Wednesday, March 16, 2011

ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!!

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியான ஜப்பான் இயற்கை கொடுத்த தொடர் அடியினை சந்தித்து தடுமாறி நிற்கும் இந்த சூழ்நிலையில் அணு சக்தி தொழில் நுட்பத்தை பற்றி மறு பரிசீலனை உலகம் தழுவிய முறையில் செய்வது நமக்கெல்லாம் அவசியமாகிறது.

ஜப்பான் தனது பூமிய இருப்பில் அதிகளவு பூகம்பத்தையும், தொடர்பாக ஆழிப்பேரலையையும் சந்திக்கும் ஓரிடத்தில் அமைந்து போய் தனது இருப்பை நகர்த்தி வருகிறது. அவர்கள் இந்த இயற்கை சார்ந்த பேரழிவினை கடந்த கால அனுபவத்தைக் கொண்டு மிக்க ஆயத்தத்துடன் எதிர் நோக்கும் தன்மை இருப்பினும், இந்த சமீபத்திய பூமியச் சிலிர்ப்பு அவர்களை எதிர்பாராத நிலைகுலைவில் இருத்தி வைத்திருக்கிறது.

நில அதிர்வு ஏற்பட்ட அடுத்த நிமிடத்திலேயே ஆழிப்பேரலையின் பயணம் தொடங்கி விடுகிறது. அதன் வேகமும், நிகழ்த்தப் போகும் சேதாரமும் எதனை ஒத்ததாக இருக்கப் போகிறது என்பது, நாம் கரைப் பகுதியில் அமைத்து வைத்திருக்கும் தொழிற்நுட்பங்களையும், நம்மிடம் இருக்கும் மக்கட் தொகையையும் கொண்டே இறுதியில் கணித்து தெரிந்து கொள்வதாக இருக்கிறது.

அத்தனை பெரிய அனுபவத்தையும், தொழில் நுட்பத்தையும், பொருளாதாரத்தையும், முன் ஏற்பாடுகளையும், நேர்மையாக மக்களுக்கென இயங்கும் அரசாங்க எந்திரத்தையும் கொண்டிருக்கும் ஒரு நாடே இப்படியான ஒரு அவல நிலையில் இந்த அணு சக்தி உலைகளுக்கு நிகழ்ந்த நிகழ்வினால் நிலை குலைந்து நிற்கும் பொழுது ஏனைய மூன்றாம் தர நாடுகளுக்கு இது போன்ற எதிர்பாராத ஒரு இயற்கை பேரழிவினையொட்டி அணு உலை விபத்து நிகழ்ந்தால் என்னவாகும் என்று நினைக்கும் பொழுது மண்டை கிறு கிறுக்கிறது. அதிலும் குறிப்பாக நமது சுரண்டல் அரசாங்கத்தை கொண்ட நாட்டில் எப்படியெல்லாம் விளைவை சந்திப்போம்?

கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலை கண்டிப்பாக 35+ வருடங்களுக்கு முன்பாக கட்டமைக்கப்பட்டிருப்பதாகத்தான் இருக்க முடியும். இந்த கால இடைவெளியில் அதன் கட்டமைப்பே கலகலத்துத்தான் போயிக்கொண்டிருக்கும். அங்கே இது போன்ற ஒரு பூகம்பத்தாலோ அல்லது ஏதோ ஒரு தொழிற்நுட்பக் காரணத்தாலோ வெடிப்பு நிகழ்ந்து கதிரியக்கம் நிகழப்படுமாயின் எது போன்ற தற்காப்பு முன்னெடுப்புகள் கை வசத்தில் உள்ளன? அந்த திட்டத்தில், மக்களையும் பங்கு கொள்ள வைத்து தயார் நிலையில் அறிவூட்டி நாம் திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறோம். இத்தனை மக்கட் தொகையையும் உள்ளடக்கி கொண்டு, சரிவர அவர்களுக்கு இந்த கதிரியக்கத்தின் சாதக பாதகங்களை அறிவுறுத்தி வைக்காமல் எப்படி கண்களை மூடிக் கொண்டு மேலும் மேலும் அணு உலைகளை நாட்டின் இதரப் பகுதிகளுக்கும் பரப்பி வைக்க நம்மால் முடியும்?

