சுவற்றிலும் முட்டத் துவங்கிவிடும்.

ஆனால் இதில் மிகவும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வுகளைப் பார்த்ததுண்டு, சில நேரங்களில் சிட்டுக் குருவிகள் கம்பியில் அமரும் போது தலைகீழாக அமரும், அதாவது வவ்வாலைப் போல தொங்கும், ஆனால் அது ஏதோ நேராகவே அமர்ந்திருப்பதைப் போல அப்படியே அமர்ந்திருக்கும்.

forget about science. imagine, for us within 10-15 year old, what a sight would it be.

பின்னர் நாங்கள் பெரிய மனசு பண்ணி கதவை விரிய திறந்து வைத்து அல்லது அந்த திசையில் பறக்க வைத்து எப்படியாவது இருட்டுக்குள் தள்ளுவோம்.

இப்போதான் புரியுது, அது பாவம் அங்கே பயந்துதான் இங்கே வந்தது என்று.. :))

Thekkikattan|தெகா said...

வாங்க கையேடு,

வந்தாலும் ஒரு புது அனுபவப் பகிர்வோடு வந்திருக்கீங்களே :)

//அஸ்ஸாம் மலைகள் பற்றிய அலுவல் தளத்தில் கிடைத்தது.. http://nchills.nic.in/NCHILLS-JATINGA.htm //

அந்த கட்டுரையை நானும் ஏற்கெனவே வாசிச்சேன். ஆர்வமூட்டுவதாக இருந்தது. பறவைகளிலும், விலங்குகளிலும் disorientation ஏதாவது சூரிய/சந்திர கிரகண நாட்களில் அவைகள் குழம்பிப் போயி அலைந்து திரிவதையும், ஒலி எழுப்புவதையும் கவனித்திருக்கிறோம்.

இந்த அஸ்ஸாம் ”ஜடிங்கா” நிகழ்வில் அந்த தளத்தில் ஒரு வீட்டின் புகைப்படமிருந்தது அது மிக்க ஒளி வெள்ளத்தில் மிதப்பதனைப் போன்று, ஒரு மிஸ்டியான பொழுதில் இருப்பதாக காட்டுகிறது. அது போன்ற ஒரு சூழல் கூட பறவைகளை குழப்பமடைய வைத்து ஒரு தூக்க நிலைக்கு எடுத்துச் சென்று எளிதில் வேட்டையாடப் படுவதற்கு சாதகமாக அமைந்து போய்விடலாமல்லவா. அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே எனும் போது, அந்த வெளிச்சத்துடன் இல்லாமல் இருந்தால் அவைகள் இது போன்று பிஹேவ் செய்கிறதா என்று தெரியவில்லை...

//அவற்றிற்கு பார்வை சரிவரத் தெரியவில்லை என்பதை எளிதாகப் புரிந்துக் கொள்ளலாம் //

//அவை அமர்ந்திருக்கும் கம்பில் இருந்து அந்தப்பக்கம் பறந்தால் அவை பறந்து திரிந்த வெளி இருக்கிறது என்பதை அவற்றால் உணரமுடியவில்லை.//

//மீண்டும் விளக்கிலும் திண்ணைச் சுவற்றிலும் முட்டத் துவங்கிவிடும். //

ம்ம்ம் இன்ரஸ்டிங்! கண் தெரிவதில்லை பகல் பொழுதில் வாழ்க்கை நடத்தும் பறவைகளுக்கு(diurnal), அருகில் ஈர்தெழுத்த விளக்கொளியால் அவைகள் உங்க வாழ்விடத்திற்கு வந்த பிறகு அதனைத் தாண்டி தன் இடத்தை அடைவதில் குழப்பமுற்று மென்மேலும், முயற்சித்து, குழம்பி ஒரு மாதிரியான சோர்வு நிலைக்கு நகர்ந்து எது நடந்தாலும் சரின்னு அப்படி ஆகிடுமோ...

சுய-அடையாளம் காணும் தன்மை இவைகளுக்கு இல்லை என்பதனையொட்டி கவனித்து அதனை ஒரு சிறு குறிப்பாகவும் எழுதி பப்ளீஸ் பண்ண ஒரு விசயத்தை அடுத்த பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கிறேன்...

arasan said...

நல்ல தகவல் ...
ஏதோ ஒரு பேரழிவு ஏற்படப்போகுது அது மட்டும் நிச்சயமா தெரியுது

Related Posts with Thumbnails