Sunday, March 20, 2011

ஓநாய் நிலவு, சூப்பர் நிலவு - Wolf & Super Moon Photography

ஏற்கெனவே சில முறை தெக்கி பதிவுகளில் நிலவின் புகைப்படங்கள் தோன்றியிருக்கின்றன.இருப்பினும் இயற்கையில் ஏதாவது அதிசிய நிகழ்வுகள் நிகழ்ந்தே கொண்டே இருப்பதால் அவ்வப்பொழுது அவைகளையும் சுருட்டும் பொழுது நான் அனுபவித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு பிடித்திருக்கிறது.



இங்கு மேலும் இரண்டு புகைப்படங்கள் உங்களுக்காக. ஒன்று கடந்த ஜனவரி மாதம் 2010 ‘ஓநாய் நிலவு (wolf moon)' என்று பெரிதாக இயற்கை புகைப்பட கலைஞர்களால் கொண்டாடப்பட்டு சுட்டுத் தள்ளப்பட்ட நிலவின் புகைப்படம் எனது புகைப்பட பெட்டியின் வழியாக. அந்த இரவு நேரத்தில் வீட்டிலிருந்து எஸ்ஸாகி அருகிலிருந்த ஒரு பெரிய சர்ச் மைதானத்தில் பேயோடு பேயாக நின்று, குளிரில் பற்கள் கிடுகிடுக்க எடுத்த ஜில் நிலவு இதுதான்...



ஏற்கெனவே இந்த பதிவில் சொன்னதைப் போன்று புகைப்படமெடுக்க முழு நிலவு காலம் சரியான தருணம் கிடையாதாம். எனவே ரொம்ப துள்ளியமாக பார்க்கணமின்னா இந்த நிலாவை பாருங்க.

Moon in July Night

அடுத்து நேற்று இரவு எடுத்த சூப்பர் நிலவு. இது 18 வருடங்களுக்கு ஒரு முறைதான் பூமிக்கு மிக அருகே வந்து போகிற நிலவாம். பல முறை பல முகங்களில் படம் எடுத்து தலைக்கேறி இருப்பதால் என்னாத்தை வெளியிலே போயி எடுக்கிறதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். கடைசியாக சோம்பேறித்தனத்தை உதறி, ட்ரைபாட் எதுவுமே இல்லாம முடிஞ்ச அளவிற்கு ஆட்டமில்லாம எடுக்க முனைந்த படம்தான் இது... I would say this is an OK shot :D...


Super Moon 2011

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிலவென்றாலே அழகுன்னு சொல்லுவோம்.. இது இன்னும் அழகு.. எதோ ஆரஞ்சுபழம் மாதிரி இருக்கு..:)

ராமலக்ஷ்மி said...

மூணும் மிக அழகு. அதிலும் இரண்டாவது அதி தெளிவு.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப அழகான நிலவுகள்..

http://thavaru.blogspot.com/ said...

இரண்டாவது சூப்பர் தெகா..

Related Posts with Thumbnails