குறைந்த பட்சம் இருக்கும் மக்கட் தொகையினை கருத்தில் கொண்டாவது இயற்கை-நண்ப தொழிற்நுட்ப வழியில் இது போன்ற மின் சக்திக்கென அணு உலைகளை பயன்படுத்தி பிற்காலத்தில் அதன் கழிவுகளாலும், விபத்துக் காலங்களில் நடந்தேறும் கதிர் வீச்சுக் கோரங்களை கணக்கில் கொண்டு மாற்றுத் திட்டங்களான காற்று, நீர், சூரிய வெப்பத்தினைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் உக்தியினை சொடுக்கி ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டால்தான் என்ன.

இப்பொழுது ஜப்பானில் அணு உலை வெடித்த இடத்திலிருந்து 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கூட கதிரின் தாக்கம் இருப்பதாக அறியப்படுகிறது. இது போன்றதொருதளவில் நமது நாட்டில் கல்பாக்கத்திலோ அல்லது கூடான் குளத்திலோ நடந்தேறினால் கதிரியக்கத்தின் தாக்கம் எது வரைக்கும் சென்றடையும்? எப்படி மக்களை அப்புறப்படுத்தி எந்த மாநிலத்தில் கொண்டு போய் விடுவோம்? எந்த வீட்டை அது போன்ற ஒரு கதிர் வீச்சு நடைபெறும் நாளில் அடைத்து காற்று கூட உட்புக முடியாதவாறு பூட்டிக் கொண்டு உள்ளயே இருப்போம்?

ஒன்று தெரியுமா? இது போன்ற கதிர்களிலிருந்து வரும் கழிவுப் பொருட்கள் 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வருடங்கள் கூட தனது வீரியத்தை இழக்காமல் கதிர் வீச்சை வெளிப்படுத்துகிறதாம். இதனை வைத்து பாதுகாப்பதற்கே இடம் தேடி வருகிறோம், அதாவது கழிவினைக் கூட எப்படி ஜப்பான் அணு உலையினுள் குளிர்ந்த நீரைச் செலுத்தி வெப்பத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள போராடியதோ அதனைப் போன்றே இந்த கழிவினையும் வைத்து கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வரவேண்டும்.

நம்ம பிச்சாத்து போபால் விபத்திலேயே பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலி கொடுத்துவிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி துடைச்சி போட்டுட்டு மறந்து போனவிங்க நாம. இனிமே வரப் போறதுக்கு மட்டும் அலட்டிக்கவா போறோம். ஆனா, இந்த அணு கதிர் வீச்சில என்னவொரு மறுக்க முடியாத தடயத்தை விட்டுக்கிட்டே போகுமின்னா நான்கு தலைமுறைக்கும் தள்ளி பிறக்கும் குழந்தைகளில் கூட குறைபாடுகளை மரபணுக்களின் வழியாக வெளிப்படுத்தி நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன்னு சொல்லிகிட்டே இருக்கும்.

ஜப்பானில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் விபத்தின் பிரமாண்டத்தைக் கண்டு சைனாவே எல்லா அணு உலைகளுக்கும் போட்டிருந்த எதிர்கால ஒப்பந்தத்தை கடாசப் போகிறதாம். எனவே, நாம சைனாவை பார்த்துத்தானே சூடு போட்டுக்குவோம், இப்போ அவங்கள நகல் படுத்தி ஒரு நல்ல சூடு போட்டுக்குவோம் வாங்க!


கதிர்வீச்சின் நீள அகலத்தை புரிந்து கொள்ள இந்த படத்தை பார்த்து புரிஞ்சிக்குவோம். இது இப்பொழுது ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை வெடிப்பினையொட்டிய projection ...



