Friday, December 25, 2015

அகவய நட்பற்ற பெரியாரும், ராஜாஜியும்...

இரண்டு பெரியவர்களோட நட்பு ஒழுகல் பொருட்டு ஓர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கட்டுரை எழுதி வைச்சிருந்தேன். ஆனால், எனக்கு வேண்டிய ஒருவருக்கு அதை அனுப்பி வைச்சு, அந்த கட்டுரையை பதிவேற்றலாமான்னு கேட்டேன். அவர் சொன்னார், அப்படியே கிடப்பில வைச்சிக்கோ, இன்னொரு ஐந்து வருஷம் போகட்டும் அப்பவும் நீ கேட்டுருக்க கேள்விகள் சரியா இருந்தா பதிவேற்றுன்னு.

நான் கேட்ட கேள்வி அதில என்னான்னா, பெரியாரும், ராஜாஜியும் ஒருவர் தட்டில இருந்து இன்னொருத்தர் எடுத்து சாப்பிடுற அளவிற்கு நண்பர்களாக இருந்தும், பெரியார் கடைபிடித்த பிரபஞ்ச பொது விதி ‘மனிதத்தை மதித்தலை’ எதன் பொருட்டு ‘குலக் கல்வியை’ ஆதரித்த ராஜாஜியிடம் அக வயமாக கொண்டு சேர்க்க முடியவில்லை.

இது அரசியல் சார்ந்த ஒரு நிலைப்பாடா அல்லது அகம் சார்ந்த மன மலர்தலில் நடந்த சிக்கலா? அக நக நட்பது நட்பா, அல்லது முக நக நட்பது நட்பா?? 

இதில் என்னாத்தை பெரிசா நட்பு பாராட்டுதலின் பேரில் கடத்தி சென்று சேர்த்திருக்கிறார்கள்?

இரு வேறு துருவங்களில் கருத்தியல், அகவய வேறுபாடுகளை கொண்டவர்களாகினும்... 
அப்போ அந்த இரண்டு பெரிய மனிதர்களுமே தங்களுடைய சகிப்புத் தன்மையின் அடிப்படையில் மட்டுமே நாகரீகம் பொழங்கியவர்களா? 

பெரியாரை பொருட்டு எனக்கு ஒரு வருத்தமுண்டு , இத்தனை பெரிய உண்மையை ராஜாஜியிடமே கூட கடத்தி சென்று அவரை விழிப்படைய வைக்க முடியாத நிலையில் நட்பு பாராட்டி இருக்கிறாரேயென...

3 comments:

ராஜ நடராஜன் said...

செல்பி மாதிரி இருவரும் கறுப்பு வெள்ளை படத்துக்கு போஸ் கொடுத்தது தவிர அக நட்பு இருந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. இதற்கான பதில் தெரிய வேண்டுமென்றால் தேட வேண்டிய ஒரே இடம் கோபாலபுரம். கலைஞரோ தேர்தல் மும்முரத்தில் இருக்கிறார்.

Thekkikattan|தெகா said...

இந்த பொருள் சார் உலகில் எல்லாராலும் பொதுவாக ஏற்று கொள்ளப்பட்ட பொது விதி “being diplomatic and politically correct" பல கான தூரங்களை நல்ல இரவு உறக்கத்துடன் எடுத்து செல்ல உதவும்- என்று கூறி சமன் செய்து விடுகிறார்கள். அதாவது, அரசியல் நிலை எடுப்பது என்பது வேறாம், நட்பு பாராட்டுதல் என்பது வேறாம். என்னவோ போடா மாதவா!! :)

வருண் said...

தெகா: உங்களுக்கு நன்கு பரிச்சயமான திரு ராஜ நடராஜன் மறைந்துவிட்டார். :( அவர் தளம் சென்று பின்னூட்டங்கள் பார்க்கவும்.
இங்கும் வந்து பார்க்கவும்

http://timeforsomelove.blogspot.com/2016/01/blog-post.html

Related Posts with Thumbnails