Photo Courtesy: Net

20 comments:

geethu said...

good information.thanks thekki.

Thekkikattan|தெகா said...

Update -1

ஃபுக்குஷிமா அணு உலைகளில் ஒன்றிலிருந்து நான்கு ஏற்கெனவே வெடித்து பிரச்சினையை நம்முன் வைத்திருக்கிறது.

தற்பொழுதைய செய்தி (புதன் மாலை என்னுடைய நேரம் 7.20) மற்ற இரண்டு அணு உலைகளான ஐந்து மற்றும் ஆறும் பிரச்சினையில் இருப்பதாக தெரிகிறது. மேலும் மேலும் மண்டையடி...

ஜோதிஜி said...

அண்ணே சொகமா இருக்கீயளா?

நீங்க விஞ்ஞானத்தைப் பற்றி சொல்லியிருக்கீங்க. நான் வேறொரு விசயத்தை இந்த இடத்தில் சொல்லி விட்டு செல்கின்றேன்.

பொதுவா இது போன்ற சமயத்தில் மக்கள் மத்தியில் எந்த மாதிரி வக்ரபுத்தி உருவாகும் என்பதை தமிழ்நாட்டில் சுனாமி (இதற்கு தமிழ் கடற்கோள் என்று மருத்துவர் புருனே சொல்லியுள்ளார்) காலத்தில் செய்த காரியத்தை படித்து இருப்பீங்க. முடிந்த வரைக்கும் சுருட்டிங்கோ என்று மக்களும் சுனாமியாய் சூறாவளியாய் செயல்பட்டார்கள். ஆனால் ஜப்பானில் கடைகளின் முன்னால் மக்கள் அமைதியாக வரிசையாக நின்றதும் கடைகாரர்கள் விலைகளை ஏற்றாமல் ஒவ்வொருவருக்கும் இருந்ததை சரியாக கொடுத்ததும்....

இது போன்ற பல விசயங்களை ஆச்சரியத்துடன் கவனித்த போது ஜப்பான் மக்களின் அடிப்படை மனோபாவம் ஓழுக்கம், நாட்டுப்பற்று எந்த சூழ்நிலையிலும் மாறாதது என்பதை என்பதை உணர்ந்து கொண்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல போஸ்ட் ..

@ ஜோதிஜி.. நாம்ப இப்படித்தான்னு நாமளே இந்த சமயத்துல மனசால தாழ்த்திக்கிறோம். நான் கூட வரிசையா நிக்கிற போட்டோ பார்த்து கொஞ்சம் பொறாமைப்பட்டேன் தான். ஆனா மனுசன் மனுசன் தானே.. உயிர் பயம் உயிர்பயம் தானேங்க..
இன்றைய செய்தித்தாளில் போட்டிருக்காங்க வயதானவர்கள் மேல் ஏறி அமுக்கியபடி இளையவர்கள் உயர்தளத்துக்குச் சென்ற விதத்தை..
இதற்காக நான் சந்தோசப்படலை.. சும்மா ஒரு செய்திக்கு சொல்றேன்.

தமிழ் உதயம் said...

நிச்சயம் இந்தியா போன்ற தேசங்கள், அணுசக்தியை பயன் படுத்துதல் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜப்பான் சில பாடங்களை கற்று தந்துள்ளது. கட்டுரையின் மலர்ந்துள்ள அக்கறை கருத்துகள் அத்தனையும் நிஜம்.

suneel krishnan said...

மிக மிக முக்கியமான பிரச்சனை -அமெரிக்க அரசுடன் இந்திய அரசு -அணு ஒப்பந்தம் செய்யும் சமயங்கள் இருந்தே இத்தகைய பிரச்சனைகள் குறித்து எழுப்பபடுகின்றன ,அதற்கு நம் விஞ்ஞானிகள் -அதெல்லாம் ஒன்னும் ஆகாது ,எல்லாம் நல்லா தான் இருக்குனு சொல்லிக்கிட்டு இருந்தாங்க -ஒரு real time crisis -வந்த பின்பு தான் ,இயற்கையின் பேராற்றலின் முன் நம் எவளவு சிறிய பச்சா என்று புலபடுகிறது ..

கையேடு said...

ம்ம்.. இந்தியாவின் அணு உலைகள் பற்றி ஏற்கனவே கொஞ்சம் எழுதி வச்சேன்.

//இந்தியாவைப் பொறுத்தவரை இரகசியங்கள் என்பது, அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும் தவறுகளையும் மறைப்பதற்காக மட்டுமே பயன்படும் ஒரு ஆயுதம், என்பதற்கு அணு ஆற்றல் துறை எந்த வகையிலும் விதிவிலக்கல்ல.//

முழுவதும் இங்கே இருக்கு..http://kaiyedu.blogspot.com/2007/10/blog-post.html

Thekkikattan|தெகா said...

வாங்கண்ணே ஜோதிஜியண்ணே! :-)

//முடிந்த வரைக்கும் சுருட்டிங்கோ என்று மக்களும் சுனாமியாய் சூறாவளியாய் செயல்பட்டார்கள்.//

நீங்க எதைச் சொல்லுறீங்க, நம்மூருல சுனாமி தாக்கி அடுத்த சில மணி நேரத்திலேயே மரணித்தவர்களின் காது, மூக்கு, கழுத்துன்னு தடவி நகைகளை திருடியதைத்தானே சொல்லுறீங்க. இல்லை, நிவாரணத்திற்கென வந்த பொருட்களுக்கு எக்கச்சக்கமான விலை வைச்சு திருப்பி வித்ததை சொல்லுறீங்களா?

தொட்டில் பழக்கமின்னு ஒண்ணு இருக்கே... அதான் காரணமா இருக்குமோ!!?

//இது போன்ற பல விசயங்களை ஆச்சரியத்துடன் கவனித்த போது ஜப்பான் மக்களின் அடிப்படை மனோபாவம் ஓழுக்கம், நாட்டுப்பற்று எந்த சூழ்நிலையிலும் மாறாதது என்பதை என்பதை உணர்ந்து கொண்டேன்.//

எத்தனை முறைதான் அவர்களும் பாயிண்ட் ஜீரோவிலிருந்து ஆரம்பிப்பாய்ங்க. வாழ்க்கையில சோதனை இருக்கலாம், சோசதனையே வாழ்க்கையா இருக்கலாமா (சிவாஜி டோன்...)? ...ஜப்பானீஸ் பொழப்பு இப்படித்தான் ஆயிப்போச்சு. இப்ப நடந்திருக்கிறதுக்கு, வேற நாடா இருந்தா அடப் போங்கப்பான்னு போட்டுட்டு உட்கார்ந்திருவாய்ங்க...

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Thekkikattan|தெகா said...

வாங்க முத்து,

பதிவுகள் போட்டு பல காலமான மாதிரி இருக்கு. ஜீ, க்கு சொன்னதுக்கு நானும் ஒரு பதில் சொல்லிக்கிறேன். என்ன இருந்தாலும் நம்மாளுங்கள அடிச்சிக்க முடியாது :P

தருமி said...

அணு உலைகளுக்கு மறுப்பு சொல்லியே தாவு தீர்ந்திடுது. ஆனாலும் இன்னும் நம்ம நாட்டில் அது அதுபாட்டுக்கு போய்ட்டு இருக்கு...
:(

Thekkikattan|தெகா said...

தமிழ் உதயம் said...

நிச்சயம் இந்தியா போன்ற தேசங்கள், அணுசக்தியை பயன் படுத்துதல் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.//

வணக்கம். ஆமாம், கண்டிப்பாக செய்தே ஆகவேண்டிய நிலையில் தன்னை உட்படுத்திக் கொள்வது மிக்க அவசியமாகிறது. இது போன்றதொரு நாளில் இத்தனை மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்துவதும், அவர்களை வைத்து மேலாண்மை செய்வது போன்ற திட்டங்கள் அலட்சியம் செய்யப்படாமல் கவனத்தில் நிறுத்துவது அவசியம். இல்லையெனில் விளைவு நம் கற்பனைக்கும் எட்டாததாக அமைந்து போகும்.

நன்றி தமிழ் உதயம்!

வானம் said...

அணு உலைகள் என்பது பல நூறு கோடிகளில் கமிஷன் புழங்கும் வியாபாரம். அதனால் எத்தனை லட்சம் பேர் செத்தாலும் கவலையில்லை என்பதுதான் இந்திய ஆட்சியாளர்களின் கொள்கையாகவே இருக்கும். போன ஆட்சிக்காலத்தில் சொம்புதூக்கி மண்ணுமோகன் குரைத்தது ‘ஆட்சியே போனாலும் பரவாயில்லை,ஆனால் அணு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்’என்று. மக்கள் சொரணைகெட்டத்தனத்திலிருந்து விடுபடும்வரை இந்த ஆபத்து நம்மைவிட்டு விலகப்போவதில்லை.

Anna said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

Kamaraj said...

As usual nice post தெகா!

http://www.cnn.com/interactive/2011/03/world/interactive.nuclear.japan/index.html?hpt=C2

Thekkikattan|தெகா said...

வாங்க சுனில்,

//அதெல்லாம் ஒன்னும் ஆகாது ,எல்லாம் நல்லா தான் இருக்குனு சொல்லிக்கிட்டு இருந்தாங்க//

இதேதான் உலகத்தில இருக்கிற அத்தனை ந்யூக்ளீயார் விஞ்ஞானிகளிலும் சொல்லி வருகிறார்கள். ஆனால், அதற்கு பின்னான நீண்ட நெடிய கோர பற்களை மறைத்துக் கொண்டே தோள்களை குழுக்கி பதிலுரைக்கிறார்கள்... ஆனால், as you said when a real crisis strike again shrugging off their shoulders is only the answer!

http://thavaru.blogspot.com/ said...

வாங்க தெகா...என்னடா இன்னோம் எழுதவில்லையே என்று நினைத்தேன்.

எத்தன நடந்தா என்ன நாங்க வல்லரசு ஆகனுமி்ல்ல...அதுக்கு நாங்க எதுக்கும் தயார்.

கமிசன வெட்டி இங்கஉள்ள அணுஉலையை வெடிக்க செஞ்சாலும் பரவாயில்லேபாங்க நம்மூர் அரசியல்வியாதிகள்.

Thekkikattan|தெகா said...

//இந்தியாவைப் பொறுத்தவரை இரகசியங்கள் என்பது, அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும் தவறுகளையும் மறைப்பதற்காக மட்டுமே பயன்படும் ஒரு ஆயுதம், என்பதற்கு அணு ஆற்றல் துறை எந்த வகையிலும் விதிவிலக்கல்ல.//

கையேடு, ஹைலைட் பண்ணப்பட்ட அந்த கட்டுரையின் பாகமே முழுக் கட்டுரையின் பரிமாணத்தையும், கனத்தையும் சொல்லி நிற்கிறது. வாசித்து விடுகிறேன். முடிந்தால் பஸ்’லும் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!

Thekkikattan|தெகா said...

அண்மைய செய்தி - சைனாவும், இந்தியாவும் 2030க்குள் கட்டவிருந்த அணு உலைகளை எல்லாம் கிடப்பில் போடவிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக 16 பில்லியன் டாலருக்கான வியாபாரம் அமெரிக்காவிற்கு பனால் ஆகியிருக்கிறதாம்.

கையேடு said...

அப்படி ஒன்னும் கைவிட்ட்ட மாதிரி தெரியலையேங்க.. அமெரிக்கா அவ்ளோ சீக்கிரம் விட்டுடுமா என்ன?

http://www.bloomberg.com/news/2011-03-29/china-india-to-add-nuclear-reactors-after-quake-bernstein-says.html

Related Posts with Thumbnails